ம. வி. துரந்தர்
ம. வி. துரந்தர் | |
|---|---|
துரந்தரின் சுய ஓவியம், அண். 1928 | |
| பிறப்பு | 18 மார்ச்சு 1867 கோலாப்பூர், கோல்ஹாப்பூர் அரசு, பிரித்தானிய இந்தியா தற்போது மகாராட்டிரம், இந்தியா) |
| இறப்பு | 1 சூன் 1944 (அகவை 77) மும்பை, பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது மும்பை, மகாராட்டிரம், இந்தியா) |
| படித்த கல்வி நிறுவனங்கள் | சர் ஜம்செத்ஜி ஜீஜாபாய் கலைப்பள்ளி, மும்பை |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
| பிள்ளைகள் | அம்பிகா துரந்தர் |
| விருதுகள் |
|
ராவ் பகதூர் மகாதேவ் விஸ்வநாத் துரந்தர் (Mahadev Vishwanath Dhurandhar, 18 மார்ச் 1867-1 ஜூன் 1944) ஓர் இந்திய ஓவியரும்[1] மற்றும் பிரித்தானிய காலனித்துவ சகாப்தத்தைச் சேர்ந்த அஞ்சல் அட்டை கலைஞரும் ஆவார்.[2] இவரது மிகவும் பிரபலமான ஓவியங்களில் பொதுவான காலனித்துவ கால பெண்களின் விளக்கப்படங்கள் அதிகம் இடம் பெற்றன.[3]
இளமை வாழ்க்கை
[தொகு]
துரந்தர் மகாராட்டிராவின் கோலாப்பூரில் ஒரு மராத்திய பத்தாரே பிரபுத்துவக் குடும்பத்தில்[4] பிறந்தார்.[5] கோலாப்பூரில் உள்ள இராஜாராம் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, 1890 ஆம் ஆண்டில் மும்பையிலுள்ள ஜே. ஜே. கலைப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு கலைஞர் ஜான் கிரிஃபித்ஸின் மாணவராக இருந்தார். ஒரு மாணவராக இவர் தனது பணிக்காக பல பதக்கங்களை வென்றார். 1895 இல் பட்டம் பெற்றார்.[6]
தொழில் வாழ்க்கை
[தொகு]ஜே. ஜே. கலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, துரந்தர் 1896 ஆம் ஆண்டில் அதே பள்ளியில் ஒரு ஆசிரியராகச்ச் சேர்ந்து தனது வாழ்க்கையின் எஞ்சிய காலத்தை கழித்தார். 1910இல் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 1918 ஆம் ஆண்டில் வரைதல் மற்றும் கைவினை ஆய்வாளராக நியமிக்கப்பட்ட துரந்தர், 1931 வரை அந்த பதவியில் பணியாற்றினார். ஓய்வு பெறுவதற்கு முன்பு இரண்டு ஆண்டுகள் துணை முதல்வராக இருந்தார்.[7] 1938 ஆம் ஆண்டில், துரந்தர் அரச கழகத்தின் கலைச் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8]
பாணியும் படைப்புகளும்
[தொகு]மும்பை நகரத்தையும் அதன் மக்களையும் ஆவணப்படுத்துவதும், இந்து புராணங்கள் மற்றும் ஓமர் கய்யாமின் படைப்புகளில் இருந்து காட்சிகளை வரைவதும் இவரது பிரபலமான படைப்புகளில் அடங்கும்.[9] ஒரு சிறந்த கலைஞரான துரந்தர், ஓட்டோ ரோத்ஃபீல்ட் எழுதிய இந்தியாவின் பெண்கள் (1920) என்ற புத்தகத்திற்காக சில ஓவியங்கள் மற்றும் விளக்கப்படங்களை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.[10] துரந்தர் அஞ்சல் அட்டைகளையும் வடிவமைத்தார். எஸ். எம். எட்வர்டஸ், பை-வேஸ் ஆஃப் பாம்பே (1912) மற்றும் சி. ஏ. கின்கெய்டின் டெக்கன் நர்சரி டேல்ஸ் ஆகியவற்றிற்கான விளக்கப்படங்களை வழங்கினார். மேலும் அராம் மற்றும் பூட் என்ற குஜராத்தி பத்திரிகைக்கான ஓவியங்களையும் வரைந்தார்.[11] ரவி வர்மா அச்சகம் வெளியிட்ட மதம் சம்பந்தமான நூல்களுக்கும் இவர் ஓவியங்களை வரைந்தார். ஜே. ஜே. பள்ளியில் படித்த தனது நினைவுகள் குறித்து மராத்தியில் சுயசரிதை ஒன்றை எழுதினார். 1926 ஆம் ஆண்டில், சிவாஜியின் வாழ்க்கை குறித்த ஓவியங்களை உருவாக்க அவுந்த் மாநிலத்தின் ஆட்சியாளரான மகாராஜா பவன்ராவ் ஸ்ரீனிவாசராவ் பந்த் பிரதிநிதியால் இவர் நியமிக்கப்பட்டார்.[12]
ஓவியங்கள்
[தொகு]-
சுரந்தரின் சுய ஓவியம்
-
குஜராத்திப் பத்திரிக்கையின் 1916 இதழின் அட்டைப்படம்.
-
பவன் கிந்தில் பாஜி பிரபு தேஷ்பாண்டேவுடன் சிவாஜி
-
1927 ஆம் ஆண்டு போரில் தாராபாயின் சித்தரிப்பு.
-
லெஹங்கா ஆடையணிந்த பெண்கள்
-
சிவனின் மாலை நேரத்து நடனம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Promoting contemporary art". தி இந்து (Chennai, India). 17 January 2008 இம் மூலத்தில் இருந்து 21 January 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080121065801/http://www.hindu.com/2008/01/17/stories/2008011751200200.htm.
- ↑ "Women Of India By M.v. Dhurandhar". Archived from the original on 20 சனவரி 2016.
- ↑ "Still life to move art lovers". தி இந்து (Chennai, India). 13 December 2007 இம் மூலத்தில் இருந்து 15 December 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071215181411/http://www.hindu.com/2007/12/13/stories/2007121350940200.htm.
- ↑ Partha Mitter (1994). "The Age of Optimism". Art and Nationalism in Colonial India, 1850-1922: Occidental Orientations. Cambridge University Press. ISBN 978-0521443548.
- ↑ "Profile of master artist M. V. Dhurandhar on Indiaart.com". www.indiaart.com. Retrieved 2021-02-07.
- ↑ "Kipling's home may become a museum". தி இந்து (Chennai, India). 5 March 2007 இம் மூலத்தில் இருந்து 6 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121106224338/http://www.hindu.com/2007/03/05/stories/2007030505331300.htm.
- ↑ "M V Dhurandhar Profile: Delhi Art Gallery". Archived from the original on 19 July 2010. Retrieved 2010-07-24.
- ↑ "COUNCIL". Journal of the Royal Society of Arts 86 (4470): 885–886. 1938. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-9114. https://www.jstor.org/stable/41362749.
- ↑ "Array of art". 30 July 2009.
- ↑ "M. V. Dhurandhar". Images of Asia. Archived from the original on 26 March 2012. Retrieved 27 April 2012.
- ↑ Partha Mitter (1994). Art and Nationalism in Colonial India, 1850-1922: Occidental Orientations. Cambridge University Press. pp. 91–. ISBN 978-0-521-44354-8. Retrieved 27 April 2012.
- ↑ "M. V. Dhurandhar The Romantic Realist" (PDF). ngmaindia.gov.in.
மேலும் வாசிக்க
[தொகு]- Partha Mitter (1994). Art and Nationalism in Colonial India, 1850-1922: Occidental Orientations. Cambridge University Press. pp. 91–. ISBN 978-0-521-44354-8. Retrieved 27 April 2012.
- Allan Life. "Picture Postcards by M.V. Dhurandhar: Scenes and Types of India-with a Difference," in Visual Resources (XVII, pp. 401–416, 2001).
- Dhurandhar, M. V. "Kalamandirantil Ekechalish Varsham" [Marathi autobiography] Bombay, 1940.