உள்ளடக்கத்துக்குச் செல்

யப்பானிய அரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடமிருந்து வலம்: பழுப்பு அரிசி, பாதி தீட்டப்பட்ட அரிசி, வெள்ளை அரிசி
நாராவில் உள்ள ஒரு யப்பானிய நெல் வயல்

யப்பானிய அரிசி (Japanese rice) என்பது சாதாரண அரிசி (உருவுமை) மற்றும் பசைத்தன்மை கொண்ட அரிசி (மோச்சிகோம்) உட்பட, யபோனிகா அரிசியின் பல குட்டை தானிய வகைகளைக் குறிக்கிறது.[1]

சாதாரண யப்பானிய அரிசி, அல்லது உருவுமை (粳米), யப்பானியர்களின் உணவின் முக்கிய அங்கமாகும். இது குட்டையான, ஒளி ஊடுருவக்கூடிய தானியங்களைக் கொண்டது. சமைக்கும்போது, ​​இது ஒரு பிசுபிசுப்பான தன்மையைப் பெறுவதால், இதை உண் குச்சிகளைக் கொண்டு எளிதாக எடுத்து உண்ணலாம். யப்பானுக்கு வெளியே, இது சில சமயங்களில் சுசி அரிசி என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது அதன் பொதுவான பயன்பாடுகளில் ஒன்றாகும். இது சாகே எனும் யப்பானிய பானம் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.[2]

யப்பானில் மோச்சிகோம் (もち米) என்று அழைக்கப்படும் பசைத்தன்மை கொண்ட அரிசி, மோச்சி (餅) எனும் அரிசி அணிச்சல், ஒகோவா மற்றும் செக்கிகான் எனும் சிவப்பு அவரைச் சோறு போன்ற சிறப்பு உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுகிறது. இது ஒரு குட்டை தானிய அரிசி ஆகும்.[3] குறிப்பாக குட்டையான, வட்டமான, ஒளிபுகாத தானியங்கள், சமைக்கும்போது ஏற்படும் அதிக ஒட்டும் தன்மை, மற்றும் கெட்டியான, மெல்லக்கூடிய அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு இதை உருவுமை அரிசியிலிருந்து வேறுபடுத்தி அறியலாம்.[4]

சாகுபடி

[தொகு]

யப்பானில் தற்கால நெல் சாகுபடியானது உயர் இயந்திரமயமாக்கல், தீவிர சாகுபடி மற்றும் வேளாண் நிலப் பற்றாக்குறை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. படிக்கட்டு வடிவ நெல் வயல்கள் பல கிராமப்புற மலைச்சரிவுகளை உள்ளடக்கியுள்ளன; மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் வேளாண் நிலங்களை ஒருங்கிணைப்பதில் உள்ள அரசாங்கக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வயல்கள் ஒப்பீட்டளவில் சிறியவையாக உள்ளன.[5]

மேலும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. ↑ "Japanese rice". www.japancentre.com (ஆங்கிலம்) - 2026. Retrieved சனவரி 18, 2026.
  2. ↑ "Japanese rice". www.omicsonline.org (ஆங்கிலம்) - © 2026. Retrieved சனவரி 18, 2026.
  3. ↑ What Is Mochi? How to Make Mochi and What It’s Made Of - What is glutinous rice and why is it used? - June 5, 2025
  4. ↑ Japanese Rice - Uruchimai
  5. ↑ "Cultivation of Rice in Japan: An Analysis For Its Application in Darjeeling and Sikkim Himalayas". www.scribd.com (ஆங்கிலம்) - © 2026. https://www.scribd.com/document/882091252/1680. பார்த்த நாள்: பிப்ரவரி 2, 2026.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யப்பானிய_அரிசி&oldid=4460407" இலிருந்து மீள்விக்கப்பட்டது