ம. க. வேற்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ம. க. வேற்பிள்ளை
MKVetpillai.jpg
பிறப்புசனவரி 8, 1847
மட்டுவில், யாழ்ப்பாண மாவட்டம்
இறப்பு1930 (அகவை 82–83)
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஉரையாசிரியர்
சமயம்இந்து
பெற்றோர்கணபதிப்பிள்ளை உடையார்
பிள்ளைகள்ம. வே. திருஞானசம்பந்தம், வே.மாணிக்கவாசகர், ம. வே. மகாலிங்கசிவம், நடராசா, கந்தசாமி
உறவினர்கள்ம. பார்வதிநாதசிவம் (பேரன்)

ம. க. வேற்பிள்ளை (சனவரி 8, 1847 - 1930) இலங்கைத் தமிழ் உரையாசிரியரும், தமிழறிஞரும், பதிப்பாசிரியரும், தமிழாசிரியரும் ஆவார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

வேற்பிள்ளை யாழ்ப்பாணம், மட்டுவில் என்ற ஊரில் கணபதிப்பிள்ளை உடையார், புலோலியைச் சேர்ந்த உமாமகேசுவரி[2] ஆகியோருக்குப் பிறந்தவர். மட்டுவில் சண்முகம்பிள்ளை, நல்லூர் கார்த்திகேயப் புலவர், ஆறுமுக நாவலர் ஆகியோரிடம் கல்வி கற்றவர்.[1] சிதம்பரம் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்றார். செய்யுள் இயற்றுவதில் வல்லவராக இருந்ததால் சிதம்பரம் முத்தையா பட்டர் இவருக்கு "பிள்ளைக்கவி" என்ற பட்டத்தை அளித்தார்.[1] இவரது உரையெழுதும் திறமையை வியந்த வித்துவ சிரோமணி பொன்னம்பலப் பிள்ளை இவருக்கு "உரையாசிரியர்" என்னும் பட்டத்தை அளித்தார்.[2]

ம. வே. திருஞானசம்பந்தம், சட்ட அறிஞர் வே. மாணிக்கவாசகர், குருமணி ம. வே. மகாலிங்கசிவம், நடராசா, கந்தசாமி ஆகியோர் ம. க. வேற்பிள்ளையின் பிள்ளைகள் ஆவர்.[2] புலவர் ம. பார்வதிநாதசிவம் இவரின் பேரனாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

Noolagam logo.jpg
தளத்தில்
ம. க. வேற்பிள்ளை எழுதிய
நூல்கள் உள்ளன.
  • சந்திரமெளலீசர் சதகம் என்னும் ஈழமண்டல சதகம்
  • ஆருயிர்க் கண்மணி மாலை
  • புலோலி வைரவக் கடவுள் தோத்திரம்

உரைகள்[தொகு]

  • திருவாதவூரடிகள் புராண விருத்தியுரை
  • புலியூரந்தாதி
  • அபிராமி அந்தாதி
  • கெவுளிநூல் விளக்கவுரை[2]

பதிப்பித்த நூல்கள்[தொகு]

  • வேதாரணிய புராணம்
  • சிவகாமியம்மை சதகம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._க._வேற்பிள்ளை&oldid=2932939" இருந்து மீள்விக்கப்பட்டது