உள்ளடக்கத்துக்குச் செல்

மோரோ தேசிய விடுதலை முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோரோ தேசிய விடுதலை முன்னணி
Moro National Liberation Front
MNLF
الجبهة الوطنية لتحرير مورو
கொடி
தலைவர்(கள்)நூர் மிசுவாரி
(நிறுவனத் தலைவர்)
முசுலிமின் செமா (நிருவாகக் குழு 15)
சித்தாந்தம்
நிலைActive
தலைமையகம்சுலு, பிலிப்பீன்சு
இணையதளம்www.mnlf.org.ph
யுத்தங்கள் மற்றும் போர்கள்மோரோ மோதல்

மோரோ தேசிய விடுதலை முன்னணி (ஆங்கிலம்: Moro National Liberation Front (MNLF); அரபு: الجبهة الوطنية لتحرير مورو) என்பது பிலிப்பீன்சில் 1972-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஓர் அரசியல் அமைப்பாகும். இது முசுலீம் விடுதலை இயக்கத்தின் (Muslim Independence Movement) (MIM)[2][3] ஒரு பிரிவாகத் தொடங்கியது. 1970-களில் தொடங்கி சுமார் 20-ஆண்டுகளாக மோரோ மோதலின் (Moro conflict) போது மிகவும் தீவிரமாகச் செயல்பட்ட அமைப்பாக விளங்கியது. மோரோ தேசிய விடுதலை முன்னணி அமைப்பு, இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பினால் (OIC) பன்னாட்டு அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. 1977-ஆம் ஆண்டு முதல், இந்த மோரோ விடுதலை அமைப்பு இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பார்வையாளர் உறுப்பினராகவும்[4] செயல்பட்டு வருகிறது.

1996-இல், அதிபர் பிடல் ராமோசு நிர்வாகத்தின் கீழ், பிலிப்பீன்சு அரசாங்கத்துடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உடன்படிக்கையில் மோரோ தேசிய விடுதலை முன்னணி கையெழுத்திட்டது. இது முசுலிம் மிண்டனாவோ தன்னாட்சிப் பகுதி (ARMM) உருவாக்கப்படுவதற்கு வழிவகுத்தது.[5][6][7][8] இரு பிலிப்பீன்சு மாகாணங்கள்; மற்றும் மூன்று தீவு மாகாணங்களைக் கொண்ட இப்பகுதியில், பெரும்பான்மையாக வாழும் இசுலாமிய மக்கள் ஓரளவிற்குத் தன்னாட்சியைப் பெற்றுள்ளனர்.

பின்னணி

[தொகு]
2009-இல் மோரோ தேசிய விடுதலை முன்னணி போராளிகள்
மோரோ தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் நூர் மிசுவாரி

1900-ஆம் ஆண்டுகளில், பிலிப்பீன்சு அரசாங்கம் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து நிலமில்லாத கிறிஸ்தவர்கள் குடியேறுவதை ஊக்குவிப்பதற்காக பண்ணை வீட்டுத் திட்டம் (Homestead Program: 1903–1973) என்ற ஒன்றைச் செயல்படுத்த விரும்பியது. அக்காலத்தில் மிண்டனாவோவின் பழங்குடி மக்களிடம் நிலப் பட்டா வழங்கும் முறை எதுவும் இல்லாததால், கிறிஸ்தவக் குடியேறிகள் இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

லனாவோ டெல் நோர்டே மற்றும் கோத்தாபத்தோ ஆகிய பகுதிகளின் லூசோன் மற்றும் விசயன் தீவுகள் ஆகிய இடங்களிலிருந்து வந்த குடியேறிகளின் பெரும் வரவேற்பைப் பெற்றன. நில உரிமை குறித்த சர்ச்சைகள்; மற்றும் முசுலிம்களின் உரிமைப் பறிப்பு ஆகிய காரணங்களால் மோரோ மக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பதற்றங்கள் ஏற்பட்டன. இந்தப் பண்ணை வீட்டுத் திட்டமே மோரோ மோதலின் முதன்மையான மூலக் காரணங்களில்[9][10] ஒன்றாகும்.

சவால் மிக்க போராட்டங்கள்

[தொகு]

வறுமை, பலகீனமான சட்டத்தின் ஆட்சி; மற்றும் தெற்கு பிலிப்பீன்சில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவை; இசுலாமிய மக்களுக்கு சவால் மிக்க போராட்டங்களாக மாறின. மார்ச் 18, 1968 அன்று, கொரெகிடோர் தீவில் (Corregidor Island) மோரோ சிப்பாய்கள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.[11] இதுவே இறுதியில் பங்சாமோரோ விடுதலை அமைப்பு (Bangsamoro) (BMLO)[12] உருவாக்கப் படுவதற்கும் வழிவகுத்தது.

பங்சாமோரோ விடுதலை அமைப்பு; மற்றும் அன்சாருல் இசுலாம் ஆகியவற்றின் நிறுவனர்கள்: தொமக்காவ் அலொன்டோ, கேப்டன் கலிங்கல்ச்சன் கலுவாங், ரசீத் லுக்மன், சலிபடா பெண்டதுன், அமிட் கம்லியன், உவ்தோக் மதாலம்; மற்றும் வழக்கறிஞர் மக்காபந்தன் அப்பாஸ் ஆகியோர் ஆவர்.[13] இதுவே மோரோ தேசிய விடுதலை முன்னணி (MNLF) மற்றும் மோரோ இசுலாமிய விடுதலை முன்னணி (MILF)[14][15] உருவாக்கத்தின் தொடக்கமாக அமைந்தது. அக்டோபர் 21, 1972 அன்று முசுலீம் விடுதலை இயக்கத்தின்[16] ஒரு பிரிவாக மோரோ தேசிய விடுதலை முன்னணி தொடங்கப்பட்டது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. ↑ Teoh El Sen (March 14, 2013). "MNLF supports Sulu claim, says Nur Misuari faction". Astro Awani. Retrieved June 13, 2014.
  2. ↑ Gowing, Peter G. (1979). Muslim Filipinos - Heritage and Horizon. New Day Publishers. pp. 190–192.
  3. ↑ Gross, Max L. (2007). A Muslim Archipelago: Islam and Politics in Southeast Asia. National Defence International College. pp. 184–187.
  4. ↑ "PUIC". Retrieved January 26, 2015.
  5. ↑ Llanto, Jesus F. (July 17, 2008). "Supreme Court voids creation of Shariff Kabunsuan". ABS-CBN News. http://www.abs-cbnnews.com/nation/07/17/08/supreme-court-voids-creation-shariff-kabunsuan.
  6. ↑ Pedrasa, Ira (October 7, 2012). "Govt reaches deal with MILF to end rebellion". ABS-CBN News. http://www.abs-cbnnews.com/nation/10/07/12/govt-reaches-deal-milf.
  7. ↑ Oliveros, Renato T. (February 8, 2013). "The Bangsamoro reframes the Muslim-Filipino identity". The Guidon. Retrieved April 13, 2015.
  8. ↑ "Comelec ratifies Bangsamoro Organic Law". BusinessMirror (in அமெரிக்க ஆங்கிலம்). January 26, 2019. Retrieved February 6, 2019.
  9. ↑ dtic.mil/cgi-bin/GetTRDoc?AD=ADA406868
  10. ↑ Damien Kingsbury; Senior Lecturer in International Development Damien Kingsbury; Costas Laoutides (March 5, 2015). Territorial Separatism in Global Politics: Causes, Outcomes and Resolution. Routledge. p. 55. ISBN 978-1-317-63139-2.
  11. ↑ Marites Dañguilan Vitug; Glenda M. Gloria (March 18, 2013). "Jabidah and Merdeka: The inside story". Rappler. Archived from the original on September 13, 2015. Retrieved May 6, 2016.
  12. ↑ Fallon, Joseph E. (August 1989). "Igorot and Moro National Reemergence". Fourth World Journal 2 (1): 17–54. doi:10.63428/vb4px138. http://www.cwis.org/fwj/21/imnr.html. பார்த்த நாள்: September 5, 2007.
  13. ↑ Alonto, Rowena (2009). 13 Stories of Islamic Leadership vol 1 (PDF). Asian Institute of Management – Team Energy Center for Bridging Societal Divides. p. 26.
  14. ↑ Espaldon, Senator Ernesto (1997). WITH THE BRAVEST The Untold Story of the Sulu Freedom Fighters of World War II. Bureau of Public Printing. p. 210.
  15. ↑ Caluang, Calingalan (May 19, 2023). "THE HERO SAYYID KALINGALAN CALUANG". Retrieved 20 May 2023.
  16. ↑ "Asia Times Online :: Moro leader looks for united front". Archived from the original on January 31, 2013. Retrieved January 26, 2015.

நூல்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]