ம. தியாகராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ம. தியாகராஜா
வவுனியா மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 அக்டோபர் 2013
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புவயிரவப்புளியங்குளம், வவுனியா, இலங்கை
அரசியல் கட்சிஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இனம்இலங்கைத் தமிழர்

மயில்வாகனம் தியாகராசா இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தியாகராசா வவுனியா மாவட்டம் வைரவப்புளியங்குளத்தைச் சேர்ந்தவர். வவுனியா கனகராயன்குளம் கமநலசேவை நிலையத்தில் களஞ்சியப் பொறுப்பாளராக அரச சேவையில் இணைந்த இவர் பயிர்ச்செய்கை அலுவலராகவும் பின்னர் கிராமசேவை அலுவலராக வவுனியா மாவட்டத்தில் பல இடங்களிலும் பணியாற்றினார். இவர் ஒரு சமாதான நீதவானும் ஆவார்.[1]

அரசியலில்[தொகு]

தியாகராஜா 2013 வட மாகாண சபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டு 11,681 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார்.[2][3] இவர் 2013 அக்டோபர் 16 ஆம் நாள் வவுனியாவில் சட்டத்தரணி ஒருவரின் முன்னிலையில் மாகாண சபை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._தியாகராசா&oldid=3252813" இலிருந்து மீள்விக்கப்பட்டது