உள்ளடக்கத்துக்குச் செல்

மௌல்வி சமி உல்லா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மௌல்வி
முகமது சமி உல்லா கான்
Mahomed Samee Ullah Khan
புனித மைக்கேல் மற்றும் புனித சியார்ச்சு திருச்சபை
பிறப்பு1834
தில்லி
இறப்பு7 ஏப்ரல் 1908(1908-04-07) (அகவை 73)
அலிகார்
பிள்ளைகள்2. (முகமது அமீது உல்லா கான் உட்பட)

மௌல்வி சமி உல்லா கான் (Moulvi Samee Ullah Khan) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நீதிபதியும் கல்வியாளரும் ஆவார். மௌல்வி முகமது சமி உல்லா கான் என்ற பெயராலும் அறியப்படுகிறார். அலிகார் இயக்கத்தில் முக்கியப் பங்காற்றிய இவர், முகமதன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை நிறுவியவர்களுள் ஒருவராகவும், சையது அகமது கானின் நெருங்கிய கூட்டாளியாகவும் திகழ்ந்தார்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

மௌல்வி சமி உல்லா கான் 1834-ஆம் ஆண்டில் பிறந்தார். டேவிட் ஆக்டர்லோனியின் உதவியாளரான முகமது அச்சிசுல்லா கான் இவரது தந்தையாவார்.[1]

தொழில்

[தொகு]

1873-ஆம் ஆண்டில் இவர் ஒரு துணை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1884-ஆம் ஆண்டில், லார்ட் நார்த்புரூக்கின் பணியாளர் குழுவில் சேர்க்கப்பட்டு எகிப்துக்கு அனுப்பப்பட்டார். 1892-ஆம் ஆண்டில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று அலிகாரில் குடியேறினார்.[1](pp11–16)

அலிகார் இயக்கத்தில் பங்கு

[தொகு]

1875-ஆம் ஆண்டில், அலிகாரில் இருந்த இவரது பங்களாவில் அரை டசன் மாணவர்களுடன் 'மதரசத்துல் உலூம் முசுலிமானன்-ஏ-இந்த் நிறுவப்பட்டது.[1](பக்.4)[3] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இக்கல்லூரி 'முகம்மதன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 'அகில இந்திய முகம்மதன் கல்வி மாநாட்டின்'முதல் அமர்வுக்கு இவர் தலைமை தாங்கினார்.

பிற்கால வாழ்க்கை

[தொகு]

1904-ஆம் ஆண்டில் அச் புனித யாத்திரையை மேற்கொண்டார். ஒரு குறுகிய கால உடல்நலக்குறைவுக்குப் பிறகு, 1908 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 அன்று அலிகாரில் காலமானார். தில்லியில் அடக்கம் செய்யப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்த மகன் முகமது அமீதுல்லா கான் ஐதராபாத்து மாநிலத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். இளைய மகன் மச்சித்து-உல்லா கான் போபால் மாநிலத்தின் அவையில் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 "In Memoriam. Haji Moulvi M. Samee-Ullah Khan Bahadur, C.M.G." (PDF).
  2. ↑ Muhammad, Shan (1978). The Aligarh Movement. p. 131.
  3. ↑ Parekh, Rauf (2016-05-30). "LITERARY NOTES: A forgotten hero's rare 19th-century Urdu travelogue". DAWN.COM (in ஆங்கிலம்). Retrieved 2023-07-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌல்வி_சமி_உல்லா_கான்&oldid=4627799" இலிருந்து மீள்விக்கப்பட்டது