மோலோன் கான்
மோலோன் கான் என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஒரு ககான் ஆவார். இவர் 1465 முதல் 1466 வரை ஆட்சி புரிந்தார். இவர் தைசுன் கானின் மூத்த மகன் ஆவார்.
ஆட்சி
[தொகு]மோலோன் கான் தனது தம்பி மர்கோர்கிசு கானுக்குப் பிறகு 1465இல் ஆட்சிக்கு வந்தார். இவரைப் பற்றி, "உன் மூலம் உன் மக்கள் சட்டரீதியாக வலிமையைப் பெறுவார்கள். அரியணையில் கானாக அமர்" என்று கணித்துக் கூறப்பட்டது.[1] ஆனால், இவரது விதி இவரது தம்பியின் விதியைப் போலவே முடிந்தது. உண்மையான சக்தி இல்லாத காரணத்தால் ஆதிக்கத்திற்காக ஒருவருடன் ஒருவர் போரிட்ட மங்கோலிய உயர் குடியினரால் இவர் கொல்லப்பட்டார். இவரது இறப்பிற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பெரிய கானின் பதவியானது வெற்றிடமாக இருந்தது. ஏனெனில், மங்கோலிய இனங்கள் சக்திக்காக ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். 1475இல் இவரது சித்தப்பா மன்டூல் கானுக்கு அடுத்த கானாக மகுடம் சூட்டப்படும் வரை இந்த வெற்றிடம் நீடித்தது.
உசாத்துணை
[தொகு]- ↑ Schmidt-Geschichte der Ostmongolen, p. 153.