உள்ளடக்கத்துக்குச் செல்

யாசு தீவு

ஆள்கூறுகள்: 24°30′N 54°36′E / 24.500°N 54.600°E / 24.500; 54.600
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாசு தீவு
யாசு தீவு பகுதி ஒன்றின் இரவு நேரத் தோற்றம்

யாசு தீவு (அரபு மொழி: جزيرة ياس‎), ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள ஒரு தீவு ஆகும். 2,500 எக்டேயர்கள் பரப்பளவு கொண்ட இத் தீவில் 1,700 எக்டேயர்களில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பார்முலா ஒன்று அபுதாபி கிரான்ட் பிரிக்சு எனப்படும் மோட்டாருந்துப் பந்தயங்களுக்கான நிகழிடம் யாசுத் தீவுச் சுற்று இத் தீவிலேயே அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டிலிருந்து இங்கு இப் போட்டிகள் நிகழத் தொடங்கி யுள்ளன. இதை விட, திரைப்படக் கருப்பொருள்சார் பூங்காவான "வார்னர் சகோதரர் திரைப்பட உலகம்", "பெராரி கருப்பொருள்சார் பூங்கா", யாசு மரீனா விடுதி உள்ளிட்ட பல விடுதிகள், வீடுகள், தொடர் மாடி வீடுகள், யாசு அங்காடி, பல வகையான உணவுச் சாலைகள், கோல்ஃப் விளையாட்டுத்திடல் போன்ற பல திட்டங்கள் உருவாகி வருகின்றன. ஒரு சுற்றுல மையமாக உருவாக்கப்பட்டுவரும் இதை, உலகின் முன்னணிச் சுற்றுலாத்துறைத் திட்டமாக 2009 நவம்பரில் இடம்பெற்ற "உலகப் பயண விருதுகள்" நிகழ்வின்போது அறிவிக்கப்பட்டது.[1] எதிர்காலத்தில் இத் தீவில் வாழ்பவர்களையும், பணிபுரிபவர்களையும் சேர்த்து 110,000 இருப்பார்கள் என மதிப்பிட்டுள்ளனர்.

குறிப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Yas Marina Circuit
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. [1] Arabian Business Retrieved on 15th November 2009

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாசு_தீவு&oldid=3770679" இலிருந்து மீள்விக்கப்பட்டது