யவனிகா ஸ்ரீராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யவனிகா ஸ்ரீராம்
பிறப்பு1962

யவனிகா ஸ்ரீராம் (பிறப்பு: 1962) தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். அத்தோடு விமர்சகராகவும், கட்டுரை மற்றும் சிறுகதை எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். தமிழில் அரசியல் மற்றும் பாலுமை சார்ந்த கவிதைகள் எழுதுபவர். தமிழ்நாட்டின் பல கல்லூரிகளில் நவீன கவிதைகள் பற்றி வகுப்பெடுக்கிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளப்பட்டி என்னும் ஊரில் 1962ம் ஆண்டு ராமசாமி-மகமாயி அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். சின்னாளப்பட்டி தேவாங்கர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை முடித்தார். தன் 19ம் வயதில் இலக்கியத்தினுள் நுழைந்தார். கம்பர், பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் வழியே கவிதையில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர். தனது தந்தையின் குடும்ப வணிகத்தை மேற்கொண்டு தமிழ்நாடு முழுக்கப் பயணித்தார். அதே வணிகக் காரணங்களுக்காக கிழக்காசிய நாடுகளுக்கும் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களுக்கும் பன்முறை பயணம் செய்ததில் சேகரித்த காட்சிப் பின்னணிகளைக் கொண்டு பிரித்தானியக் காலனிய ஆதிக்கத்திற்கும் நாடு சுதந்திரமடைவதற்கும், பிறகு 1990களில் அறிமுகமான பொருளாதாரத் திறப்பிற்கும் அதன் விளைவான பின் காலனித்துவத்திற்கும் தனது மொழியின் இலக்கியத் தொன்மங்களுக்கும் இடையே நிலம் உடல் ஆகியவற்றை மீட்டெடுக்கும் வகையில் தன் படைப்புகளை அறிமுகப்படுத்துகிறார்.

பிற்காலத்தில் சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், கலாப்ரியா, ரமேஷ்-பிரேம், பிரம்மராஜன், சுகுமாரன், சேரன், ஆத்மாநாம் போன்றோரின் தாக்கத்தில் நவீன கவிதைக்குள் வந்தார். தமிழில் தன்னைப் ‘பின் காலனித்துவக் காலக் கவிஞன்’ என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

படைப்புகள்[தொகு]

கவிதைத் தொகுப்புகள்[தொகு]

  • இரவு என்பது உறங்க அல்ல (1998)
  • கடவுளின் நிறுவனம் (2005)
  • சொற்கள் உறங்கும் நூலகம் (2007)
  • திருடர்களின் சந்தை (2009)
  • காலத்தில் வராதவன் (2010) [ தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு ]

கட்டுரைத் தொகுப்பு[தொகு]

  • நிறுவனங்களின் கடவுள் (2011)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யவனிகா_ஸ்ரீராம்&oldid=3226142" இலிருந்து மீள்விக்கப்பட்டது