ம. மு. சுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். எம். சுப்பிரமணியம்
M. M. Subramaniam
இலங்கை சட்டப்பேரவை, அரசாங்க சபை உறுப்பினர்
திருகோணமலைக்கான
சட்டவாக்கப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1924–1930
திருகோணமலை-மட்டக்களப்பு
அரசாங்க சபை உறுப்பினர்
பதவியில்
1931–1936
பின்னவர்இ. இரா. தம்பிமுத்து
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅண். 1870
இறப்பு1945
பிள்ளைகள்அழகராஜா, தர்மராஜா, மாணிக்கராஜா
தொழில்வழக்கறிஞர்
இனம்இலங்கைத் தமிழர்

மயில்வாகனம் முதலியார் சுப்பிரமணியம் (Mylvaganam Mudaliyar Subramaniam, (1870 – 1945) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கை அரசாங்க சபை உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சுப்பிரமணியம் ஏறத்தாழ 1870 அளவில் பிறந்தார்.[1] இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் சம்பத்தீவு என்ற இடத்தில் தென்னந்தோட்டங்களுக்கு உரிமையாளராகவிருந்த மயில்வாகனம் முதலியாருக்குப் பிறந்தார்.[1] சுப்பிரமணியத்திற்கு மூன்று மகன்கள்: அழகராஜா, தர்மராஜா, மாணிக்கராஜா ஆகியோர் ஆவர்.[1]

பணி[தொகு]

சுப்பிரமணியம் அரச வழக்கறிஞராகப் பணியாற்றியவர். திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபையில் உறுப்பினராக இருந்தவர்.[1] 1924 இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தெரிவானார்.[1][2][3] 1931 இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் திருகோணமலை-மட்டக்களப்புத் தொகுதியில் போட்டியிட்டு இலங்கை அரசாங்க சபைக்குத் தெரிவானார்.[1][4] 1931 சூலையில் புதிய அரசாங்க சபை கூடிய போது இவர் குழுக்களுக்கான துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] 1936 அரசாங்க சபைத் தேர்தலில் திருகோணமலை-மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட்டு ஈ. ஆர். தம்பிமுத்துவிடம் 7,429 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.[6]

சுப்பிரமணியம் 1945 இல் காலமானார்.[1] இவரது மகன் எஸ். எம். மாணிக்கராசா திருகோணமலைத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

தேர்தல் வரலாறு[தொகு]

எம். எம். சுப்பிரமணியத்தின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
1924 சட்டவாக்கப் பேரவை திருகோணமலை தெரிவு
1931 அரசாங்க சபை திருகோணமலை-மட்டக்களப்பு தெரிவு
1936 அரசாங்க சபை திருகோணமலை-மட்டக்களப்பு 4,348
வெற்றி பெற்றவர்: ஈ. ஆர். தம்பிமுத்து[6]
தோல்வி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 S. Arumugam (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 212–213. http://noolaham.net/project/19/1810/1810.pdf. 
  2. Rajasingham, K. T.. "Chapter 5: Political polarization on communal lines". Sri Lanka: The Untold Story இம் மூலத்தில் இருந்து 2001-10-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20011025040847/http://www.atimes.com/ind-pak/CI08Df01.html. பார்த்த நாள்: 2020-03-20. 
  3. Sabaratnam, T. T.. "Chapter 19: The Birth and Death of the Jaffna Youth Congress". Sri Lankan Tamil Struggle. http://sangam.org/2010/12/Tamil_Struggle_19.php?uid=4171. 
  4. Rajasingham, K. T.. "Chapter 7: State Councils - elections and boycotts". Sri Lanka: The Untold Story இம் மூலத்தில் இருந்து 2009-06-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090624090234/http://atimes.com/ind-pak/CI22Df02.html. பார்த்த நாள்: 2020-03-20. 
  5. "First State Council begins". சண்டே டைம்சு]]. 8 July 2007. http://www.sundaytimes.lk/070708/FunDay/heritage.html. 
  6. 6.0 6.1 "இலங்கைப் பொதுத்தேர்தல் பெறுபேறு". ஈழகேசரி. 1 மார்ச் 1936. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._மு._சுப்பிரமணியம்&oldid=3223237" இலிருந்து மீள்விக்கப்பட்டது