யம்துரோக் ஏரி
யம்துரோக் ஏரி | |
---|---|
யம்துரோக் ஏரி | |
ஆள்கூறுகள் | 28°56′N 90°41′E / 28.933°N 90.683°E |
வடிநில நாடுகள் | சீனா |
அதிகபட்ச நீளம் | 72 கிமீ |
மேற்பரப்பளவு | 638 கிமீ |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 14,570 அடி |
யம்துரோக் ஏரி (Yamdrok Lake) சீனாவின் திபெத்திய பீடபூமியில் உள்ள மூன்று புனித நன்னீர் ஏரிகளில் ஒன்றாகும். பனி படர்ந்த கொடுமுடிகள் மற்றும் ஓடைகளின் நடுவே அமைந்த யம்துரோக் ஏரி, கடல் மட்டத்திலிருந்து 14,570 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது 72 கிமீ நீளமும், 638 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்டது. [2]
யம்துரோக் ஏரியிலிருந்து 90 கிமீ தொலைவில் கியாண்ட்சே நகரமும், 100 கிமீ தொலைவில் லாசா நகரமும் அமைந்துள்ளது.
யம்துரோக் ஏரியின் மேற்குப் பகுதியில் பைதி கிராமத்தில் அமைந்த, திபெத்தின் பெரிய புனல் மின் நிலையம் 1996இல் நிறுவப்பட்டது.[3]
30 முதல் 60 மீட்டர் ஆழம் கொண்ட யம்துரோக் ஏரியின் பரப்பளவு 638 சதுர கிலோ மீட்டராகும். இறக்கை வடிவத்தில் அமைந்த இந்த ஏரியின் தெற்கு பகுதி விரிந்தும், வடக்குப் பகுதி குறுகியும் உள்ளது. இந்த ஏரி குளிர்காலத்தில் உறைந்து விடுகிறது.
பண்பாட்டு முக்கியத்துவம்
[தொகு]மானசரோவர் ஏரி போன்றே இந்த ஏரியும் திபெத்திய மக்களால் புனிதமாகக் கருதப்படுகிறது. [3]
திபெத்திய பௌத்த சமயத்தின் இரண்டாவது புத்தராக கருதப்படும் பத்மசம்பவர், கிபி எட்டாம் நூற்றாண்டில் பௌத்த சமயத்தை இப்பகுதியில் பரப்பினார். [3] யம்துரோக் ஏரிப் பகுதிகளில் முதலில் பௌத்த பிக்குணிகளின் முதல் விகாரை அமைக்கப்பட்டது. தற்போது இவ்விகாரையில் முப்பது பிக்குகள் மற்றும் பிக்குணிகள் உள்ளனர்.[4]
யம்துரோக் ஏரி பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளால் கவரப்பட்டுள்ளது. இந்த ஏரியில் உள்ள தீவுப் பகுதியில் பழைய கோட்டையும், அரண்மனையும் உள்ளது.
பொருளாதாரம்
[தொகு]ஏப்ரல் முதல் அக்டோபர் முடிய இந்த ஏரியில் மீன் பிடித் தொழில் நடைபெறுகிறது. யம்துரோக் ஏரியைச் சுற்றி புல்வெளிகள் அமைந்துள்ளது. கவரிமா எனும் யாக் மாட்டின் பால் மற்றும் பால் பொருட்கள், தோல் வணிகத்தில் உள்ளது.
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், யம்துரோக் ஏரி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 1.9 (35.4) |
3.4 (38.1) |
5.8 (42.4) |
9.5 (49.1) |
13.1 (55.6) |
16.6 (61.9) |
16.1 (61) |
15.2 (59.4) |
13.9 (57) |
10.2 (50.4) |
6.1 (43) |
3.3 (37.9) |
9.59 (49.27) |
தினசரி சராசரி °C (°F) | -7.4 (18.7) |
-5.2 (22.6) |
-2.0 (28.4) |
2.1 (35.8) |
6.2 (43.2) |
10.3 (50.5) |
10.6 (51.1) |
9.8 (49.6) |
8.1 (46.6) |
2.8 (37) |
-2.6 (27.3) |
-6.0 (21.2) |
2.23 (36.01) |
தாழ் சராசரி °C (°F) | -16.7 (1.9) |
-13.8 (7.2) |
-9.8 (14.4) |
-5.2 (22.6) |
-0.7 (30.7) |
4.0 (39.2) |
5.1 (41.2) |
4.5 (40.1) |
2.3 (36.1) |
-4.6 (23.7) |
-11.3 (11.7) |
-15.3 (4.5) |
−5.13 (22.78) |
பொழிவு mm (inches) | 0 (0) |
0 (0) |
2 (0.08) |
4 (0.16) |
12 (0.47) |
39 (1.54) |
82 (3.23) |
83 (3.27) |
37 (1.46) |
7 (0.28) |
1 (0.04) |
0 (0) |
267 (10.51) |
ஆதாரம்: Climate-Data.org |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Guide to Tibet - Things to do, Place to visit, Practicalities".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Guide to Tibet - Things to do, Places to visit and Practicalities".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ 3.0 3.1 3.2 Petra Seibert and Lorne Stockman. "The Yamdrok Tso Hydropower Plant in Tibet: A Multi-facetted and Highly Controversial Project". Archived from the original on 2013-05-10. பார்க்கப்பட்ட நாள் 2007-06-29.
- ↑ [1]
வெளியிணைப்புகள்
[தொகு]- Yamdrok Tso Campaign Pack Death of a Sacred Lake
- TWS Campaign for 'Endangered Tibet'
- National Aeronautics and Space Administration
- Diary of Yamdrok Tso Hydroelectric Project பரணிடப்பட்டது 2008-09-30 at the வந்தவழி இயந்திரம் The Government of Tibet in Exile
- Chris Travel Blog Tibet Yamdrok Lake Experience