யாசின் பாத்கால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யாசின் பாத்கால் (Yasin Bhatkal) என்று இந்திய உளவுத் துறை அமைப்புகளால் அழைக்கப்படும் முகம்மது அஹ்மத் சிதிபபா இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதக் குழுவைச் சார்ந்தவர். இவர் இந்தியாவில் தேடப்பட்டுவரும் குற்றவாளிகளுள் முக்கியமானவர். இவர் இந்திய நேபாள எல்லையில் பீகார் மாநிலத்தின் மோதிகாரி எனும் இடத்தில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.[1] இவர் தீவிரவாதச் செயல்களைச் செய்வதற்காக பாகிஸ்தானில் பயிற்சி எடுத்தவர்.[2]

இளமை வாழ்க்கை[தொகு]

முகம்மது அஹ்மத் சிதிபபா 1983 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பிறந்தவர். இவர் 10 வகுப்பு வரை படித்தவர். பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதாமல் துபாய் நகருக்குச் சென்றார். அவரது குடுப்பத்தினரின் தகவலின் படி இவர் 2007 ஆம் ஆண்டு துபாயிலிருந்து காணமல் போய்விட்டார்.[3] சில வருடங்களுக்குப் பின் ஷாகிதா எனும் பெண்ணை மணந்து கொண்டு டெல்லியில் வசித்து வந்தார். அந்தப் பெண்ணிடம் தனது பெயரை இம்ரான் என்றும் லக்னோவைச் சேர்ந்தவர் என்றும் கூறியிருந்தார்.[4]

குற்றச் செயல்கள்[தொகு]

  • பெங்களூரு விளையாட்டு மைதானக் குண்டு வெடிப்பு, 2010
  • புனே குண்டு வெடிப்பு[5]

கைது நடவடிக்கை[தொகு]

இவர் தற்போது பீகார் காவல்துறையினரின் கட்டுப் பாட்டில் உள்ளார். இவர் இந்திய நேபாள எல்லையில் பீகார் மாநிலத்தின் மோதிகாரி எனும் இடத்தில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். [6]

பாகிஸ்தானில் தீவிரவாதப் பயிற்சி[தொகு]

யாசின் பாத்கால் 2006 ஆம் ஆண்டு தீவிரவாதப் பயிற்சி பெறுவதற்காக பாகிஸ்தானுக்குச் சென்றார். முறையான குடி நுழைவுச் சீட்டு இல்லாமல் பாகிஸ்தானுக்குச் சென்ரார். பின்னர் கராச்சியிலிருந்து பலூசிஸ்தான் நகருக்குச் சென்று பாகிஸ்தான் ராணுவத்திடம் ஆயுதப் பயிற்சி பெற்றார். 50 நாட்கள் பயிற்சிக்குப் பின்னர் துபாய் சென்று மீட்டும் இந்தியாவிற்கு வந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாசின்_பாத்கால்&oldid=3226161" இருந்து மீள்விக்கப்பட்டது