மோலி சாக்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மோலி சாக்கோ (Molly Chacko) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஒரு நடுத்தர தொலைவு ஓட்டப்பந்தய வீராங்கனையாவார். 1969 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சப்பான் நாட்டின் இரோசிமா நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது 3000 மீ ஓட்டப்பந்தயத்தை 9:06.42 நிமிடங்களில் ஓடி தேசிய சாதனையை நிகழ்த்தினார். [1] இதே 1994 ஆம் ஆண்டில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் பந்தயத் தொலைவை 4:12.01 நிமிடங்களில் ஓடிய தேசிய சாதனையும் இவரிடமே இருந்தது. பின்னர் 1999 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் இச்சாதனையை சுனிதா ராணி முறியடித்தார். [2]

முன்னாள் இந்திய நீச்சல் வீர்ர் செபாசுட்டியன் சேவியரை மோலி திருமணம் செய்து கொண்டார். தம்பதியர் இருவரும் தென்னக இரயில்வே துறையில் பணிபுரிகின்றனர். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Official Website of Athletics Federation of India: NATIONAL RECORDS as on 21.3.2009". Athletics Federation of INDIA. Archived from the original on 2009-08-05. பார்க்கப்பட்ட நாள் 2009-09-02.
  2. "Rani rules in 1,500m, sets National record". இந்தியன் எக்சுபிரசு. 1999-08-08. http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19990808/isp08049.html. பார்த்த நாள்: 2009-09-05. 
  3. "Xavier's enduring saga of success". தி இந்து. 2001-10-12 இம் மூலத்தில் இருந்து 2013-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125081225/http://www.hinduonnet.com/2001/10/12/stories/0712100a.htm. பார்த்த நாள்: 2009-09-05. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோலி_சாக்கோ&oldid=3412781" இலிருந்து மீள்விக்கப்பட்டது