மௌலானா மஸ்ஊத் அஸ்ஹர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெளலானா மசூத் அசார் (Maulana Masood Azhar) பாகிஸ்தானைச் சேர்ந்த ஜிகாத் தீவிரவாதி ஆவான். ஜெய்ஸ்-இ-முகமது எனும் தடை செய்யப்பட்டத் தீவிரவாதக் குழுவை அமைத்தவன் ஆவான். இந்தியாவின் தேடப்படும் குற்றவாளிகளுள் மிகவும் முக்கியமானவன்.[1][2]

வாழ்க்கை[தொகு]

மெளலானா மசூத் அசார் பாகிஸ்தானின் பவால்பூர் பகுதியில் 1968 ஆம் ஆண்டு 10 சகோதர சகோதரிகளுடன் பிறந்தவன்.[3] சில தகவல்களில் இவன் 11 குழதைகளுள் மூன்றாவதாக 1968 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7 ஆம் தியதி பிறந்தவன் என குறிப்பிடப்பட்டுள்ளது.[2] இவனது தந்தை அல்லா பக்ஸ் ஷபிர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர். இவர்களுக்கு சொந்தமாகக் கோழிப் பண்ணை உண்டு. மெளலானா மசூத் அசார் பாகிஸ்தானின் கராச்சி நகரில் படித்தவன். அங்கு ஹர்கத்-உல்-அன்சார் எனும் அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. சோவியத்- ஆஃப்கான் போரில் பங்கு பெற்று காயமைந்த பின் ஹர்கத்-உல்-அன்சார் அமைப்பு உருதுப் பத்திரிகையில் பணி செய்ய அனுப்பியது.[2][3] பின்னர் மெளலானா மசூத் அசார் ஹர்கத்-உல்-அன்சார் அமைப்பின் தலைவரானதும் சாம்பியா அபு துபை, சவுதி அரேபியா, அல்பேனியா, மங்கோலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து தனது குழுவுக்கு ஆட்களைச் சேர்த்தல், நிதி வசூலித்தல் மற்றும் தனது குழுவின் கொள்கைகளைப் பரப்புதல் ஆகியவற்றில் ஈடுபட்டான்.[3]

சோமாலியப் பயணம்[தொகு]

மெளலானா மசூத் அசார் தனது இயக்கத்திற்கு ஆட்களைச் சேர்பதற்காகவும், அல் காயிதா இயக்கக் குழுக்களுடன் தொடர்பு கொள்வதற்காகவும் மற்றும் நிதி திரட்டுதல் போன்ற செயல்களுக்காக சோமாலியா நாட்டிற்கு மூன்று முறை சென்றுள்ளான்.[4]

கைதும் விடுதலையும்[தொகு]

இங்கே நான் வந்திருப்பதன் காரணம், முஸ்லீம்களாகிய நாம் அமெரிக்காவையும் இந்தியாவையும் அழிக்கும் வரை ஓயக்கூடாது என்பதைச் சொல்வதற்காகத்தான்.

மெளலானா மசூத் அசார் (10,000 பேர் திரண்டிருந்த கராச்சி பொதுக்கூட்டத்தில்)[5]

  • 1994 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மெளலானா மசூத் அசார் ஶ்ரீநகரில் பிற தீவிரவாதக் குழுக்களைத் தொடர்பு கொள்ளச் செல்லும் போது,[3] இந்தியப் படையினர் அவனைக் கைது செய்தனர்.[4]
  • சில வெளிநாட்டுப் பயணிகளைக் கடத்தி வைத்துக் கொண்டு மெளலானா மசூத் அசாரை விடுவிக்கச் சொல்லி தீவிரவாதக் குழுக்கள் மிரட்டினர். கடத்தப்பட்டவர்களுள் ஒருவர் தப்பினார். மற்றவர்கள் கொல்லப்பட்டனர்.
  • 1999 ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 கடத்தப்பட்டு மெளலானா மசூத் அசார் விடுவிக்கப்பட்டான்.
  • 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதலுக்குப் பின் இந்திய அரசின் நெருக்குதல்களால் பாகிஸ்தானில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டான்.[6] ஆனால் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. பின்னர் 2002 டிசம்பர் மாதம் 22 ஆம் தியதி லாகூர் உயர் நீதி மன்றம் வீட்டுக் காவலை விலக்கச் சொன்னது.[1]

இதையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Indian fury over freed militant". BBC News. 2002-12-14. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/2575199.stm. பார்த்த நாள்: 2008-01-08. 
  2. 2.0 2.1 2.2 India's most wanted. Vol. 19. Frontline. 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0066210631. பார்க்கப்பட்ட நாள் 2011-09-09.
  3. 3.0 3.1 3.2 3.3 "Maulana Masood Azhar". Kashmir Herald (kashmiri-pandit.org) 1 (8). January 2002. http://kashmirherald.com/profiles/masoodazhar.html. பார்த்த நாள்: 2009-01-08. 
  4. 4.0 4.1 Watson, Paul; Sidhartha Barua (2002-02-25). "Somalian Link Seen to Al Qaeda". LA Times இம் மூலத்தில் இருந்து 2002-02-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020225225917/http://www.latimes.com/news/nationworld/world/la-022502hawk.story. பார்த்த நாள்: 2009-01-07. 
  5. Hussain, Zahid (2000-01-05). "Freed Militant Surfaces". Associated Press இம் மூலத்தில் இருந்து 2000-09-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20000901092056/http://abcnews.go.com/sections/world/DailyNews/militants000105.html. பார்த்த நாள்: 2008-01-07. 
  6. Tanner, Marcus (2001-12-17) Pakistan blamed by India for raid on parliament. The Independent
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌலானா_மஸ்ஊத்_அஸ்ஹர்&oldid=3371685" இலிருந்து மீள்விக்கப்பட்டது