மௌசோணைட்டு
மௌசோணைட்டு Mawsonite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்போவுப்புக் கனிமம் |
வேதி வாய்பாடு | Cu6Fe2SnS8 |
இனங்காணல் | |
நிறம் | பழுப்பு ஆரஞ்சு |
படிக இயல்பு | போர்ணைட்டுக்குள் உருகிய பாறை பிரிதல் மணிகள் |
படிக அமைப்பு | நாற்கோணவமைப்பு |
மோவின் அளவுகோல் வலிமை | 3.5-4 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 4.65 (கணக்கிடப்பட்டது) |
பலதிசை வண்ணப்படிகமை | வலிமை |
பொதுவான மாசுகள் | Zn, Se |
பிற சிறப்பியல்புகள் | காந்தத்தன்மை |
மேற்கோள்கள் | [1][2][3] |
மௌசோனைட்டு (Mawsonite) என்பது Cu6Fe2SnS8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பழுப்பு ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் ஒரு சல்போசால்ட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. தாமிரம், இரும்பு, வெள்ளீயம், கந்தகம் ஆகிய தனிமங்கள் இக்கனிமத்துடன் சேர்ந்துள்ளன.
பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் மௌசோனைட்டு கனிமத்தை Maw[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
கண்டுபிடிப்பும் தோற்றமும்
[தொகு]முதன்முதலில் 1965 ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்சின் ஆர்டிங் மாகாணம் திங்கா நகரம், இராயல் சியார்ச்சு சுரங்கத்திலும்; டாசுமேனியாவின் குயின்சுடவுனில் உள்ள மவுண்ட் லைல் சுரங்கத்திலும், வடக்கு லைல் சுரங்கத்திலும் காணப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது.[5]
ஆத்திரேலியப் புவியியலாளர் மற்றும் அண்டார்டிக்கு ஆய்வாளர் சர் டக்ளசு மௌசனின் (1882–1958) நினைவாகக் கனிமத்திற்கு மௌசோனைட்டு எனப் பெயரிடப்பட்டது. மாற்றப்பட்ட எரிமலை பாறைகளில் உள்ள நீர் வெப்ப செப்பு படிவுகளுக்குள் காணப்படுகிறது. சிகார்ன் படிவுகளிலும், மாற்றப்பட்ட கிரானைட்டுகளில் பரவல்களாகவும் காணப்படுகிறது. போர்னைட்டு, பைரைட்டு, சால்கோபைரைட்டு, சால்கோசைட்டு, டைசனைட்டு, ஐடைட்டு, சிடானைட்டு, சிடானாய்டைட்டு, பைரோடைட்டு, பெண்ட்லாண்டைட்டு, டென்னண்டைட்டு, எனார்கைட்டு, உலுசோனைட்டு-பாமடினைட்டு, கிட்க்ரீகைட்டு, மோகைட்டு, பூர்வீக பிசுமத், கலீனா மற்றும் சிபாலரைட்டு ஆகிய கனிமங்களுடன் இணைந்து மௌசோனைட்டு காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mawsonite on Mindat.org
- ↑ Mawsonite in the Handbook of Mineralogy
- ↑ Mawsonite data on Webmineral
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ page 66 of Tasmania. Department of Mines; Petterd, W. F. (William Frederick). Catalogue of mineral of Tasmania; Geological Survey of Tasmania (1972), "Catalogue of the minerals of Tasmania", Mineralogical Magazine, 38 (299) (Rev. and amended 1969 ed.), Hobart (published 1970): 901, Bibcode:1972MinM...38..901E, doi:10.1180/minmag.1972.038.299.19, S2CID 129794143, retrieved 18 April 2017