யாச்சுமவு

ஆள்கூறுகள்: 26°28′N 80°21′E / 26.46°N 80.35°E / 26.46; 80.35
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாச்சுமா
யாச்சுமவு
துணை பெருநகரம்
அடைபெயர்(கள்): கான்பூரின் தோல் நகரம்
யாச்சுமா is located in உத்தரப் பிரதேசம்
யாச்சுமா
யாச்சுமா
உத்தரபிரதேசத்தில் யாச்சுமாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°28′N 80°21′E / 26.46°N 80.35°E / 26.46; 80.35
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்கான்பூர் மாவட்டம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்652,831 மற்றும் 1,600,000 (2,050இல் தோராயாமாக)[1]
மொழிகள்
 • அலுவல்இந்தி, ஆங்கிலம், உருது, போச்புரி, மலையாளம், பஞ்சாபி & கனாவுஜி (முக்கியமாக)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்208 XXX
வாகனப் பதிவுஉபி-78
கல்வியறிவு80%%
மக்களவைத் தொகுதிகான்பூர், அக்பர்பூர், உன்னாவு
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிகான்பூர் பாளையம் சட்டமன்றத் தொகுதி, மகாராஜ்பூர், உன்னாவு

யாச்சுமா (Jajmau) யாச்சுமவு என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் கான்பூரின் புறநகர்ப் பகுதியாகும். இது கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது . இது ஒரு தொழில்துறை புறநகராக இருக்கிறது . 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இது சுமார் 652,831 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இது இப்பகுதியில் பழங்குடி மக்கள் வசிக்கும் இடம் என்று நம்பப்படுகிறது. தோல் தொழில் இதன் முக்கிய தொழிலாகும். இங்கு வட இந்தியாவின் மிகப் பெரிய தோல் பதனிடும் ஆலையைக் கொண்டுள்ளது. இந்திய இந்தியத் தொல்ல்லியல் ஆய்வு மையம் இங்கு நடத்திய அகழ்வாராய்ச்சிகள் இது கி.பி. 1300 - கி.மு 1200இல் வைக்கிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட மண் மட்பாண்டங்கள், கருவிகள் மற்றும் பல்வேறு வரலாற்று கலைப்பொருட்கள் தற்போது கான்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி கான்பூர் பெருநகரப் பகுதியின் அதிகார எல்லைக்குள் வருகிறது.

தாவரங்களும் விலங்கினங்களும்[தொகு]

இந்த நகரில் மா, ஆரஞ்சு, கொய்யா, வாழை உள்ளிட்ட பல மரங்கள் உள்ளன. அவை முக்கியமாக நகரின் புறநகரில் தாகூர் அவேவில் காணப்படுகின்றன. கான்பூர் உயிரியல் பூங்கா ஊரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மிருகக்காட்சிசாலை பல்வேறு வகையான விலங்குகளை கொண்டுள்ளது

யாச்சுமாவின் தொல்பொருள் தளம் கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு பெரிய மேடு ஆகும். இது யாச்சுமவு கா திலா என்றும் அழைக்கப்படுகிறது . [2] இந்த மேட்டின் மேற்பரப்பு வைப்புகளிலிருந்து செம்பு கலைப்பொருட்களும், சாம்பல் வண்ண ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 1956 ஆம் ஆண்டில், தேசிய நெடுஞ்சாலை போடப்பட்ட நேரத்தில், ஒரு பழங்கால குடியேற்றத்தின் எச்சங்கள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டன. அகழ்வாராய்ச்சிகள் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் மற்றும் உத்தரபிரதேச மாநில தொல்லியல் துறை 1956-58 மற்றும் 1973-78 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. 1977-78ல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, பிராமி எழுத்துமுறையில் பொறிக்கப்பட்ட மட்பாண்டப் பொருட்களுடன் ஒரு தந்த முத்திரையும் கண்டுபிடிக்கப்பட்டது. கிரிஷ் சந்திர சிங் என்ற வரலாற்றாசிரியர், இந்தப் பொருட்கள் சந்திரகுப்த மௌரியரின் ஒரு பட்டப் பெயர் என்று கூறினார். [3]

சகோதர நகரங்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Can we save Ganga?". indiaenvironmentportal.org. பார்க்கப்பட்ட நாள் 7 February 2019.
  2. "Enter the Kushan period via Jajmau". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 September 2009 இம் மூலத்தில் இருந்து 11 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811061853/http://articles.timesofindia.indiatimes.com/2009-09-17/kanpur/28109321_1_excavation-mauryan-period-bricks. பார்த்த நாள்: 5 May 2010. 
  3. "Artefacts of pre-Muaryan times discovered at Jajmau". 21 March 2010. http://www.dnaindia.com/scitech/report_artefacts-of-pre-muaryan-times-discovered-at-jajmau_1361609. பார்த்த நாள்: 5 May 2010. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாச்சுமவு&oldid=3591355" இலிருந்து மீள்விக்கப்பட்டது