யாகந்தி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யாகந்தி
யாகந்தி கோபுர சிகரம்
யாகந்தி is located in ஆந்திரப் பிரதேசம்
யாகந்தி
யாகந்தி
Location in Andhra Pradesh
பெயர்
வேறு பெயர்(கள்):ஸ்ரீ யாகந்தி உமா மகேசுவரிர் கோயில்
தெலுங்கு:యాగంటి
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்:கர்நூல் மாவட்டம்
ஆள்கூறுகள்:15°21′3″N 78°08′22″E / 15.35083°N 78.13944°E / 15.35083; 78.13944ஆள்கூறுகள்: 15°21′3″N 78°08′22″E / 15.35083°N 78.13944°E / 15.35083; 78.13944
கோயில் தகவல்கள்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:15ஆம் நூற்றாண்டு

ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோயில் அல்லது யாகந்தி (Sri Yaganti Uma Maheswara Temple அல்லது Yaganti) என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த கர்நூல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும்.[1]

கோயில் வரலாறு[தொகு]

புஷ்கரணி புனித குளம்

இக்கோயில் 15 ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின், சங்கம வம்சத்தின் மன்னரான ஹரிஹர புக்க ராயாரால் கட்டப்பட்டது. இக்கோயில் வைஷ்ணவ மரபின்கீழ் கட்டப்பட்டது.

இக்கோயில் குறித்து ஒரு கதை நிலவுகிறது அதன்படி இந்த இடத்தில் அகத்தியர் வெங்கடேசருக்குக் கோயில் கட்ட விரும்பினார். ஆனால் சிலையில் ஒரு குறை. எத்தனையோ தடவை முயன்றும் சிலை முழுமை பெறவில்லை. அதனால் கோயிலை அவரால் அமைக்க முடியவில்லை. அகத்தியர் சிவனை வேண்டி தவம் செய்ததில் அவரும் தோன்றி இது கையிலை போல உள்ளதால் விஷ்ணுவுக்கு உகந்த இடம் இல்லை என்று கூறவே, முனிவரும் மகேஸ்வரரைத் தன் தேவியுடன் அங்கேயே தங்குமாறு இறைஞ்சினார். சிவனும் , உமாமகேஸ்வரராக ஒரே கல்லில் ஓருருவாக எழுந்தருளினார். இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகிறார்.

இக்கோயில் குறித்து நிலவும் இரண்டாவது கதை பின்வருமாறு: இந்தப் பகுதியில் முற்காலத்தில் வாழ்ந்த சித்தப்பா என்னும் சிவ பக்தர் ஒருவர், இறைவனைக் காண வேண்டித் தவமிருந்தார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்த இறைவன் புலி உருக் கொண்டு அவர் முன் தோன்றினார். வந்திருப்பவர் சிவனார் என்றுணர்ந்த சித்தப்பா ஆனந்தக் கூத்தாடினார். ‘நேனு சிவனே கண்டி (நான் சிவனை கண்டு கொண்டேன்) என்று கூவினார். அதுதான் நேனுகண்டி என்றாகி பின் யாகந்தி என்று மருவியது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது, மேலும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிறைய பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். சிவன், பார்வதி மற்றும் நந்தி ஆகியோர் இந்த கோவிலில் முக்கிய தெய்வங்களாக உள்ளனர். இக்கோயில் கர்நுல் மாவட்டம் பங்கனப்பள்ளியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. வீரபிரம்மேந்திர ஸ்வாமி சில காலம் இங்கு தங்கியிருந்து கால ஞானம் என்னும் நூலை இயற்றினார்.[2][3]

கட்டிடக்கலை[தொகு]

புஷ்கரணி[தொகு]

இந்த கோயிலின் ஒரு அம்சமாக புஷ்கரிணி என்னும், ஒரு சிறிய குளம் கோவில் வளாகத்தில் உள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து வரும் நீர் நந்தியின் வாய் வழியாக இந்த புஷ்கரிணியில் விழுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. மலையில் இருந்து வரும் இந்த நீரானது சுவையாகவும் குளிர்சியாகவும் உள்ளது. இதன் சிறப்பம்சமாக ஆண்டு முழுவதும், இந்த ஊற்று நீர் குளத்தில் விழுந்தபடி உள்ளது, பழங்கால விஸ்வகர்மா ஸ்தபதிகளின் திறமைகளைக் காட்டுகிறது. புஷ்கரிணியில் குளிப்பது புனிதமானதாகவும் நன்மை தரக்கூடியதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். புஷ்கரணி குளத்தில் குளித்தபின்பு இறைவன் சிவனை வழிபடுகின்றனர்.[4][5]

புஷ்கரணி
நந்தி வழியே நீர் வரும் காட்சி

இந்த புஷ்கரிணியில் குளித்த அகஸ்தியர் சிவனை வழிபட்டார் என்ற கதை நிலவுகிறது.

யாகந்தி கோயிலைச், சுற்றிலும் காணப்படும் குகைகள்:

அகத்தியர் குகை

அகத்தியர் குகை[தொகு]

இது அகத்தியர் சிவனை நோக்கி தவம்செய்த குகை. இந்த குகையைக் காண 120 செங்குத்தான படிகளைத் தாண்டி செல்லல வேண்டும். குகைக்குள் வணங்க தேவியின் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது.[6]

வெங்கடேசுவரர் குகை[தொகு]

இந்த குகையில் வெங்கடேஸ்வரரின் சிதைந்த சிலை உள்ளது. அகத்திய குகையுடன் ஒப்பிடும்போது இந்த குகை மிகப் பெரியது. இதன் வழி குறுகலாக உள்ளதால் குனிந்துகொண்டு சென்றால்தான் உள்ளே செல்ல இயலும். இங்கு நிலவும் கதையின்படி இந்தக் குகையில் உள்ள சிலையானது திருமலை வெங்கடேஸ்வரர் கோவிலுக்கும் முற்பட்டது என கூறுகின்றனர். என்றாலும் இச்சிலையின் அடிப்பகுதி சேதமுற்றிருப்பதால் வணங்குவது கிடையாது. ஸ்ரீ ஸ்ரீ பாலுரி வீர பிரம்மேந்திர சுவாமி, அவரது கால ஞானம் நூலில் இந்த இடம் திருப்பதிக்கு மாற்றாக இருக்கும் என்று கூறுகிறார்.

வீரபிரம்மேந்திரர் குகை

வீரபிரம்மேந்திரர் குகை[தொகு]

இந்த குகையானது துறவி ஸ்ரீ குபேரபுரி வீரா பிரம்மந்திர ஸ்வாமி தனது கால ஞானக் கவிதைகளை (தீர்க்கதரிசனம்) எழுதிய குகையாகும். குகையின் முகப்பு உயரம் குறைவாக உள்ளதால், குனிந்தபடி உள்ளே செல்லவேண்டும்.

பிரபலமாக உள்ள நம்பிக்கைகள்[தொகு]

வளரும் நந்தி[தொகு]

இந்த யாகந்தி நந்தி சிலை வளருவதாக நம்பப்படுகிறது.

கோவிலின் முன் உள்ள நந்தி சிலையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர். இந்த சிலை அதன் தற்போதைய அளவைவிட மிக சிறியதாக இருந்ததாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். சில விஞ்ஞானிகள் இந்த சிலைலை ஆய்வு செய்ததாகவும் கூறுகிறனர். இதன் வளரும் தன்மைக்கும் இந்த சிலை செதுக்கப்பட்ட பாறை வகைக்கும் தொடர்புள்ளது, அதனாவேயே அது வளர்ந்து கொண்டே வளர்ந்துகொண்டே வருகிறது என்கின்றனர். இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் 20 ஆண்டுகளில் 1 அங்குல உயரம் வளர்ந்து உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் சோதித்துப் பார்த்ததில் இது இந்தப் பாறை இயற்கையாக வளரும் தன்மையை கொண்டது என்கின்றனர்.

கோயிலில் உள்ள பழங்கால துளசி மாடம்

அங்கிருக்கும் கோயிலின் குறிப்புப் பலகை, இதற்கு முன்னர் இந்த நந்தியை வலம் வர முடிந்ததாகவும், வளரும் நந்திக்கு இடம் கொடுப்பதற்கு வசதியாக ஒரு தூண் அகற்றப்பட்டு விட்டதாகவும் தகவலை தெரிவிக்கிறது.

வீர பிரம்மந்திர ஸ்வாமியின் கூற்றின்படி, இந்த யாகந்தி பசவண்ணா (நந்தி சிலை) உயிர் பெற்று வரும்போது இந்தக் கலி யுகம் முடியும்.

காகங்கள் இல்லாமை[தொகு]

முனிவர் இங்கு தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, காகங்கள் அவரைத் தொந்தரவு செய்ததால், அந்தக் காகங்கள் அந்த இடத்தில் நுழையக் கூடாது என்று சபித்தார் என்ற கதை நிலவுகிறது. காகமானது சனி பகவானின் வாகனமாகும். காகம் எப்படி இங்கு நுழையாதோ அதைப்போல இந்த இடத்திற்கு சனியும் வரமாட்டார் என்கின்றனர்.[7]

போக்குவரத்து[தொகு]

இந்த தலமானது ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தின் கர்னூல் நகரிலிருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ளது. இக்கோயில் பனகானபள்ளி-பப்புல்லி சாலையில் பனகனப்பள்ளி (மண்டல தலைமையகம்) க்கு மேற்கே 14 கி.மீ. தொலைவில் உள்ளது. கர்னூலுக்கு இங்கிருந்து தினமும் மாலை 5.30 மணிக்கு (காச்சிகுடா விரைவு வண்டி) ரயில் உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sajnani, Manohar (1 January 2001). "Encyclopaedia of Tourism Resources in India". Gyan Publishing House.
  2. "Ap Tourism". பார்த்த நாள் 2016-12-28.
  3. "Pilgrim rush peaks in major temples". The Hindu. 2016-03-06. http://www.thehindu.com/news/cities/Vijayawada/pilgrim-rush-peaks-in-major-temples/article8319171.ece. பார்த்த நாள்: 2016-12-28. 
  4. "A pilgrimage tour to the pious city of Kurnool in Andhra Pradesh! - Nativeplanet". பார்த்த நாள் 2016-12-28.
  5. "Unsolved Mysteries and Indian Shrines" (2014-01-14). பார்த்த நாள் 2016-12-28.
  6. "About Yaganyti" (2013-06-20). பார்த்த நாள் 2016-12-28.
  7. "Tourist attraction: Kurnool Nandi idol slowly ‘growing’". பார்த்த நாள் 2016-12-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகந்தி_கோயில்&oldid=2441290" இருந்து மீள்விக்கப்பட்டது