உள்ளடக்கத்துக்குச் செல்

மௌரியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏறத்தாழ கிமு 500ல் இருந்த சாக்கியர்கள், கோலியர்கள், மௌரியர்கள்,மற்றும் மல்லர்கள் இனக்குழுவினரின் கண சங்கங்கள் மற்றும் அருகமைந்த அரசுகள்
மௌரியர்கள்
கிமு 7ஆம் நூற்றாண்டு–கிமு 5ஆம் நூற்றாண்டு
மக்கள் குடியரசுகளின் ஒன்றான மௌரிய இராச்சியம்
மக்கள் குடியரசுகளின் ஒன்றான மௌரிய இராச்சியம்
பண்டைய இந்தியாவின் பிந்தைய வேத காலத்தில் வட இந்தியாவின் மௌரியர்களுக்கு கிழக்கில் சாக்கியர்கள், வடகிழக்கில் கோசலம், மேற்கில் மல்லம் நாடுகள்
பண்டைய இந்தியாவின் பிந்தைய வேத காலத்தில் வட இந்தியாவின் மௌரியர்களுக்கு கிழக்கில் சாக்கியர்கள், வடகிழக்கில் கோசலம், மேற்கில் மல்லம் நாடுகள்
தலைநகரம்பிப்லிவனம்
பேசப்படும் மொழிகள்பிராகிருதம்
சமசுகிருதம்
சமயம்
பண்டைய வேத சமயம்
பௌத்தம்
சமணம்
அரசாங்கம்குடியரசு
ராஜா 
வரலாற்று சகாப்தம்இரும்புக் காலம்
• தொடக்கம்
கிமு 7ஆம் நூற்றாண்டு
• கிமு 486ல் மௌரிய கண சங்கம் அஜாதசத்துருவால் ஆக்கிரமிக்கப்பட்டது.
கிமு 5ஆம் நூற்றாண்டு
பின்னையது
}
மகத நாடு
தற்போதைய பகுதிகள்இந்தியா
நேபாளம்
ஏறத்தாழ கிமு 500ல் இருந்த சாக்கியர்கள், கோலியர்கள், மௌரியர்கள்,மற்றும் மல்லர்கள் இனக்குழுவினரின் கண சங்கங்கள் மற்றும் அருகமைந்த அரசுகள்

மௌரியர்கள் (Moriya), இரும்புக் காலததில் பண்டைய இந்தியாவின் இந்தோ ஆரிய மக்களான மௌரிய இனக்குழுவினர் கிழக்குக் கங்ககைச் சமவெளியில், தற்கால வட இந்தியாவின் நேபாள நாட்டை ஒட்டிய கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் நேபாளத்தின் தெராய் பகுதிகளில் வாழ்ந்த இனக்குழுவினர் ஆவார். மௌரியர்களின் தலைநகரம் பிப்லிவனம் ஆகும். மௌரியர்கள் கண சங்கம் எனும் மக்கள் குடியரசு முறையில் ஆட்சி செய்தனர்.[1][2] மௌரியர்களின் தலைநகரம் பிப்லிவனம் ஆகும்.[1][2][3] மௌரியர்களின் குலக்குறிச் சின்னமான மயில் மூலம் இந்த இன மக்களுக்கு மௌரியர்கள் எனப்பெயராயிற்று.[1][2][3][4]

எல்லைகள்

[தொகு]

மௌரியர்கள் வடகிழக்கு கோசலத்திற்கு அருகில் பாயும் கிழக்கு ரப்தி ஆற்றின் கரையில் வாழ்ந்தனர். மௌரியர்களின் கண சங்கத்திற்கு கிழக்கே கோலியர்கள் மற்றும் மேற்கே மல்லர்கள் வாழ்ந்தனர். காக்ரா ஆறு இதன் தென் எல்லையாக இருந்தது. .[1]

பெயர்

[தொகு]
அஜாதசத்துரு கிழக்கு கங்கைச் சமவெளியின் மௌரியர் மற்றும் வஜ்ஜிகளின் குடியரசுகளின் வரைபடம்
மகதப் பேரரசர் அஜாதசத்துரு கிழக்கு கங்கைச் சமவெளியின் கண சங்கங்களை ஆக்கிரமித்த பிறகான வட இந்தியாவின் வரைபடம்

வரலாறு

[தொகு]

கௌதம புத்தர் இறந்த பிறகு அவரது உடலை, மல்லர்களின் தலைநகரான வைசாலி நகரத்தில் எரியூட்டி கிடைத்த சாம்பலில் ஒரு பகுதியை, குசிநகரத்தின் மல்லர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு.[2][3][5] புத்தர் உடல் சாம்பலின் ஒரு பகுதியைப் பெற்றுக் கொண்ட மௌரியர்கள், தங்கள் நாட்டின் தலைநகரான பிப்லிவனம் நகரத்தில் தூபி அமைத்து, அதில் புத்தரின் சாம்பலை வைத்துப் போற்றினர்.[1][5] கிமு 468ல் அஜாதசத்துரு வஜ்ஜி மற்றும் மௌரிய கண இராச்சியங்களை ஆக்கிரமித்து மகதப் பேரரசுடன் இணைத்தார்.[1]

மரபுரிமை

[தொகு]

மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரியர், மௌரிய இனக்குழுவின் முன்னோடி என மௌரியர்கள் கொண்டாடுகின்றனர்.[2][3]. கிமு 4ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மகதப் பேரரசின் நந்த வம்ச பேரரசர் தன நந்தனை வென்று சந்திரகுப்த மௌரியர் மகதப் பேரரசர் ஆனார்.[6]

அரசியல் மற்றும் சமூக அமைப்பு

[தொகு]

சத்திரியர்களான மௌரியர்கள் மக்கள் குடியரசு முறையில் ஆட்சி செய்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Sharma 1968, ப. 219-224.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Kapoor 2002.
  3. 3.0 3.1 3.2 3.3 Cunningham 1871, ப. 430-433.
  4. Mookerji 1988.
  5. 5.0 5.1 Fleet 1906, ப. 655-671.
  6. Upinder Singh 2016, ப. 330.

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌரியர்கள்&oldid=4044450" இலிருந்து மீள்விக்கப்பட்டது