உள்ளடக்கத்துக்குச் செல்

மௌன விரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மௌன விரதம் என்பது மௌன விரதமாவது வாயாலும், மனதாலும், செயலாலும் பேசாதிருப்பதே என பதஞ்சலி முனிவர் தனது யோக சூத்திரம் எனும் நூலில் விளக்கியுள்ளார்.. இன்பம், துன்பம் இரண்டையும் மௌன விரதம் இருப்பதன் மூலம் எப்போதும் மனம் அலைபாயாமல் இயல்பாக இருக்கும். பதஞ்சலி முனிவரின் யோகா எனும் இந்த தத்துவத்தை இந்து சமயம், சமண சமயம், பௌத்த சமயம் மற்றும் பல சமயங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. மௌன விரதத்தின் அவசியத்தையும் அதன் பெருமைகளையும் தங்கள் வேத நூல்களில் வலியுறுத்தியுள்ளனர்.

மன அமைதிக்கு தேவை மகிழ்ச்சி. அது மௌன தவத்தால் மட்டுமே கிட்டும். பல செயல்களைப் பேசி சாதிப்பதை விட மௌன விரதத்தால் சாதிப்பது எளிது.

சிறப்பு வாய்ந்த மௌன விரதத்தை மாதம் ஒரு முறையாவது கடைப் பிடித்தால் உடலுக்கும் நல்லது மனதுக்கும் நல்லது.

வாய் தானே பேசக் கூடாது என எழுதிக் காட்டுவதும் சைகையில் பேசுவதும் சரியல்ல. அதில் மௌன விரத நிறைவு ஏற்படாது. மௌனம் என்பது ஆழ்நிலையில் அமைதியாய் இருத்தல். மோன நிலை என்பார்கள். ஆனந்தம் பிறக்கும் நிலை இங்கு தான் உருவாகிறது.

பகவான் ரமணர் மோனத் தவமிருந்தது அனைவரும் அறிந்ததே. பால் பிராண்டன் என்ற மேலை நாட்டு மெய்யியல் அறிஞர், தனது நூலில் ரமண மகரிஷியின் ஆழ்ந்த மௌனத்தைப் போற்றி எழுதி இருக்கிறார்.

மௌனத் தவமிருந்து சித்திகள் பல பெறலாம் என பதஞ்சலி முனிவர் தனது யோக சூத்திரம் எனும் நூலில் குறிப்பிட்டுளார்.

உசாத்துணை

[தொகு]
  • பதஞ்சலி யோக சூத்திரம் [1]
  • Sound of Silence [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌன_விரதம்&oldid=3913722" இலிருந்து மீள்விக்கப்பட்டது