யாதனபுடி சுலோச்சனா இராணி
யாதனபுடி சுலோச்சனா இராணி (Yaddanapudi Sulochana Rani)(2 ஏப்ரல் 1940 - 18 மே 2018) என்பவர் ஓர் தெலுங்கு மொழி நாவலாசிரியர் ஆவார்.[1] 1970கள் மற்றும் 1980களின் முற்பகுதியில், குறிப்பாக பெண்கள் மத்தியில், இவருக்கு வலுவான ரசிகர் பட்டாளம் இருந்தது.[2] இவரது பல கதைகள் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டன. இவர் இரண்டு முறை நந்தி விருதுகளை வென்றார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
[தொகு]யாதனபுடி சுலோச்சனா இராணி 1940ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி[3] ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள காசாவில் ஒரு தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார்.[4] இவருக்கு சிறு வயதிலிருந்தே இலக்கியத்தின் மீது வலுவான நாட்டம் இருந்தது. இவர் 80க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார்.[4]
இறப்பு
[தொகு]யாதனபுடி தனது மகளைப் பார்க்கச் சென்றபோது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மே 18, 2018 அன்று இறந்தார். அப்போதைய தெலங்காணா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மற்றும் ஆந்திரப் பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.[4][5]
திரைப்படங்களாக உருவாக்கப்பட்ட நாவல்கள்
[தொகு]| வ. எண் | நாவல் | திரைப்படம் |
|---|---|---|
| 1 | மீனா | மீனா (1973) 'அ ஆ (2016)[6] |
| 2 | ஜீவனா தாரங்கலு | ஜீவனா தாரங்கலு |
| 3 | (தெரியவில்லை) | அம்மா நானா |
| 4 | செகரட்டரி | செகரட்டரி |
| 5 | இராதா கிருஷ்ணா | இராதா கிருஷ்ணா |
| 6 | அக்னி பூலு | அக்னி பூலு |
| 7 | பிரேம லேகலு | பிரேம லேகலு |
| 8 | பங்காரு கலலு | பங்காரு கலலு |
| 9 | விஜேதா | விசித்ரா பந்தம் |
| 10 | ஜெய் ஜவான் | ஜெய் ஜவான் |
| 11 | ஆத்ம கவுரவம் | ஆத்ம கவுரவம் |
| 12 | பிரேமா தீபிகா | காஞ்சனா கங்கா |
| 13 | கிரிஜா கல்யாணம் | கிரிஜா கல்யாணம் |
| 14 | ஆத்மியுலு | ஆத்மியுலு |
| 15 | மதுர சுவப்னம் | மதுர சுவப்னம் |
| 16 | மொகாலி ரெகுலு | மொகாலி ரெகுலு |
| 17 | சண்டிப்ரியா | சண்டிப்ரியா |
பிற நாவல்கள்
[தொகு]- கீர்த்தி கீரிதாலு
- ஆகமனா
- ஆராதனா
- ஆத்மியுலு
- அபிஜாதா
- அபிசாபம்
- ஆஹுதி
- அமர ஹிருதயம்
- அமிர்த தாரா
- ஆனந்த சமேதா
- அனுராகா கங்கா
- அனுராக தோரணம்
- அர்த்த ஸ்திதா
- ஆஷால சிகராலு
- அவ்யக்தம்
- பஹுமதி
- பந்தீ
- சீக்கட்டிலோ சிறு தீபம்
- தாம்பத்ய வனம்
- ஈ தேசம் மாகேமிச்சிந்தி
- ஈ ஜீவிதம் நாடி
- ஈ தாரம் கதா
- கிரிஜா கல்யாணம்
- கிருதய கானம்
- ஜாஹ்னவி
- ஜலபதம்
- ஜீவனா கீதம்
- ஜீவனா தரங்கலு-1
- ஜீவனா தரங்கலு-2
- ஜீவனா சத்யலு
- ஜீவன சௌரபம்
- ஜோதி
- கலால கூகிலி
- கிருஷ்ண லோஹிதா
- மதுர ஸ்வப்னம்
- மீனா (அ ஆ)
- மீனா 2 (அ ஆ)
- மோகிதா
- மனோபிராமா
- மதுரமினா ஓடாமி
- மௌன பாஷ்யம்
- மௌன போராட்டம்
- நாம சந்திரிகலு
- நீரஜனம்
- நேனு ராசயித்ரினி கானு
- நிசாந்தா
- ஒன்டாரி நட்சத்திரம் 1
- ஒன்டாரி நட்சத்திரம் 2
- பார்த்து
- பிரேமா தீபிகா
- பிரேம பீடம்
- பிரேம சிமமாசனம்
- பிரியா சகி
- சகஜீவனம்
- சம்சார ரதம்
- சம்யுக்தா
- சீதாபதி
- சிநேகமாயி
- சௌகந்தி
- சுவேதா குலாபி
- சுரவண சமீரலு
- வெண்ணெல்லோ மல்லிகா
- விஜேதா
- வெமலு
விருதுகள்
[தொகு]- சிறந்த கதை எழுத்தாளர் - ஆத்ம கவுரவம் (1965)
- இரண்டாவது சிறந்த கதை எழுத்தாளர் - காஞ்சனா கங்கா (1984)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mrinalini (21 May 2018). "యద్దనపూడి సులోచనా రాణి: 'హీరో'ల సృష్టికర్త" (in te). BBC News తెలుగు. https://www.bbc.com/telugu/india-44198123.
- ↑ Nadadhur (2018-05-22). "Yaddanapudi Sulochana Rani : A star in her own right". The Hindu. https://www.thehindu.com/news/national/telangana/yaddanapudi-sulochana-rani-a-star-in-her-own-right/article23957626.ece.
- ↑ Kaura, Ajīta; Caur, Arpana (1976). Directory of Indian Women Today, 1976 (in ஆங்கிலம்). India International Publications.
- ↑ 4.0 4.1 4.2 "రచయిత్రి యద్దనపూడి సులోచనారాణి కన్నుమూత (Writer Yaddanapudi passed away)". Sakshi Education. Sakshi. Retrieved 23 May 2020.
- ↑ "Popular Telugu novelist Yaddanapudi Sulochana Rani passes away at 78". The News Minute. 2018-05-21.
- ↑ "A.. Aa.. Movie review: Trivikram is back with a bang". 2 June 2016.
- ↑ "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Andhra Pradesh (magazine). Retrieved 21 August 2020.(in Telugu)