உள்ளடக்கத்துக்குச் செல்

யாக்யா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெனரல்
யாக்யா கான்
یحییٰ خان
3வது குடியரசுத் தலைவர்
முதன்மை படைத்துறை நிர்வாகி
பதவியில்
25 மார்ச் 1969 – 20 திசம்பர் 1971
பிரதமர்நூருல் அமின் (1971)
முன்னையவர்அயூப் கான்
பின்னவர்சுல்பிக்கார் அலி பூட்டோ
5வது பாக்கித்தானிய தலைமை படைத் தலைவர்
பதவியில்
18 சூன் 1966 – 20 திசம்பர் 1971
Deputyஜென். அப்துல் அமீத் கான்
முன்னையவர்ஜென். மூசா கான்
பின்னவர்லெப்.ஜென். குல் ஆசன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஆகா முகமது யாஃக்யா கான்

(1917-02-04)4 பெப்ரவரி 1917
சக்வால், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு10 ஆகத்து 1980(1980-08-10) (அகவை 63)
இராவல்பிண்டி, பஞ்சாப் (பாக்கிஸ்தான்)
தேசியம்பிரித்தானிய இந்தியர் (1917–1947)
பாக்கித்தானியர் (1947–1980)
அரசியல் கட்சிஇல்லை (இராணுவ ஆட்சி)
துணை(கள்)அக்லீம் அக்தர் (1967–1972)
நூர்ஜஹான் (பாடகி மற்றும் நடிகை) (1971)
கல்விColonel Brown Cambridge School, தேராதூன்
முன்னாள் கல்லூரி
குடிமை விருதுகள்
Military service
கிளை/சேவை
சேவை ஆண்டுகள்1938–1971
தரம் ஜெனரல்
அலகு4வது பட்டாலியன், 10வது பலூச் படையணி (சேவை எண் PA–98)
கட்டளை
C-in-C, பாக்கித்தான் படை
படைத்துறை விருதுகள் Hilal-e-Jurat (withdrawn)

ஆகா முகமது யாஃக்யா கான் (Agha Muhammad Yahya Khan, உருது: آغا محمد یحییٰ خان‎; 4 பிப்ரவரி 1917 – 10 ஆகத்து 1980), பரவலாக யாக்யா கான், 25 மார்ச் 1969 முதல் திசம்பர் 1971இல் தனது பணித்துறப்பு வரை மூன்றாவது பாக்கித்தான் குடியரசுத் தலைவராக பொறுப்பாற்றிய பாக்கித்தானிய படைத்துறை தலைவர்.[1][2][3]

பெரிய பிரித்தானியாவின் பிரித்தானிய இந்தியப் படையின் சார்பில் இரண்டாம் உலகப் போரின் நிலநடுக்கடல் அரங்கில் பங்கெடுத்தார். பின்னர் யாக்யா கான் 1947இல் ஐக்கிய இராச்சியம் இந்தியாவைப் பிரித்தபோது பாக்கித்தான் குடியுரிமைக்கு விருப்பம் தெரிவித்து பாக்கித்தானியப் படையில் சேர்ந்தார். 1965 இந்தியாவுடனான போருக்குகாரணமான இந்தியக் காசுமீரில் மறைமுகமாக உட்புகும் கிராண்டு இசுலாம் நடவடிக்கையில் உதவி புரிந்தார்.[4] 1966இல் பாக்கித்தானியப் படையின் தலைமை படைத்தலைவராக பல சர்ச்சைகளுக்கிடையே நியமிக்கப்பட்டார். முன்னாள் சர்வாதிகாரியும் தேர்வுபெற்ற குடியரசுத் தலைவருமான அயூப் கான் 1969 கிழக்குப் பாக்கித்தானில் எழுந்த போராட்டங்களால் மக்களாதரவு மங்கிய நிலையில் குடியரசுத் தலைவராக இவரிடம் பொறுப்பை ஒப்படைத்து பணி ஓய்வு கொண்டார். யாக்யா கான் பின்னர் படைத்துறை சட்டத்தை செயலாக்கி அரசியலமைப்புச் சட்டத்தை முடக்கினார். நாட்டின் முதல் பொதுத் தேர்தலை 1970இல் நடத்தினார். ஆனால் வெற்றி பெற்ற கிழக்குப் பாக்கித்தானின் சேக் முஜிபுர் ரகுமானுக்கு அதிகாரத்தை மாற்றுவதை தாமதித்தார். தொடர்ந்து கிழக்கில் எழுந்த வன்முறைப் போராட்டங்களை அடக்க கிழக்கு பாக்கித்தான் ஆளுநருக்கு தேடொளி நடவடிக்கை (ஆபரேஷன் சர்ச்லைட்) முன்னெடுக்க அனுமதி வழங்கினார். இது புரட்சி வெடிக்க காரணமாயிற்று. ஏறத்தாழ 10 மில்லியன் பேர் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி இடம் பெயர்ந்தனர். தனி ஆய்வாளர்களின் கூற்றுப்படி 1971 வங்காளதேச இனப்படுகொலை எனப்படும் நிகழ்வில் 300,000 முதல் 500,000 வரை மக்கள் கொலையுண்டனர்.[5][6]

பாக்கித்தானிற்கு வங்காளதேச விடுதலைப் போரில் பெரும் தோல்வி ஏற்பட்டது. பாக்கித்தானின் கிழக்கு படைப் பிரிவு கலைக்கப்பட்டது. கிழக்கு பாக்கித்தான் பிரிந்து வங்காளதேசம் என்ற நாடாக உருவானது. யாக்யா கானின் ஆட்சியே பாக்கித்தான் பிளவுபட முதன்மை காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.[7][8] இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து மேற்கு பாக்கித்தானின் முதன்மை அரசியல்வாதியாக விளங்கிய சுல்பிக்கார் அலி பூட்டோவிடம் ஆட்சியை ஒப்படைத்து பாக்கித்தானியப் படையின் தலைமை படைத்தளபதி பொறுப்பையும் துறந்தார். இரண்டு பொறுப்புகளையும் ஒரே நாளில், 20 திசம்பர் 1971இல் துறந்தார்.[1] யாக்யா கானின் அனைத்து இராணுவ சிறப்புகளும் பறிக்கப்பட்டு 1970களின் பெரும்பாலும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.[1][3] பாக்கித்தானிய வரலாற்றில் எதிர்மறையான நோக்குடனே பார்க்கப்படுகிறார்; நாட்டின் தலைவர்களிலேயே மிகவும் குறைந்தளவில் வெற்றி கண்டவராக கருதப்படுகிறார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Yahya Khan: president of Pakistan on Encyclopedia Britannica Retrieved 22 July 2020
  2. Bose, Sarmila (8 October 2005). "Anatomy of Violence: Analysis of Civil War in East Pakistan in 1971". Economic and Political Weekly. http://www.epw.org.in/showArticles.php?root=2005&leaf=10&filename=9223&filetype=html. பார்த்த நாள்: 17 July 2020. 
  3. 3.0 3.1 3.2 Ahmed, Munir (2001). "خان کی کہانی ان کے بیٹے علی یحٰیی کی زبانی". جنرل محمد یحٰیی خان: شخصیت و سیاسی کردار (in உருது). Lahore, Pakistan: آصف جاوید برائے نگارشات پبلشرز. p. 240.
  4. Shaikh Aziz (25 December 2011). "A chapter from history: Yahya Khan's quick action". Dawn (Pakistan). https://www.dawn.com/news/683072/a-chapter-from-history-yahya-khans-quick-action. 
  5. Mark Dummett (16 December 2011). "Bangladesh war: The article that changed history". BBC News. https://www.bbc.com/news/world-asia-16207201. 
  6. Ian Jack (21 May 2011). "It's not the arithmetic of genocide that's important. It's that we pay attention". The Guardian. https://www.theguardian.com/commentisfree/2011/may/21/ian-jack-bangladesh-war-genocide. 
  7. Shah, Mehtab Ali (1997). The Foreign Policy of Pakistan: Ethnic Impacts on Diplomacy 1971–1994 (in ஆங்கிலம்). I.B.Tauris. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86064-169-5.
  8. Raghavan, Srinath (2013). 1971: The Global History of Creation of the Bangladesh (in ஆங்கிலம்). Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674731271.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
யாக்யா கான்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாக்யா_கான்&oldid=3926367" இலிருந்து மீள்விக்கப்பட்டது