மௌலிபஜார் மாவட்டம்

மௌலிபஜார் மாவட்டம் (Moulvibazar district) (வங்காள மொழி: মৌলভীবাজার জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் சில்ஹெட் கோட்டத்தில் உள்ளது. வடகிழக்கு வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மௌலிபஜார் நகரம் ஆகும்.[1] [2] [3]
நிலவியல்[தொகு]

வடகிழக்கு வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டம் 2,707 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தின் வடக்கில் சில்ஹெட் மாவட்டம், மேற்கில் ஹபிகஞ்ச் மாவட்டம், கிழக்கில் இந்தியாவின் அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களும், தெற்கில் இந்தியாவின் திரிபுராவும் எல்லைகளாகக் கொண்டது.[4]
நிர்வாகம்[தொகு]
2799.38 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட மௌலிபஜார் மாவட்டம், ஏழு துணை மாவட்டங்களையும், ஐந்து நகராட்சிகளையும், 67 உள்ளாட்சி ஒன்றியங்களையும், 2015 கிராமங்களையும் கொண்டுள்ளது.
மக்கள் தொகையியல்[தொகு]

2799.38 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 19,19,062 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 9,44,728 ஆகவும், பெண்கள் 9,74,334 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 97 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 686 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 51.1 % ஆக உள்ளது.[5]
போக்குவரத்து[தொகு]
இம்மாவட்டதின் குலௌரா தொடருந்து நிலையம் மற்றும் ஸ்ரீமங்கள் தொடருந்து நிலையங்கள் நாட்டின் தலைநகரான டாக்கா வரை இணைக்கிறது.
பிற முக்கிய தகவல்கள்[தொகு]

இம்மாவட்டம் நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 3200 ஆகும். 92 தேயிலைத் தோட்டங்களும், பத்து இரப்பர் தோட்டங்களும், இரண்டு இயற்கை எரிவாயு சுரங்கங்களும் கொண்டுள்ளது. மோனு, தோலாய், சோனாய், ஃபனாய், கோபாலா, கோண்டினலா, சூரி, பிலாம் முதலிய ஆறுகள் இங்கு பாய்கிறது. இம்மாவட்டத்தில் தேயிலை, நெல், வெற்றிலை, பாக்கு, அன்னாசி, பலா, ஆரஞ்ச், மூங்கில் விளைகிறது. [6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Shah Abdul Wadud (2012). "Maulvibazar District". in Sirajul Islam and Ahmed A. Jamal. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Maulvibazar_District.
- ↑ "List of Institutes in Moulavibazar District". Government of the People's Republic of Bangladesh, Directorate General of Health Services இம் மூலத்தில் இருந்து 8 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120808021626/http://app.dghs.gov.bd/inst_info/districts/m_bazar.php. பார்த்த நாள்: 27 Aug 2013.
- ↑ "Estimates of Aman Rice, 2012-2013". Bangladesh Bureau of Statistics Agriculture Wing இம் மூலத்தில் இருந்து 13 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131113170057/http://www.bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/AgricultureCensus/Aman-2012-13.pdf. பார்த்த நாள்: 27 Aug 2013.
- ↑ Moulvibazar District, Bangladesh
- ↑ Community Report Maulvibazar Zila June 2012
- ↑ Moulvibazar District, Bangladesh