உள்ளடக்கத்துக்குச் செல்

யாங் ஷுவாங்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாங் ஷுவாங்சி
楊双子
2024 இல் யாங் ஷுவாங்சி
பிறப்புசூலை 10, 1984 (1984-07-10) (அகவை 41)
தைச்சுங், தைவான்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தைவான் பயணநூல்
விருதுகள்தங்க முக்காலி விருது (2020)
சிறந்த மொழிபெயர்ப்பு விருது (2024)
மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கான தேசிய புத்தக விருது (2024)
பன்னாட்டு புக்கர் பரிசு (2026)
Chinese name
பண்டைய சீனம்
நவீன சீனம் 杨双子

யாங் ஷுவாங்-ஸி (Yang Shuang-zi, பிறப்பு 1984) என்பவர் ஒரு தைவானிய பெண் எழுத்தாளர். இவரது புதினமான தைவான் பயணநூல் லின் கிங் என்பவரால் மாண்டரின் சீன மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது. இது 2024 இல் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியத்திற்கான அமெரிக்க தேசிய புத்தக விருதையும், [1] சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியத்திற்கான பைஃபாங் ஷெல் புத்தகப் பரிசையும் பெற்றது. [2] மேலும் 2026 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு புக்கர் பரிசைப் பெற்றது.[3][4]

பெயர்

[தொகு]

யாங்கின் "ஷுவாங்-ஸி" என்ற பெயர் "இரட்டையர்கள்" என்று பொருள்படும் ஒரு புனைபெயராகும். யாங் ஜோ-ட்சு (杨若慈;楊若慈; ) என்று பெயரிடப்பட்ட யாங், பெரும்பாலும் இலக்கியம் படைப்பதில் ஆர்வம் கொண்டு வளர்ந்தார். அதேசமயம் இவரது இரட்டை சகோதரியான யாங் ஜோ-ஹுய் (杨若晖;楊若暉; ), வரலாற்று ஆராய்ச்சி மற்றும் மொழிபெயர்ப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். யாங் ஜோ-ஹுய் 2015 இல் புற்றுநோயால் இறந்தார். அதன் பிறகு யாங் ஜோ-ட்சு தன் இரட்டை சகோதரியைக் கௌரவிப்பதற்காக "ஷுவாங்-ஸி" என்ற பெயரைத் தனக்குத்தானே சூட்டிக்கொண்டார். இவ்விரு சகோதரிகளும் பல இலக்கிய மற்றும் கலை சார்ந்த முயற்சிகளைப் பகிர்ந்து கொண்டார். [5] யாங் ஜோ-ஹுய்யின் ஜப்பானிய வரலாற்றில் உள்ள ஆர்வத்தை அங்கீகரிக்கும் விதமாக, "ஷுவாங்-ஸி" என்ற பெயர் மரபுசார் சீன எழுத்துக்களுக்குப் பதிலாக, காஞ்சி எழுத்துக்களில் எழுதப்படுகிறது. [6]

துவக்ககால வாழ்க்கையும் மற்றும் கல்வியும்

[தொகு]

யாங் தைச்சுங்கில் பிறந்து, ஒரு கிராமப்புறத்தில் வளர்ந்தார். சிறுவயதிலும் இளமைப் பருவத்திலும் இவர் தன்னை சீனக் குடியரசு சார்ந்தவராகவே அடையாளப்படுத்திக் கொண்டார். இருப்பினும், தேசிய சுங் சிங் பல்கலைக்கழகத்தில் சீன இலக்கியத்தில் பட்டம் பெற்ற சிறிது காலத்திலேயே, சீன அரசியல்வாதி சென் யுன்லினின் 2008 தைவான் பயணத்திற்கு எதிரான போராட்டமான ' காட்டு ஸ்ட்ராபெர்ரி இயக்கம்' என்னும் போராட்டத்தில் கலந்துகொண்டார். அந்த ஆர்ப்பாட்டங்களின் போது, சீனக் குடியரசு கொடியைக் ஏந்திப் பிடித்ததை காவல்துறை தடுத்தது. இச்செயலை யாங் பின்னர் கேள்விக்குள்ளாக்கினார்: "இச்செயல் நாம் இயல்பாகவே செய்யக்கூடிய ஒன்றுதானே? இதைச் செய்ய ஏன் நமக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பதே எனக்குப் புரியவில்லை. நான் வளர்ந்த இந்த மண்ணைப் பற்றி நான் ஏன் இவ்வளவு அந்நியமாக உணர்கிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்ள இது தூண்டியது." இப்போராட்டமே யாங்கைத் தைவானிய இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெறத் தூண்டியது. அப்படிப்பை இவர் 2012இல் நிறைவு செய்தார். தனது முதுகலை ஆய்வுக் காலத்தின் போது, ​​யாங் தன்னை முழுமையாக ஒரு 'தைவானியராகவே' அடையாளப்படுத்திக்கொள்ளத் தொடங்கினார். 2014 ஆம் ஆண்டின் சூரியகாந்தி மாணவர் இயக்கம் "தைவான் சீனத்திடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது என்பதை எனக்கு உணர்த்தியது" என்றும், "என்னால் மட்டுமே காணக்கூடிய ஒரு கண்ணோட்டத்திலிருந்து தைவானுக்காக எதையாவது எழுத வேண்டும்" என்று தன்னை அது தூண்டியதாகவும் யாங் பின்னர் குறிப்பிட்டார். [7] [8]

தொழில்

[தொகு]

2020 ஆம் ஆண்டில், யாங் தனது தைவான் பயணநூல் என்னும் எனும் நூலை, முதலில் மாண்டரின் சீன மொழியில், ஸ்பிரிங்கில் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டார். இந்நூல் 2021 இல் தங்க முக்காலி விருதை பெற்றது. பின்னர், இந்த புத்தகம் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு சுவோகோரோன்-ஷின்ஷாவால் வெளியிடப்பட்டது. ஜப்பானிய மொழிபெயர்ப்பு 2024 இல் ஜப்பானின் சிறந்த மொழிபெயர்ப்பு விருதை பெற்றது. [9] அதே ஆண்டில், கிரேவுல்ஃப் பிரஸ் வெளியிட்ட தைவான் பயணநூலின் ஆங்கிலப் பதிப்பில், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராக இணைந்து ஆற்றிய பங்களிப்பிற்காக, யாங் மற்றும் கிங் ஆகியோர், மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கான தேசிய புத்தக விருதை பெற்றனர். [1] அடுத்த ஆண்டு, தைவான் பயணநூல் சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த இலக்கியத்திற்கான சீனா புக்ஸ் ரிவியூ விருதை பெற்றது.

தைவான் பயணநூல், 1938 ஆம் ஆண்டில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது ஒரு ஆண்டுக்குப் பிறகு தைவானுக்கு பயணம் மேற்கொள்ளும் ஜப்பானிய எழுத்தாளரான அயோயாமா சிசுருவைப் பின்தொடர்கிறது. மேலும் அவர் தன் தைவானிய மொழிபெயர்ப்பாளருடன் மெல்ல காதல் கொள்ளத் தொடங்குகிறார். ஒவ்வொரு அத்தியாயமும் அவர் உண்ணும் வெவ்வேறு உணவுகளை மையமாகக் கொண்டுள்ளது. கிர்கஸ் ரிவியூஸ் இதை, "ஜப்பானிய தெற்கு விரிவாக்கக் கொள்கையின் நிழலில் நட்பைப் பற்றிய ஒரு நெகிழ்ச்சியான பதிவு" என்று அழைத்தது; பப்ளிஷர்ஸ் வீக்லி "யாங் தைவானிய சுவையான உணவுகளின் மனதைக் கவரும் சித்தரிப்புகளுடன், காலனித்துவம் மற்றும் மொழிபெயர்ப்பு குறித்த ஆழமான சிந்தனைகளையும் வழங்குகிறார்" என்று குறிப்பிட்டது. [10] [11]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

யாங், லை டிங்-ஹோ என்பவரை மணந்துள்ளார். [12] [13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Mulroy, Clare. "Percival Everett's 'James' wins the National Book Award for fiction: See all winners". USA TODAY (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-11-21.
  2. "Announcing the 2024 Winners". China Books Review (in அமெரிக்க ஆங்கிலம்). 13 May 2025. Retrieved 2025-07-08.
  3. "The International Booker Prize 2026". thebookerprizes.com (in ஆங்கிலம்). Retrieved 19 May 2026.
  4. Marshall, Alex (19 May 2026). "International Booker Prize 2026: ‘Taiwan Travelogue’ is First Winner Originally Written in Mandarin". The New York Times. https://www.nytimes.com/2026/05/19/books/international-booker-prize-taiwan-travelogue.html.
  5. "'Taiwan Travelogue' wins U.S. National Book Award for Translated Literature" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-11-21. Archived from the original on 2024-11-21. Retrieved 2024-11-21.
  6. 陳又津 (3 April 2017). "【鏡相人間】雙子之愛". Mirror Media. Archived from the original on 2020-04-28. Retrieved 2017-04-03.
  7. Chiu, Tsu-yin; Chao, Yen-hsiang (29 November 2024). "INTERVIEW/In-between: 'Taiwan Travelogue' author Yang Shuang-zi speaks up for motherland". Central News Agency. https://focustaiwan.tw/culture/202411290006.
  8. "Writer | Yang Shuang-zi". Ministry of Culture. https://www.moc.gov.tw/en/News_Content2.aspx?n=491&s=181793.
  9. "Taiwanese work receives Japan's best translation award". Taipei Times. 2024-05-21. Archived from the original on 2024-08-28. Retrieved 2024-11-21.
  10. TAIWAN TRAVELOGUE | Kirkus Reviews (in ஆங்கிலம்). Archived from the original on 2025-01-02. Retrieved 2024-11-21.
  11. "Taiwan Travelogue by Shuang-Zi Yang". www.publishersweekly.com. Retrieved 2024-11-21.
  12. "Executive Yuan honors 'Taiwan Travelogue' writer". Formosa Television. 16 December 2024 இம் மூலத்தில் இருந்து 22 January 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250122031100/https://english.ftvnews.com.tw/news/2024C16W08EA. Video
  13. "Woman sanctioned after attacking author's wife during recall campaign". 12 July 2025. https://focustaiwan.tw/society/202507120010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாங்_ஷுவாங்சி&oldid=4547965" இலிருந்து மீள்விக்கப்பட்டது