யக்னேஷ் தேவ்
யக்னேஷ் ரமேஷ்சந்திர தேவ் (Yagnesh Rameshchandra Dave) என்பவர் இந்தியாவில் குசராத்தினைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் ஆவார். இவர் தனது 'கந்தமஞ்சுஷா' (2014) என்ற கவிதைத் தொகுப்பிற்காக 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]யக்னேஷ் தேவ் 24 மார்ச் 1954 அன்று இந்தியாவின் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிறந்தார். இவர் சோதனை உயிரியலில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். இவர் வடோதரா உள்ள அனைத்திந்திய வானொலி நிலையத்தின் உதவி நிலைய இயக்குநராகப் பணியாற்றினார்.[1][2]
பணி
[தொகு]தேவின் முதல் கவிதைத் தொகுப்பான ஜதிஸ்மர் 1992இல் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து ஜல் நி ஆங்கே (1982), அந்தர் குல்தா தர்வாஜா (2006) மற்றும் காந்தமஞ்சுஷா (2014) ஆகியவை வெளிவந்தன. இவரது கட்டுரைகள் ஆசோ மா உகத்தோ ஆஷாத் (2000)இல் சேகரிக்கப்பட்டுள்ளன. கர் ஆங்கன் நா பக்ஷியோ மற்றும் வடதாதா நி வாடோ (1992) ஆகியவை குசராத்தி மொழியில் இவர் இயற்றிய குழந்தை இலக்கியம் ஆகும்.[1]
விருதுகள்
[தொகு]தேவின் கவிதைத் தொகுப்பான 'கந்தமஞ்சூசா'விற்காக 2021-ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றார். மேலும், இவர் ஜெயந்த் பதக் கவிதை விருது மற்றும் பி. கே. தாக்கோர் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.[1][2] இவர் 2022ஆம் ஆண்டு நரசின் மேத்தா விருது பெற்றார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 Shastri, Keshavram Kashiram (2013) [1977 (1st ed.)]. Trivedi, Shraddha; Shah, Kirtida; Shah, Pratibha (eds.). Gujaratna Saraswato ― 2 ગુજરાતના સારસ્વતો ― ખંડ ૨ [Who's Who in Literature of Gujarat ― 2] (in குஜராத்தி) (Updated ed.). Ahmedabad: Gujarat Sahitya Sabha. p. 69. கணினி நூலகம் 900401455.
- 1 2 Jariwala, Masuma Bharmal (15 February 2022). "Sahitya Akademi Award goes to Rajkotian after 27-year wait". First India. Archived from the original on 24 March 2023. Retrieved 24 March 2023.
- ↑ "ચાર કવિને અપાશે નરસિંહ મહેતા અવૉર્ડ" (in gu). Gujarati Mid-Day. 12 September 2023 இம் மூலத்தில் இருந்து 9 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231109135644/https://www.gujaratimidday.com/news/gujarat-news/article/narsingh-mehta-award-will-be-given-to-these-four-poets-from-gujarat-202799.