மோரிஸ் நினைவு கட்டிடம்

ஆள்கூறுகள்: 36°10′01″N 86°46′49″W / 36.16694°N 86.78028°W / 36.16694; -86.78028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோரிஸ் நினைவு கட்டடம்
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை
மோரிஸ் நினைவு கட்டடம் (2010)
அமைவிடம்: 330 சார்லட் நிழற்சாலை, நாஷ்வில், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஆள்கூறு: 36°10′01″N 86°46′49″W / 36.16694°N 86.78028°W / 36.16694; -86.78028
கட்டியது: 1924–1926
கட்டிடக்
கலைஞர்:
மெக்கிசாக் & மெக்கிசாக்
கட்டிடக்கலைப் 
பாணி(கள்):
புதுச்செவ்வியல்
தே.வ.இ.பவில்
சேர்ப்பு:
2 சனவரி 1985
தே.வ.இ.ப 
குறிப்பெண் #:
85000046[1]

மோரிஸ் நினைவு கட்டடம் (Morris Memorial Building) அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் நாஷ்வில்வில் உள்ள ஒரு வரலாற்றுக் கட்டடம் ஆகும். இது அமெரிக்காவில் நிறுவப்பட்ட ஆபிரிக்க-அமெரிக்க தேசிய திருமுழுக்காளர்கள் மாநாட்டுக் குழுவினருக்காக 1920 ல் கட்டப்பட்டது. அதன் நீண்டகாலத் தலைவரான எலியாஸ் கேம்ப் மோரிஸின் பெயரால் வழங்கப்பட்டுவருகின்றது.

இருப்பிடம்[தொகு]

டென்னசி மாநிலத்தின் டேவிட்சன் மாவட்டத்தின் இருக்கையான 330 சார்லோட் நிழற்சாலையில், நாஷ்வில்லில் இந்தக் கட்டடம் அமைந்துள்ளது.[2][3]

வரலாறு[தொகு]

இதன் கட்டுமானம் 1924 இல் தொடங்கி 1926 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்டது. இது அமெரிக்காவில் நிறுவப்பட்டஒரு ஆபிரிக்க அமெரிக்கன் கிறிஸ்தவப் பிரிவான தேசிய திருமுழுக்காளர்கள் மாநாடு குழுவின் நாஷ்வில் அலுவலகத்தில் ஞாயிறு பள்ளி வெளியீட்டு வாரியம் பணியாற்றுவதற்காக கட்டப்பட்டது.[3][4] இந்தக் கட்டடம் பல ஆபிரிக்க அமெரிக்க வணிக அலுவலகங்களைக் கொண்டிருந்தது.

2016 ஆண்டுப்படி, தொடக்கத்திலிருந்தே ஆபிரிக்க-அமெரிக்க வணிக அலுவலகங்களைக் கொண்டிருந்த கட்டடங்களில் இன்னும் எஞ்சியிருக்கும் ஒரே கட்டடம் இதுவாகும். [5]

கட்டிடக்கலை முக்கியத்துவம்[தொகு]

இது கட்டடக்கலை நிறுவனமான மெக்கிசாக் & மெக்கிசாக்கால் புதுச்செவ்வியல் கட்டிடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டது. 1985 சனவரி இரண்டாம் நாள் முதல் இது ஐக்கிய அமெரிக்க வரலாற்று இடங்களுக்கான தேசியப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Register Information System". National Register of Historic Places. National Park Service. 2010-07-09.
  2. 2.0 2.1 "Morris Memorial Building". National Park Service. பார்க்கப்பட்ட நாள் September 25, 2015.
  3. 3.0 3.1 "Tennessee Thematic Resource Nomination Survey Form: Morris Memorial Building". National Park Service. பார்க்கப்பட்ட நாள் September 24, 2015.
  4. Wynn, Linda T. "McKissack and McKissack Architects (1905- )". Tennessee State University. Retrieved October 25, 2016.
  5. Ward, Getahn. "2016 Nashville Nine: Music City's most endangered historic places". The Tennessean. பார்க்கப்பட்ட நாள் 25 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோரிஸ்_நினைவு_கட்டிடம்&oldid=3845204" இலிருந்து மீள்விக்கப்பட்டது