யாக்கூப் அசன் சேத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெளலானா யாக்கூப் அசன் சேத் (Yakub Hasan Sait, 1875 – 1940) ஒரு தமிழக தொழிலதிபர், அரசியல்வாதி மற்றும் விடுதலைப் போராட்ட வீரர். சென்னை மாகாணத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1875ல் நாக்பூரில் பிறந்த யாக்கூப் அசன் சேத், அலிகார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். 1893ல் பெங்களூரில் வர்த்தகராகத் தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். 1916ம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு தென்னிந்திய வர்த்தக சபையின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை நகர் மன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். அகில இந்திய முஸ்லிம் லீகினை உருவாக்கியவர்களுள் சேத்தும் ஒருவர். கிலாபத் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றில் பங்கு கொண்டு சிறை சென்றார். ஆனால் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்கவில்லை. 1937 தேர்தலுக்கு சிறிது காலம் முன்னர் முசுலிம் லீகை விட்டு வெளியேறி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். முசுலிம் லீகின் இரு-தேசக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததே இதற்குக் காரணம். 1937-39 காலகட்டத்தில் சி. ராஜகோபாலாச்சாரியின் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1940ல் மரணமடைந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாக்கூப்_அசன்_சேத்&oldid=3491061" இலிருந்து மீள்விக்கப்பட்டது