யாக்கோவ் போரிசொவிச் செல்தோவிச்
யாக்கோவ் செல்தோவிச் Yakov Zeldovich | |
---|---|
![]() உருசிய அஞ்சல் தலையில் செல்தோவிச் | |
இயற்பெயர் | Яков Зельдович |
பிறப்பு | யோக்கோவ் பரீசொவிச் செல்தோவிச் 8 மார்ச்சு 1914 மின்ஸ்க், உருசியப் பேரரசு (இன்றைய பெலருசு) |
இறப்பு | 2 திசம்பர் 1987 மாஸ்கோ, உருசியா, சோவியத் ஒன்றியம் | (அகவை 73)
அடக்கத் தலம் | மாசுக்கோ |
குடியுரிமை | சோவியத் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | வேதியியற்பியல் கல்விக்கழகம், மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம், இசுட்டேர்ன்பேர்க் வானியல் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | சென் பீட்டர்சுபெர்கு அரசுப் பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | நைதரசன் ஒடுக்க-ஏற்ற வேதிவினைக் கோட்பாடு (1939) |
ஆய்வு நெறியாளர் | அலெக்சாந்தர் புரூம்கின் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | இரசீத் சூன்யாயெவ், ஈகர் நோவிக்கோவ், அலெக்சிய் சுதாரோபின்சுகி |
அறியப்படுவது | சோவியத் அணுகுண்டுத் திட்டம், செல்டோவிச் இயங்கமைப்பு, அணுக்கருத் தொடர்வினைகள் கோட்பாடு, வானியற்பியலும் அண்டவியலும் |
விருதுகள் | பிரீடுமன் பரிசு (2002) திராக் பதக்கம் (1985) அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1983) புரூசு பதக்கம் (1983) குர்ச்டோவ் விருது (1977) லெனின் பரிசு (1957) |
யாக்கோவ் போரிசொவிச் செல்தோவிச் (Yakov Borisovich Zeldovich, ForMemRS[1] (உருசியம்: Я́ков Бори́сович Зельдо́вич, பெலருசிய மொழி: Я́каў Бары́савіч Зяльдо́віч, romanized: யாக்கவ் பரீசவிச் செல்தோவிச்; 8 மார்ச் 1914 – 2 திசம்பர் 1987)[2]) என்பவர் பெலருசில் பிறந்த புகழ்பெற்ற சோவியத் இயற்பியலறிஞர் ஆவார். இவர் இயற்பியல் அண்டவியல், வெப்ப அணுக்கரு வினைகளின் இயற்பியல், எரிப்பு, நீரியக்கவியல் நிகழ்வுகள் ஆகியவற்றில் அவரது பங்களிப்புகளுக்கு பெயர் பெற்றவர்.[3] 1943 ஆம் ஆண்டு முதல், சுயமாகக் கற்றுக் கொண்ட செல்தோவிச், முன்னாள் சோவியத் அணு ஆயுதத் திட்டத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1963 ஆம் ஆண்டில், கருந்துளைகளின் வெப்ப இயக்கவியலின் அடிப்படைப் புரிதல், இயற்பியல் அண்டவியலின் நோக்கத்தை விரிவுபடுத்துவதில் முன்னோடிப் பங்களிப்புகளைத் தொடங்குவதற்காக அவர் கல்வித்துறைக்குத் திரும்பினார்.[4]
இளமையும் கல்வியும்
[தொகு]யாக்கோவ் செல்தோவிச் மின்சுக்கில் (இப்போது பெலாருசில்) இருந்த ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார்.[5] இவர் பிறந்த நான்கு மாதங்களில் இவரது குடும்பம் லெனின்கிராது எனப் பின்னர் அழைக்கப்பட்ட சென் பீட்டர்சுபெர்கு நகருக்கு இடம்பெயர்ந்தது. இவர்கள் அங்கே 1941 ஆகத்து வரை வாழ்ந்துவந்தனர். அப்போது சோவியத் மீதான அச்சு நாடுகளின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பதற்காக செல்தோவிச் தான் பணிபுரிந்த வேதி இயற்பியல் கல்விக் கழகத்துடன் சேர்ந்து குடும்பகா கசானுக்குச் சென்றார்.[6]:301 அங்கு 1943 கோடை வரை வாழ்ந்தனர், பிறகு செல்தோவிச் மாஸ்கோவுக்கு நகர்ந்தார்.[6]
செல்தோவிச் தனக்கு 17 அகவை முடிந்த 1931 மே மாதத்தில் சோவியத் ஒன்றிய அறிவியல் கல்விக்கழகத்தின் இயல் வேதியியல் நிறுவனத்தில் ஆய்வக உதவியாளராகச் சேர்ந்தார். இவர் 1936 இல் தன் ஆய்வுரையை முடிக்கும் வரை அந்நிறுவனத்தில் இருந்தார். இவர் பலபடித்தான மேற்பரப்புகளில் பரப்பீர்ப்பும் வினையூக்கமும் எனு தலைப்பில் ஆய்வை முடித்து முனைவர் பட்டத்தைப் பெற்றார். இதன் மிகமுதன்மைப் பகுதியாக செவ்வியல் பரப்பீர்ப்பு(பிரீயுன்டிலிக் பரப்பீர்ப்பு) சமவெப்பநிலைக் கோடு ஆய்வு அமைந்தது. செல்டோவிச் இந்த ஆய்வு நோக்கீட்டுக்கான கோட்பாட்டு அடிப்படையை உருவாக்கினார். இவர் 1939 இல் இயற்பியலிலும் கணிதவியலிலும் முதுமுனைவர் பட்டத்தைப் பெற்றார். இதற்கான ஆய்வுத் தலைப்பு காலக(நைதர்சன்) ஆக்சைடாக்கமாகும். இவர் இயல் வேதியியலில் இந்த இயங்கமைப்பைக் கண்டுபிடித்தார். இது வெப்ப நைதரசன் ஆக்சைடு இயங்கமைப்பு அல்லது செல்டோவிச் இயங்கமைப்பு எனப்படுகிறது.
சோவியத் அணுக்கரு மின்திட்டங்கள்
[தொகு]இவர் 1937 முதல் 1948 வரை தீப்பற்றல், கனற்சி, எதிர்வெடிப்புக் கோட்பாட்டில் பணியாற்றினார். இவர் யூரி கார்த்தோனுடன் இணைந்து, 1939 முதல் 1940 வரை அணுக்கருத் தொடர்வினைகளில் முதன்மையான முடிவுகளை எட்டினார். இவர் 1943 இல் சோவியத் அணுகுண்டுச் செயல்திட்டத்தில் இகோர் குர்ச்சத்தோவ் உடனிணைந்து பங்களிக்கத் தொடங்கினார். இவரது அணுக்கருவாயுதப் பணி 1963 அக்தோபர் வரை தொடர்ந்தது.
துகள், அணுக்கரு இயற்பியல் புலங்களுக்கான பங்களிப்பு
[தொகு]இவர் 1952 முதல் அ௶இப்படைத் துகள்களிலும் அவற்றின் உருமாற்றங்களிலும் பணிபுரியத் தொடங்கினார்.ஐவர் பை மேசானின் பீட்ட அச் சிதைவை முன்கனித்தார். இவர் எசு. கெர்ழ்சுட்டைனுடன் இணைந்து மென் ஊடாட்டத்துக்கும் மின்கந்டூடாட்டங்களுக்கும் இடையிலான ஒப்புமையை கவனித்துள்ளார். இவர் 1960 இல் மூவான் வினையூக்கத்தை (மேலும் துல்லியமான மூவான் வினையூக்க dt-பிணைவு) நிகழ்வை முன்கணித்தார். இவர் 197ரில் பியோதோர் சாப்பிரோவுடன் இனைந்து குர்ச்சதோவ் பதக்கம் வழங்கப்பட்டுள்ளார். இது சோவியத் ஒன்றியத்திலேயே அணுக்கரு இயற்பியலில் மிக உயர்ந்த விருதாகும். விருது உரையில் " மீத்தண் நொதுமிகளின் இயல்புகளின் முன்கணிப்புக்கும் கண்டுபிடிப்புக்கும் அவற்றின் ஆய்வுக்கும் தரப்பட்டது" எனக் கூறப்பட்டுள்ளது. இவர் 1958 ஜூன் 20 இல் சோவியத் ஒன்றிய அறிவியல் கல்வ்க்கழக கல்வியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1965 முதல்1983 ஜனவரி வரை,சோவியத் ஒன்றிய அறிவியல் கல்வ்க்கழகத்தின் கெல்டிழ்சு பயன்முறைக் கணிதவியல் நிறுவனப் பிரிவின் தலைமையை வகித்தார்.
வானியற்பியல், அண்டவியல் ஆய்வுகள்
[தொகு]
இவர் 1960 களின் தொடக்கத்தில் வானியற்பியலிலும் அண்டக் கட்டமைப்பியலிலும் பணிசெய்யத் தொடங்கினார். இவரும் டுவின் சால்பீட்டரும் 1964 இல் தனியாக சார்பின்றி, முதன்முதலில் பாரிய அருந்துளையைச்சுற்றியுள்ள அகந்திரள் வட்டுகள் தாம் குவேசார்கள் வெளியிடும் பேரளவு ஆற்றல் வெளியீட்டுக்குப் பொறுபாகும் என முன்மொழிந்தனர்.[7][8] இவர் 1965 இல் இருந்து, மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துரையின் பேராசிரியாகவும் சுட்டென்பெர்கு வானியல் நிறுவனத்தின் சார்பியல் வானியற்பியலின் கோட்டத் தலைவராகவும் விளங்கினார்.
செல்டோவிச் வெம்புடவிக் கோட்பாட்டிலும் அண்ட நுண்ணலைப் பின்னணியின் இயல்புகளிலும் பேரியல் அண்டக் கட்டமைப்பிலும், கருந்துளைகள் கோட்பாட்டிலும் பணிபுரிந்தார். இவர் [[இரசீத் சூன்யயேவ்|இரசீத் சூன்யயேஉடன்னிணைந்து அண்ட நுன்னலைப் பின்னணி தலைக்கீழ் காம்ப்ட்டன் சிதறலுக்கு ஆட்படவேண்டும் என முன்மொழிந்தார். இது சூன்யயேவ்-செல்டோவிச் விளைவு எனப்படுகிறது. அத்காமா அண்டவியல் தொலைநோக்கியும் தென்முணைத் தொலைநோக்கியும் சேர எடுத்த அளவீடுகள் பால்வெளிக்கொத்து அண்டவியல் நோக்கீட்டு ஆய்கருவிகளாக அவற்றை நிறுவின. செல்டோவிச் பேரியல் அண்டக் கட்டமைப்பின் தன்மை பற்றிய கூர்மையான கண்னோட்டத்துக்குப் பங்களித்துள்ளார். குறிப்பாக,றீலாகுரேஞ்சிய சுற்றுலைவுக் கோட்பாட்டையும் ( செல்டோவிச் தோராயம்) the application of th ஒட்டுமைத் தோராயம் வழியிலான பர்கெரின் சமன்பாட்டு அணுகலையும் பயன்படுத்தி விளக்கியுள்ளார்.
கருந்துளை வெப்ப இயங்கியல்
[தொகு]செல்டோவிச் ஆக்கிங் கதிர்வீச்சுக் (கருந்துளை ஆவியாதல்) கண்டுபிடிப்பில் முதன்மையான பங்களிப்பு செய்துள்ளார். மாஸ்கோவுக்கு 1973 இல்சுட்ட்டீவன் ஆக்கிங் வந்திருந்தபோது சோவியத் அறிவியலாளர்காகிய செல்டோவிச்சும் அலெக்சி சுதாரோபின்சுகியும் அவருக்கு கவைய இயக்கவியல் உறுதியின்மை நெறிமுறைப்படி, சுழலும் கருந்துளைகள் துகளகலாஉ உருவாக்கி உமிழவேண்டும் என்பத்தைக் காட்டினர்.[9]
ஏற்பும் மதிப்புகளும்
[தொகு]இகோர் குர்ச்சதோவ் இவரை "பேரறிஞர்" என்றார். ஆந்திரேய் சக்காரொவ் " வனைத்துப் பொது அறிவியல் ஆர்வங்கள் கொண்டவர்" என்றார். சுட்டீவன் ஆக்கிங் ஒருதடவை செல்டோவிச்சிடம்: " உம்மைப் பார்ப்பதற்கு முன்பு, நிக்கோலசு பவிர்பாக்கி போல நீர் ஒரு குழு ஆசிரியர் என நம்பியிருந்தேன். " எனக் கூறியுள்ளார்.
தகைமைகளும் விருதுகளும்
[தொகு]- ICTPயின் டிராக் விருது (1985)
- புரூசு விருது (1983)
- அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1984).
- குர்ச்சதோவ் விருது (1977)
- மூன்று தடவை சமவுடைமை உழைப்பு வீர்ர் (1949, 1953, 1957)
- சுடாலின் பரிசு (1943, 1949, 1951, 1953)
- இலெனின் பரிசு (1957)
- மும்முறை இலெனின் ஆணைகள் (1949, 1962, 1974)
- இருமுறை உழைப்புக்கான செம்பதாகை ஆணை கள் (1945,1964)
- அக்டோபர் புரட்சி ஆணை (1962)
- இவர் பெயரால் 2001 இல் ஒரு சிறுகோள் 11438செல்டோவிச் எனப் பெயரிடப்பட்டது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vitaly Ginzburg (1994). "Yakov Borissovich Zeldovich. 8 March 1914–2 December 1987". Biographical Memoirs of Fellows of the Royal Society 40: 430–441. doi:10.1098/rsbm.1994.0049.
- ↑ "YaB-100 – Homepage". master.sai.msu.ru. sai-msu. பார்க்கப்பட்ட நாள் 18 April 2017.
- ↑ Ya. B. Zel'dovich and Yu. P. Raizer; ed. by Wallace D. Hayes and Ronald F. Probstein (2002). Physics of shock waves and high-temperature hydrodynamic phenomena (Reprod. ed.). Mineola: N.Y. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-42002-7.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Sublette, Carey (1 May 2002). "Yakov Zel'dovich". nuclearweaponarchive.org. nuclear weapon archives. பார்க்கப்பட்ட நாள் 17 April 2017.
- ↑ "This day in Jewish history / A self-taught nuclear physicist is born". Haaretz. 8 March 2013. பார்க்கப்பட்ட நாள் 8 November 2013.
- ↑ 6.0 6.1 Sunyaev, Rashid (2004). "Childhood and School days". Zeldovich Reminiscences (in ஆங்கிலம்) (1 ed.). London: CRC Press. p. 370. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780203500163. பார்க்கப்பட்ட நாள் 17 April 2017.
- ↑ Collin, Suzy (2006). "Quasars and Galactic Nuclei, a Half-Century Agitated Story". AIP Conf. Proc. 861: 587. doi:10.1063/1.2399629.
- ↑ Zel'dovich, Ya.B. (1964). "The Fate of a Star and the Evolution of Gravitational Energy Upon Accretion". Sov. Phys. Dokl. 9: 195. Bibcode: 1964SPhD....9..195Z.
- ↑ Hawking, Stephen (1988) A Brief History of Time, Bantam Books.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் யாக்கொவ் செல்தோவிச் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Annotated Bibliography for Yakov Borisovich Zel'dovich from the Alsos Digital Library for Nuclear Issues பரணிடப்பட்டது 2010-07-07 at the வந்தவழி இயந்திரம்
- Yakov Borisovich Zel'dovich – page at the மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம் dedicated to Zel'dovich
- Theory of combustion of unmixed gases – Zel'dovich 1949, translated 1974
- Instances of Lang-be using second unnamed parameter
- 1914 பிறப்புகள்
- 1987 இறப்புகள்
- லெனின் பரிசு பெற்றவர்கள்
- சோவியத் வானியலாளர்கள்
- பெலருசிய வானியலாளர்கள்
- அண்டவியலாளர்கள்
- பாய்ம இயக்கவியலாளர்கள்
- துகள் இயற்பியலாளர்கள்
- சோவியத் கண்டுபிடிப்பாளர்கள்
- பெலருசியக் கண்டுபிடிப்பாளர்கள்
- யூத இயற்பியலாளர்கள்
- உருசிய அறிவியலாளர்கள்
- இறைமறுப்பாளர்கள்
- சோவியத் இயற்பியலாளர்கள்
- உருசிய வானியலாளர்கள்