யாகோபசு காப்தேயன்
யாகோபசு கார்னீலியசு காப்தேயன் Jacobus Cornelius Kapteyn | |
---|---|
![]() யாகோபசு காப்தேயன். ஜான் வேத் அவர்களின் ஓவியம் (1921). | |
பிறப்பு | 1851|1|19|mf=y பார்ன்வில்டு |
இறப்பு | சூன் 18, 1922 ஆம்சுடர்டாம் | (அகவை 71)
தேசியம் | நெதர்லாந்து |
துறை | வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | உட்ரெச்ட் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | பால்வெளிச் சொழற்சிக்கான சான்றை கண்டுபிடித்தல் |
விருதுகள் | புரூசு பதக்கம் 1913 |
யாகோபசு கார்னீலியசு காப்தேயன் (Jacobus Cornelius Kapteyn) (ஜனவரி 19, 1851, பார்ன்வெல்டு, ஜெல்டெர்லாந்து - ஜூன் 18, 1922) ஒரு நெதர்லாந்து டச்சு வானியலாளர் ஆவார். இவர் பால்வெளி குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தியுள்ளார். இவர் பால்வெளிச் சுழற்சிக்கான சான்றைக் கண்டறிந்தார்.
வாழ்க்கை[தொகு]
காப்தேயன் பார்ன்வெல்டில் ஜெர்ட்டுக்கும் எலிசபெத்துக்கும் (நீ கூமான்சு காப்தேயன்) மகனாகப் பிறந்தார்.[1] [2] இவர் 1868 இல் உட்ரெச்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியலும் கணிதவியலும் கற்க சேர்ந்தார். இவர் 1875 இல் தன் ஆய்வுரையை முடித்த பிறகு, இலெய்டன் வான்காணகத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். பின்னர் குரோனிங்கன் பல்கலைக்கழகத்தில் வானியல், கோட்பாட்டு இயக்கவியல் துறையில் பேராசிரியரானார். இங்கு இவர் 1921 இல் ஓய்வு பெறும்வரை பணியாற்றினார். இவர் 1888 இல் நெதர்லாந்து அரசு கலை, அறிவியல் கல்விக்கழகத்தில் உறுப்பினர் ஆனார்.[3]
இவர் 1896 க்கும் 1900 க்கும் இடையில் வான்காணக உதவியின்றியே, டேவிட் ஜில் படம்பிடித்த ஒளிப்படத் தட்டுகளை ஆய்வு செய்து அளக்க தன்னார்வமாக முன்வந்தார். ஜில் தெற்கு அரைக்கோள விண்மீன்களின் ஒளிப்பட அளக்கையை நன்னம்பிக்கை முனை அரசு வான்காணகத்தில் நடத்திக் கொண்டிருந்தார். இந்தக் கூட்டாய்வு முடிவுகள் Cape Photographic Durchmusterung ஆக வெளியிடப்பட்டன. இதில் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள 454,875 விண்மீன்களின் இருப்பும் பருமையும் பட்டியல் இடப்பட்டன.
இப்பணியின் பகுதியாக 1897 இல் இவர் [[காப்தேயன் விண்மீனைக் கண்டுபிடித்தார். இது 1916 இல் பர்னார்டு விண்மீன் கண்டுபிடிக்கும் வரை மற்ற எந்த விண்மீனையும் விட மிக உயர்ந்த இயக்கம் வாய்ந்ததாக அமைந்தது.
இவர் மகள் என்றியேட்டா (1881-1956) எய்னார் எர்ட்சுபிரிங்கை மணந்து கொண்டார்.
தகைமைகள்[தொகு]
விருதுகள்
- அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம் (1902)
- ஜேம்சு கிரைகு வாட்சன் பதக்கம் (1913)
- புரூசு பதக்கம் (1913)
இவர் பெயர் இடப்பட்டவை'
- நிலாவில் உள்ள காப்தேயன் (குழிப்பள்ளம்)
- சிறுகோள் 818 காப்தேயனியா
- காப்தேயன் விண்மீன்
- குரோனிங்கன் பல்கலைக்கழகத்தில் உள்ள காப்தேயன் வானியல் நிறுவனம்
- கானரி தீவுகளில் ஒன்றான இலா பால்மாவில் உள்ள யாகோபசு காப்தேயன் தொலைநோக்கி (JKT)
- காப்தேயன் திட்டம், பிதான் வானியல் திட்டம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Science+Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. http://www.springerreference.com/docs/html/chapterdbid/58744.html. பார்த்த நாள்: August 22, 2012.
- ↑ van der Kruit, Pieter (2015). Jacobus Cornelius Kapteyn, Born Investigator of the Heavens. Springer Science+Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-319-10876-6. http://dx.doi.org/10.1007/978-3-319-10876-6.
- ↑ "Jacob Cornelius Kapteyn (1851 - 1922)". Royal Netherlands Academy of Arts and Sciences. பார்த்த நாள் 22 July 2015.