ம. காமுத்துரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ம.காமுத்துரை
பிறப்புசெப்டம்பர் 16, 1960 (1960-09-16) (அகவை 62)
அல்லி நகரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு
இருப்பிடம்அல்லி நகரம்
தேசியம் இந்தியா
அறியப்படுவதுஎழுத்தாளர்
பெற்றோர்
வாழ்க்கைத்
துணை
வேணி
பிள்ளைகள்விக்னேஷ்,
நாகேந்திரன்
வலைத்தளம்
http://www./

ம.காமுத்துரை ஒரு தமிழ் எழுத்தாளர். தமிழில் வெளியாகும் பல பத்திரிகைகளில் சிறுகதைகள், நாவல்கள் என 1980 களில் இருந்து எழுதி வருகிறார். தேனியில் வாடகை பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

நூல்கள்[தொகு]

இவர் எழுதி வெளியான நூல்கள்

 1. விடுபட - சிறுகதைத் தொகுப்பு
 2. நல்லதண்ணிக் கிணறு - சிறுகதைத் தொகுப்பு
 3. காமுத்துரை கதைகள் - சிறுகதைத் தொகுப்பு
 4. கப்பலில் வந்த நகரம் - சிறுகதைத் தொகுப்பு
 5. நாளைக்குச் செத்துப் போனவன் - சிறுகதைத் தொகுப்பு
 6. கனா - சிறுகதைத் தொகுப்பு
 7. பூமணி - சிறுகதைத் தொகுப்பு
 8. குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை - சிறுகதைத் தொகுப்பு
 9. புழுதிச் சூடு - சிறுகதைத் தொகுப்பு
 10. முற்றாத இரவொன்றில்.. - நாவல்
 11. மில் - நாவல்
 12. கோட்டை வீடு - நாவல்

பரிசுகள்[தொகு]

 • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு
 • குமுதம்வெள்ளீவிழா கதைப்போட்டியில் சிறப்பு பரிசு
 • சிறந்த சிறுகதைக்கான அமரர் ஜோதிவிநாயகம் நினைவு பரிசு

விருதுகள்[தொகு]

 • 1998ம் ஆண்டின் சிறந்த சிறுகதை நூலுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
 • ஆதித்தனார் நூற்றாண்டு நினைவு நாள் விருது
 • இளங்குயில் இலக்கிய இயக்கத்தின் ஆண்டு விருது
 • நூலக ஆணைக்குழுவின் சிறந்த படைப்பாளர் விருது
 • சுஜாதா அறக்கட்டளை – உயிர்மை இதழின் சிறந்த நாவலுக்கான விருது
 • ஆனந்தவிகடன் வழங்கிய சிறந்த நாவலாசிரியருக்கான விருது


இலக்கிய அமைப்புகளில் ஈடுபாடு[தொகு]

 • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர்


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._காமுத்துரை&oldid=2757749" இருந்து மீள்விக்கப்பட்டது