ம. இலெ. தங்கப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ம. இலெ. தங்கப்பா ( 8 மார்ச்சு 1934–31 மே 2018) ஒரு தமிழறிஞர், தனித்தமிழ் உணர்வு மிக்கவர். புதுச்சேரி அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு முதலிய துறைகளில் பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது ஆந்தைப்பாட்டு மிக முக்கியமான பகடி இலக்கியமாகும். பென்குயின் பதிப்பக வெளியீடாக வந்துள்ள ‘LOVE STANDS ALONE' என்னும் மொழிபெயர்ப்பு நூல் சங்க இலக்கியப் பாடல்களை ஆங்கிலத்தில் தருவதாகும். அவர் எழுதியுள்ள நூல்களில் இயற்கை ஆற்றுப்படை, எது வாழ்க்கை?, கொடுத்தலே வாழ்க்கை ஆகியவையும் மிகவும் குறிப்பிடத்தக்கவை ஆகும். குழந்தை இலக்கியத்திற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றுள்ளார். வேலூர் இலக்கியப் பேரவை வழங்கும் வாழ்நாள் சாதனைக்கான விருதையும் இவர் பெற்றுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._இலெ._தங்கப்பா&oldid=2889443" இருந்து மீள்விக்கப்பட்டது