யப்பானில் அறிவியலும் தொழினுட்பமும்

யப்பானின் அறிவியலும் தொழில்நுட்பமும் எனும் இக்கட்டுரையானது யப்பானின் முன்னணி தொழில்நுட்ப துறைகளான நுகர்வோர் இலத்திரனியல், இயந்திரவியல் மற்றும் வாகனத் தொழில்துறை ஆகியவற்றை அலசுகின்றது.
மின்னணுவியல்[தொகு]

யப்பான் ஆனது தனது இலத்திரனியல் உபகரண தயாரிப்புகளுக்காக உலகம் பூராகவும் நன்கு அறியப்பட்ட நாடாகும். மற்றைய இலத்திரனியல் உபகரணங்கள் தயாரிக்கும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் யப்பானின் இலத்திரனியல் தயாரிப்புக்கள் உலக சந்தையில் பாரிய பங்கை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. யப்பான் நாடானது அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்பம், இயந்திர தயாரிப்பு மற்றும் மருத்துவ ஆய்வு துறைகளில் முன்னணி நாடுகளில் ஒன்றாகும். உலகில் ஆய்விற்கும் அபிவிருத்திக்கும் அதிகமாக நிதி ஒதுக்கிய நாடுகளில் யப்பான் மூன்றாவதாக (130 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) உள்ளது. மேலும் 677,731 ஆராய்ச்சியாளர்களை கொண்டுள்ளதுடன், ஆசியாவிலேயே அறிவியலுக்காக அதிக நோபல் பரிசுகளை வென்ற நாடாகவும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.[1]
புஜி [இந்நிறுவனம் யப்பானின் முதல் இலத்திரனியல் கணினியை (புஜிக்1999) 1956 ஆம் ஆண்டு வெளியிட்டது], சொனி [2] ஆகிய பாரிய பன்னாட்டு கூட்டு நிறுவனங்கள் யப்பானில் உருவாக்கப்பட்டவைகளாகும். பெனாசொனிக், கெனான், புஜிட்சு, கிடாச்சி, சார்ப், நின்டண்டோ, எப்சன் மற்றும் டோஸ்கிபா ஆகிய யப்பான் நிறுவனங்கள் உலக பிரசித்தி பெற்ற இலத்திரனியல் உபகரண தயாரிப்பு நிறுவனங்களாகும். டொயட்டா, கொண்டா, நிஸ்ஸான், மஸ்டா, மிட்சுபிஸ்கி, சுசுகி மற்றும் சுபாறு ஆகியவையும் உலகில் நன்கு அறியப்பட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்களாகும்.
வானூர்தி அறிவியல்[தொகு]

யப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம் (JAXA), விண்வெளி மற்றும் கோள்கள் பற்றிய ஆய்வு, வானூர்தி பற்றிய ஆய்வு, ஏவூர்தி மற்றும் செய்மதி தயாரிப்பு ஆகியவற்றை மேற்கொள்கின்றது.[3] இது தொடர்ச்சியாக ஏவூர்திகளை உருவாக்கி வருகின்றது, இறுதியாக உருவாக்கப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த ஏவூர்தி மாடல் (H-IIB) ஆகும். H-IIA/B மாடல் ஏவூர்தியானது 8-டன் பாரத்தினை புவிநிலை இடமாற்று சுற்றுப்பாதை (Geostationary transfer orbit) இற்கு கொண்டுசெல்லக் கூடிய வலிமை பெற்றதாகும். இவ் ஏவூர்தியானது மிட்சுபிஸ்கி பார தொழிலக தனியார் நிறுவனத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 2007 மற்றும் 2008 காலப்பகுதியில் அனுப்பப்பட்ட யப்பானின் ஆராய்ச்சித் தொகுதி மற்றும் 2009 ஆம் வருடம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு யப்பானின் ஆராய்ச்சித் தொகுதியை மீள்வழங்கல் செய்த H-II தன்னியக்க வானூர்தி ஆகியவைகளை தயாரித்ததும் இதே தனியார் நிறுவனமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.[4]
அணுக்கரு ஆற்றல்[தொகு]

1973 ஆம் ஆண்டிலிருந்து யப்பான் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள்களில் அதிகம் தங்கியில்லாது அணுசக்தியில் தங்கியிருக்க முயற்சித்து வருகின்றது. 2008 ஆம் ஆண்டில் யப்பான் 7 புதிய அணுக்கரு உலைகளை (கொன்சு இல் மூன்று, கொக்கைடோ, கியுஸ்கு, சிகொகு, தனகஸ்கிமா ஆகிய இடங்களில் ஒவ்வோன்று) நிறுவியதன் மூலம் மொத்தமாக 55 அணுக்கரு உலைகளுடன் உலகில் அணுசக்தி பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தது. அணுசக்தி யப்பானின் மின்சாரத் தேவையில் 34.5 வீதத்தை பூர்த்தி செய்கின்றது.[5]
2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூமி அதிர்ச்சி மற்றும் சுனாமியினைத் தொடர்ந்து புகுசிமா அணுக்கரு உலையின் குளிர்விக்கும் பகுதி செயலிழந்தது. இதனால் அப்பகுதியில் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டதுடன் 20 km சுற்று வட்டாரத்தில் வாழ்ந்த 140,000 மக்கள் இடம்பெயர வைக்கப்பட்டார்கள்.[6]
நோபல் பரிசு பெற்றவர்கள்[தொகு]
யப்பான் ஆய்வாளர்கள் பல நோபல் பரிசுகளை வென்றுள்ளார்கள். கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கிடேகி யுகாவா 1949 ஆம் ஆண்டு பௌதிகத்திற்கான நோபல் பரிசை பெற்றார். அதனை தொடர்ந்து சின் இடிரோ டோமனகா 1965 ஆம் ஆண்டு பரிசினை பெற்றார். டோக்கியோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த லியோ எசாகி 1973 ஆம் ஆண்டு இப்பரிசினை வென்றார். நோபல் பரிசு பெற்ற முக்கிய யப்பானியர்கள் பின்வருமாறு[7]:
- கெனிச்சி புகுய் – 1981 இல் வேதியலுக்கான நோபல் பரிசினை ரோல்ட் கொப்மன் உடன் பகிர்ந்து கொண்டார்.
- சுசுமு டோனேகவா – 1987 இல், மருத்துவதிற்கான நோபல் பரிசு
- ஹிடேகி ஷிரகாவா – 2000 இல் வேதியலுக்கான நோபல் பரிசு
- உருயோஜி நோயோரி – 2001 இல் வேதியலுக்கான நோபல் பரிசு
- கொய்ச்சி டனாகா – 2002 இல் வேதியலுக்கான நோபல் பரிசு
- மசாடோஸ்கி கொஸ்கிபா – 2002 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு
- யோச்சிரோ நம்பு – 2008 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு
- மகொடோ கொபாயாச்சி – 2008 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு
- மஸ்காவா டோஸ்கிகிட் – 2008 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு
- ஒசாமு சிமொமுரா – 2008 இல் வேதியலுக்கான நோபல் பரிசு
- இச்கி நெகிஸ்கி – 2010 இல் வேதியலுக்கான நோபல் பரிசு
- அகிரா சுசுகி – 2010 இல் வேதியலுக்கான நோபல் பரிசு
- சின்யா யமனகா – 2012 இல் மருத்துவதிற்கான நோபல் பரிசு
- இசாமு அகசாகி – 2014 இல் வேதியலுக்கான நோபல் பரிசு
- கிரோஸ்கி அமானோ – 2014 இல் வேதியலுக்கான நோபல் பரிசு
- சுஜி நகமுரா – 2014 இல் வேதியலுக்கான நோபல் பரிசு
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-11-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151106104225/http://www.kyoto-u.ac.jp/en/about/profile/honor/awards/nobel.html.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-05-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120510002316/http://www.sony.net/SonyInfo/CorporateInfo/.
- ↑ http://global.jaxa.jp/about/index.html
- ↑ http://global.jaxa.jp/projects/index.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140513222356/http://www.world-nuclear.org/info/Country-Profiles/Countries-G-N/Japan/.
- ↑ http://www.world-nuclear.org/info/safety-and-security/safety-of-plants/fukushima-accident/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-11-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151106104225/http://www.kyoto-u.ac.jp/en/about/profile/honor/awards/nobel.html.