யமுனாபாய் வைகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யமுனாபாய் வைகர்
பிறப்பு1915
வய்
பணிகலைஞர்

யமுனாபாய் வைகர் (Yamunabai Waikar) யமுனாபாய விக்ரம் சாவ்லே என்ற இயற்பெயர் கொண்ட இவர் [1], ஓர் இந்திய நாட்டுப்புற கலைஞராவார். [2] லாவணி மற்றும் தமாசாவின் மராத்தி நாட்டுப்புற மரபுகளில் இவரது நிபுணத்துவத்திற்காக அறியப்பட்டவர், இசை மற்றும் நடனம் சம்பந்தப்பட்ட நாட்டுப்புற கலை வடிவங்கள் மற்றும் கலை வகைகளின் முன்னணி நிபுணர்களில் ஒருவராக அறியப்பட்டவர். [3] [4] மேலும் சங்கீத நாடக அகாதமி விருதையும் பெற்றுள்ளார். [5] 2012 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் இந்தியக் குடிமகனின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது. [6]

சுயசரிதை[தொகு]

மகாராட்டிராவின் சாத்தாரா மாவட்டத்திலுள்ள மகாபலேசுவர் அருகிலுள்ள நுனேகலேம் கிராமத்தில் கோலத்தி சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் யமுனாபாய் பிறந்தார். இவரது தந்தை குடும்பத்திற்கு உதவி ஏதும் செய்யாதவராக இருந்தார் எனவும், இவரது தாயார், ஐந்து குழந்தைகளில் மூத்தவராக இருந்த யமுனாபாயை தனக்குத் துணையாகக் கொண்டு தெரு நடனங்களை நிகழ்த்தியதாகவும் தெரிகிறது. [7] இவரது 10ஆவது வயதில், ஒரு நாட்டுப்புற கலைக் குழுவில் சேர்ந்தார். அங்கிருந்து லாவணியின் முதல் பாடங்கள் ஆரம்பமாயின. பின்னர், இவருடைய தந்தை இவர்களுடன் சேர்ந்தபோது, குடும்பம் ஒரு தமாசா குழுவை உருவாக்கியது. இவருடைய தந்தை தோல்கி வாசித்தபோது, யமுனாபாய் மற்றும் இவரது உறவினர் நடனமாடினார்கள்.

அதிகமான வருவாயைத் தேடி, குடும்பம் மும்பைக்குச் சென்றது. யமுனாபாய் மும்பையின் தெருக்களில் லாவானி மற்றும் திரைப்படப் பாடல்களுக்கு ஆடத் தொடங்கினார். தனது தெரு நிகழ்ச்சிகளின் வெற்றிகளால் ஊக்கப்படுத்தப்பட்ட இவர், ஒரு மேடை நிகழ்ச்சியை நிகழ்த்தினார். இது 1975 ஆம் ஆண்டு வரை நீடித்த மேடை நிகழ்ச்சியாகத் தொடங்கியது, திரைப்படத்தின் புகழ் மற்றும் பார்வையாளர்கள் குறைதல் ஆகியவை வருவாயைப் பாதித்தன. [7] யமுனாபாய் தனது வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்க முயன்றாலும், ஒரு புதிய குழுவை உருவாக்கி, தனது மருமகளை குழுவில் சேகரித்தாலும், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இந்த காலகட்டத்தில், இவர் தனது கோலாத்தி பழங்குடியின உறுப்பினர்களுக்கான குறைந்த கட்டண வீட்டுவசதி திட்டத்த்தில் இருப்பிடம் ஒன்றை பெற்றதாக கூறப்படுகிறது.

யமுனாபாய் புகழ்பெற்ற கதக் குருவான பிர்ஜு மகாராஜுடன் மேடையை பகிர்ந்துள்ளார். இவர் 1975 ஆம் ஆண்டில் தில்லியில் தனது நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இந்த செயல்திறன் இவரது வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்க உதவியது. மேலும் கொல்கத்தா, போபால், இராய்ப்பூர் போன்ற நாட்டின் பிற பகுதிகளிலும் நிகழ்ச்சியை நிகழ்த்த இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. [7]

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்[தொகு]

யமுனாபாய் வைகர் பல விருதுகள் மற்றும் கௌரவங்களைப் பெற்றுள்ளார். 2012 இல் இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ [6] [1] [7] விருது பெற்றுள்ளார். 1990 இல் மகாராட்டிரா மாநில விருது இவருக்கு வழங்கப்பட்டது. சங்கீத நாடக அகாதமி 1995 ஆம் ஆண்டில் யமுனாபாயை அவர்களின் சங்கீத நாடக அகாதமி விருது வழங்கி கௌரவித்தது. 1997 இல் சகாகர் மகரிசி சங்கர்ராவ் மோகைத்-பாட்டீல் லவானி கலாவந்த் விருதினை பெற்றார். [8] 2000 ஆம் ஆண்டில் மகாராட்டிரா அரசிடமிருந்து அகில்யாபாய் கோல்கர் விருது கிடைத்தது. 2010 இல் நிலு பூலே சம்மன் விருதும், [9] [10] 2012 இல் தாகூர் இரத்னா சம்மனின் வாழ்நாழ் சாதனை விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. [11] [12] ஆதித்யா விக்ரம் பிர்லாவின் 2012 ஆம் ஆண்டு நிறுவிய சங்க கால மையத்திலிருந்து ஆதித்யா விக்ரம் பிர்லா கலசிகாரா விருதும், [13] 2014 ஆம் ஆண்டு உத்தங் ஆண்டு விழாவில் இரசிகமணி சிறீகிருட்டிணா பண்டிட் உத்தங் குணகௌரவ் விருதும் வழங்கப்பட்டது. [14]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 "Sangit Kala Kendra". Sangit Kala Kendra. 2014. 5 ஏப்ரல் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 December 2014 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Sangit Kala Kendra" defined multiple times with different content
 2. "IBN Live". IBN Live. 2014. 1 டிசம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Planet Radio City". Planet Radio City. 2014. 17 மார்ச் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Flickr". Flickr. 2014. 1 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
 5. "SNA". Sangeet Natak Akademi. 2014. 30 மே 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
 6. 6.0 6.1 "Padma Shri" (PDF). Padma Shri. 2014. 15 நவம்பர் 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 11 November 2014 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Padma Shri" defined multiple times with different content
 7. 7.0 7.1 7.2 7.3 "TOI". 11 February 2002. 2 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
 8. "वैशाली जाधव-परभणीकर यांचा लावणी कलावंत पुरस्काराने सन्मान". Eenadu English Portal. Archived from the original on 2016-12-20. https://web.archive.org/web/20161220190210/http://marathi.eenaduindia.com/State/WesternMaharashtra/Solapur/SolapurDistrict/2015/02/03225953/Honor-Award-actor-planting-of-Vaishali-Jadhav--parabhanikara.vpf. பார்த்த நாள்: 2016-12-19. 
 9. "Web India". Web India. 2010. 1 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
 10. "DNA". DNA. 2010. 1 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
 11. "SNA Tagore Samman" (PDF). Sangeet Natak Akademi. 25 April 2012. 4 மார்ச் 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 1 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Manipur News". Manipur News. 17 December 2011. 1 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Loksatta". Loksatta. 17 November 2012. 1 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Uttung Award". Uttung Sanskrutik Pariwar. 2014. 1 December 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யமுனாபாய்_வைகர்&oldid=3569209" இருந்து மீள்விக்கப்பட்டது