ம. ஓ. தி. அய்யங்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ம. ஓ. தி. அய்யங்கார்
படித்த இடங்கள்

மண்டையம் ஓசூரி திருநாராயண அய்யங்கார் (Mandayam Osuri Tirunarayana Iyengar)(6 பிப்ரவரி 1895 - 16 செப்டம்பர் 1972) என்பவர் இந்திய மருத்துவ பூச்சியியல் நிபுணர் ஆவார். இவர் பைலேரியா மற்றும் மலேரியா நோய்க் கடத்திகளை மேலாண்மை செய்யும் ஆய்வில் பணியாற்றினார். வங்காளத்தில் உள்ள மலேரியா ஆராய்ச்சித் துறையில் பூச்சியியல் நிபுணராகப் பணிபுரிந்தார். மெர்மிதிட் ஒட்டுண்ணியான உரோமானொமெர்மிசு அய்யங்காரி மற்றும் குயுலெக்சு அய்யங்காரி என்ற கொசு சிற்றினங்கள் இவரது பெயரால் அழைக்கப்படுகின்றன.

வாழ்க்கை மற்றும் பணி[தொகு]

அய்யங்கார் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் முக்கிய குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ம. ஓ. அழசிங்கராச்சாரியார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்தார். மேலும் இவரது மூத்த சகோதரர் தாவரவியலாளர் ம. ஓ. பி. அய்யங்கார் ஆவார். திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்து , சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, 1918 முதல் கல்கத்தாவில் உள்ள பெங்கால் மலேரியா ஆராய்ச்சி ஆய்வகத்தில் பூச்சியியல் வல்லுநராகப் பணியில் சேர்ந்தார். இவர் பொதுச் சுகாதார மாணவர்களுக்கு மருத்துவ ஒட்டுண்ணியியல் மற்றும் பூச்சியியல் பாடங்களைக் கற்பித்தார். 1922 மற்றும் 1923க்கும் இடையில் கல்கத்தாவில் உள்ள வெப்பமண்டல மருத்துவ பள்ளியில் மருத்துவ பூச்சியியல் பேராசிரியராக பணியாற்றினார். இவர் தாவரவியலிலும் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொண்டார். குறிப்பாக இவர் கொசுக்களைப் படிக்கும் நீர் வாழ் வாழ்விடங்களுடன் இணைந்து,[1][2] மேலும் மோனோகோரியாவின் மலர் உயிரியலை விவரித்தார். 1932இல் அனோபிலிசின் இளம் உயிரிகளுடன் தொடர்புடைய சாராசியம்[3] (பாசி) குறித்து தனது சகோதரருடன் வெளியிட்டார்.[4][5][6] இவர் 1931 மற்றும் 1934க்குமிடையில்[7] ராக்பெல்லர் அறக்கட்டளையின் கீழ் திருவிதாங்கூர் மாநிலத்திற்கான பைலேரியாசிசு பற்றிய[8] ஆலோசகராகவும், உலக சுகாதார அமைப்பிற்காக நியூ கினியா,[9] சமோவா மற்றும் தாய்லாந்து.[10] உள்ளிட்ட நாடுகளிலும் பணியாற்றினார். இவர் பி. ஏ. பக்சுடன், வில்ஹெல்ம் ஷூப்னர், ஹென்றி காலியார்ட், என். எச். சுவெல்லங்க்ரெபெல் மற்றும் பி. ஜி. ஷுட் உட்பட உலகெங்கிலும் உள்ள மற்ற மலேரியாவியலாளர்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றினார். இவர் கொசுக்களின் இளம் உயிரிகளின் இயற்கையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.[11] மேலும் கோலோமோமைசசு குழுவில் உள்ள பூஞ்சைகளைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு மெர்மிதிட்டையும் அடையாளம் கண்டார். ரோமானோமெர்மிசு அய்யங்காரி என்று பெயரிடப்பட்ட மெர்மிதிட், உலகம் முழுவதும் அனோபிலிசு கொசுக்களைக் கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.[12] இவரது பிற கண்டுபிடிப்புகள், கொசுக்களால் இரத்தத்தில் செலுத்தப்பட்ட மைக்ரோபைலேரியா, முன்பு நினைத்தபடி வயிற்றுச் சுவரிற்கு மாறாக முன் இரைப்பை சுவர் வழியாக இரத்தக்குழியினுள் நுழைவது குறித்ததாகும்.[13] அய்யங்கார் தனது தொழில்முறை பணியில் இல்லாத பூச்சியியல் குறிப்புகளையும் வெளியிட்டார். மனித குடலிலிருந்து மலத்துடன் வெளிவரும் வயதுவந்த கோப்ரிட் வண்டுகள் பற்றிய குறிப்புகள் இதில் அடங்கும்.[14] முனைவர் ம. ஓ. தி. அய்யங்கார் நினைவு விருது 1983-ல் இவரது மனைவி ருக்குமணி அய்யங்காரால் நிறுவப்பட்டது.

வெளியீடுகள்[தொகு]

கல்கத்தாவில், சி. 1924

பிரசுரங்களின் முழுமையான பட்டியல் ஐயங்கார் & காந்தி (2009) இல் கொடுக்கப்பட்டுள்ளது. சில முக்கிய வெளியீடுகள் பின்வருமாறு:

 • On the biology of the flowers of Monochoria. J. Indian Bot. Soc, 170-173, April 1923
 • The anopheline fauna of a swamp in Bangalore. Indian J. Med. Res.,13:697-702,1926
 • Infestation of the human intestines by coprid beetles. Indian Med. Gaz., 63, 365-369, 1928.
 • The larva of Anopheles turkhudi. Indian J. Med. Res., 17:1189-1192, 1930
 • Filariasis in North Travancore. Indian J. Med. Res.,  20, 671-672, 1933
 • Rat-flea survey in Peermade District, Travancore. Indian J. Med. Res., 21:723-730,1934
 • The identification of common rat-fleas of India. Indian J. Med. Res., 22:675-686,1935
 • Public health aspects of filariasis in India. Indian Med. Gaz,  72:300-307,  1937.
 • Naturalistic  control  of the  breeding  of Anopheles  sundaicus  by means  of  Eichomia  cover. J. Malar.  Inst. India,  6:309-310,1946.  
 • Mosquitoes of the Maldive Islands. Bull. Ent. Res., 46:1-10, 1955. (with  M.A.U. Menon).
 • Infection experiments with a fungus (Coelomomyces) which kills malarial mosquitoes. Science, 158, 526, 1967. (with J.N. Couch and C.J. Umphlett)
 • Developmental Stages Of Filariae In Mosquitoes. 5th. Pacif. Comm. Tech. Pap., No. 104, 11 pages, 1957

மேற்கோள்கள்[தொகு]

 1. Iyengar, M. O. T. (1933). "Ovípositíon in Mosquitoes of the Subgenus Mansonioides". Indian Journal of Medical Research 21 (1): 101–102. 
 2. Iyengar, M. O. T. (1935). "Biology of Indian Mosquito Larvae that attach themselves to the Roots of Water Plants". Proceedings of the Royal Entomological Society of London 10 (1): 9–11. 
 3. Iyengar, M. O. P.; Iyengar, M. O. T. (1932). "On a Characium Growing on Anopheles Larvae". The New Phytologist 31 (1): 66–69. doi:10.1111/j.1469-8137.1932.tb07434.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-646X. http://www.jstor.org/stable/2428408. 
 4. Iyengar, M. O. P.; Iyengar, M. O. T. (1932). "On a Characium Growing on Anopheles Larvae". The New Phytologist 31 (1): 66–69. doi:10.1111/j.1469-8137.1932.tb07434.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-646X. http://www.jstor.org/stable/2428408. 
 5. Iyengar, M.O.T. (1932). "On the biology of flowers of Monochoria". Journal of the Indian Botanical Society 3: 170–173. 
 6. Iyengar, M. O. T. (1944). "Problems relating to Malaria Control in deltaic Bengal". Journal of the Malaria Institute of India 5 (4): 435–447. 
 7. Iyengar, M. O. T. (1954). "Vector of Malaria in Kabul, Afghanistan". Transactions of the Royal Society of Tropical Medicine and Hygiene 48 (4): 319–324. doi:10.1016/0035-9203(54)90102-9. பப்மெட்:13187562. 
 8. Iyengar, M.O.T. (1952). "Filariasis in the Maldive Islands". Bulletin of the World Health Organization 7 (4): 375–403. பப்மெட்:13032785. 
 9. Iyengar, M. O. T.; Rook, H. De; Dijk, W. J. O. M. Van (1959). "Interruption of transmission of Anopheles-borne filariasis by indoor residual spraying in Netherlands New Guinea". Tropical and Geographical Medicine 11 (3): 287–290. பப்மெட்:14406180. 
 10. Iyengar, M. O. T.; Menon, M. A. U. (1956). "The Mosquitos of south Thailand" (in en). Bulletin of Entomological Research 47 (4): 785–795. doi:10.1017/S0007485300047015. பன்னாட்டுத் தர தொடர் எண்:0007-4853. 
 11. Iyengar, M. O. T. (1938). "Natural parasites of mosquitoes in India". Proceedings of the National Institute of Sciences of India 4 (2): 237–239. 
 12. Abagli, Ayaba Z.; Alavo, Thiery B. C.; Perez-Pacheco, Rafael; Platzer, Edward G. (2019). "Efficacy of the mermithid nematode, Romanomermis iyengari, for the biocontrol of Anopheles gambiae, the major malaria vector in sub-Saharan Africa". Parasites & Vectors 12 (1): 253. doi:10.1186/s13071-019-3508-6. பப்மெட்:31118105. 
 13. Iyengar, M. O. T. (1936). "Entry of Filaria Larvae into the Body Cavity of the Mosquito" (in en). Parasitology 28 (2): 190–194. doi:10.1017/S0031182000022381. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-1820. https://www.cambridge.org/core/product/identifier/S0031182000022381/type/journal_article. 
 14. Iyengar, M.O.T. (1928). "Infestation of the human intestine by coprid beetles in Bengal". Indian Medical Gazette 63 (7): 365–369. பப்மெட்:29011607. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._ஓ._தி._அய்யங்கார்&oldid=3610506" இலிருந்து மீள்விக்கப்பட்டது