யங்மிங் மலை
Appearance
யங்மிங் மலைகள் (சீனம்: 陽明山; பின்யின்: Yángmíng shān), வரலாற்று ரீதியாக யாங் மலைகள் (陽 和 山), என கூறப்படுகிறது ,[1] இந்த மலைகள் தென்மேற்கு ஹுனான் மாகாணத்தின் யங்ஜோ பகுதியில் உள்ள, டப்பங் மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு மலைப் பகுதி ஆகும். சியாவோ ஆற்றின் கிழக்கே இந்த மலைகள் அமைந்திருக்கின்றன. வடகிழக்கு ஷுவான் பாய் மாவட்டத்தில் மலைகளின் முக்கிய பகுதிகள் அமைந்துள்ளன, அதன் கிளைகள் லிங்லிங், குய்யாங் மற்றும் நிங்யுவன் மாவட்டங்களில் நீட்டித்து செல்கின்றன. யாங்மிங் மலைகள் வன்கொட்டாய் பீக் (Wangfotai Peak) உயர்ந்த இடம் ஆகும், இது 1,625 மீட்டர் (5,331 அடி) உயரம் கொண்டது, இது ஷுவான்பாய் மாவட்டத்தில் மிக உயர்ந்த இடமாகும். இது யாங்சிங்ஹான் தேசிய வன பூங்காவின் இருப்பிடமாக உள்ளது .[2]
மேற்கோள்
[தொகு]- ↑ about the name of Yangming Mountains, according to 南渭王与阳明山: 3y.uu456.com[தொடர்பிழந்த இணைப்பு], 阳明山的来历: yongzhou.gov.cn பரணிடப்பட்டது 2018-04-21 at the வந்தவழி இயந்திரம்
- ↑ baidu.com (Encyclopedia)