யகிடோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யகிடோ
மற்றொரு பெயர்
  • யகிதோ
  • கச்சிகிடோ[1]:{{{3}}}
தோன்றிய நாடுயப்பான்
பயன்சேவல் சண்டை
பண்புகள்
எடைஆண்: 2.1–2.6 கிலோ[2]:{{{3}}}
 பெண்: 1.7–2.1 கிலோ[2]:{{{3}}}
Comb typeமூன்று
வகைப்படுத்தல்
APAஇல்லை[3]:{{{3}}}
EEஆம்[4]:{{{3}}}
PCGBஆசிய, கடின இறகு[5]:{{{3}}}
குஞ்சு
காலசு காலசு டொமசிடிகசு

யகிடோ (ஆங்கிலம்: Yakido; யப்பான்: 八木戸鶏) என்பது ஜப்பானிய சண்டையிடும் கோழி இனமாகும். இது சாமோ இனத்தைச் சேர்ந்தது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தெற்கு ஒன்சூவில் உள்ள கன்சாய் பகுதியில் வளர்க்கப்பட்டது. இது 1950-ல் ஜப்பானின் இயற்கை நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.[6]:{{{3}}}

வரலாறு[தொகு]

யகிடோ சண்டை கோழியினம் சாமோ குழுவிலிருந்து பெறப்பட்டது. இவை பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில், எடோ காலத்தில் தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட மலாய் வகை பறவைகளிலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது.[7]:{{{3}}} யகிடோ பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், எடோ காலத்தின் பிற்பகுதியில், தெற்கு ஒன்சூவில் உள்ள கன்சாய் பகுதியில் உள்ள மீ பிரிபெக்ச்சரில் வளர்க்கப்பட்டது.[8]:{{{3}}}[9]:{{{3}}} இது மே 1950இன் 214 சட்டத்தின் கீழ் ஜப்பானின் இயற்கை நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டது.[6]:{{{3}}}

சிறப்பியல்புகள்[தொகு]

யகிடோ என்பது சண்டை சேவல் வகையைச் சேர்ந்த ஒரு சிறிய பறவை. இது தசையுடன் வலிமையானது, மிகவும் நிமிர்ந்து நிற்கக்கூடியது. இது கடினமான, நெருக்கமான இறகுகளைக் கொண்டுள்ளது. இதன் இறக்கைகள் உடலுடன் நெருக்கமாகக் காணப்படும். இது கருப்பு நிறத்தில் மட்டுமே காணப்படுகிறது.[4]:{{{3}}} இதனுடைய அலகு மற்றும் கால்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில சமயங்களில் கருப்பு நிற அடையாளங்களுடன் இருக்கும். மும்மடங்கு கொண்டையினைக் கொண்டவை.[8]:{{{3}}}

யகிடோ நடுத்தர அளவு மற்றும் பண்டம் கோழிகளுக்கு இடையிலான எடையினைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் இது பண்டம் கோழியாகக் கருதப்படுகிறது.[8]:{{{3}}}[2]:{{{3}}}

பயன்பாடு[தொகு]

யகிடோ பெரிய சண்டை சேவல்களுக்கு ஒரு மாற்றுக் கோழியாக உருவாக்கப்பட்டது.[8]:{{{3}}} இக்கோழிகள் வருடத்திற்கு சுமார் 80 நுரை நிற அல்லது பழுப்பு நிற முட்டைகளை இடுகின்றன. முட்டை எடை சுமார் 50 கிராம் எடையுள்ளது.[2]:{{{3}}}

மேற்கோள்கள்[தொகு]

  1. [Editorial Committee Office of the Japanese Country Report, Animal Genetic Resources Laboratory, National Institute of Agrobiological Sciences, Japan] ([n.d.]). Country Report (For FAO State of the World’s Animal Genetic Resources Process) Archived 15 October 2012. Annex to: Barbara Rischkowsky, Dafydd Pilling (editors) (2007). The State of the World's Animal Genetic Resources for Food and Agriculture. Rome: Commission on Genetic Resources for Food and Agriculture, Food and Agriculture Organization of the United Nations. ISBN 9789251057629. Archived 10 January 2017.
  2. 2.0 2.1 2.2 2.3 Rassetafeln: Yakidos (in German). Bund Deutscher Rassegeflügelzüchter. Accessed August 2017.
  3. APA Recognized Breeds and Varieties: As of January 1, 2012. American Poultry Association. Archived 4 November 2017.
  4. 4.0 4.1 Liste des races et variétés homologuée dans les pays EE (28.04.2013). Entente Européenne d’Aviculture et de Cuniculture. Archived 16 June 2013.
  5. Breed Classification. Poultry Club of Great Britain. Archived 12 June 2018.
  6. 6.0 6.1 Atsushi Tajima (2011). Potential for somatic nuclear transfer technology in domestic chickens. Avian Biology Research 4 (2): 59-61.
  7. Sayed Abdel-Maksoud Osman, Masashi Sekino, Takehito Kuwayama, Keiji Kinoshita, Masahide Nishibori, Yoshio Yamamoto, and Masaoki Tsudzuki (2006). Genetic variability and relationships of native Japanese chickens based on microsatellite DNA polymorphisms-Focusing on the natural monuments of Japan. The Journal of Poultry Science 43' (1): 12–22.
  8. 8.0 8.1 8.2 8.3 Victoria Roberts (2008). British poultry standards: complete specifications and judging points of all standardized breeds and varieties of poultry as compiled by the specialist breed clubs and recognised by the Poultry Club of Great Britain. Oxford: Blackwell. ISBN 9781405156424.
  9. Masaoki Tsudzuki (2003). Japanese native chickens. In: Hsiu-Luan Chang, Yu-chia Huang (editors) (2003). The Relationship between Indigenous Animals and Humans in APEC Region. Taipei: Chinese Society of Animal Science. Pages 91-116.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யகிடோ&oldid=3460871" இலிருந்து மீள்விக்கப்பட்டது