மோரிரோ (நாட்டுப்புறக்கதை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:சிந்தி நாட்டுப்புறவியல்

மோரிரோ ஐன் மங்கர்மாச் ( சிந்தி : مورڙو ۽ مانگر مڇ ) என்பது மோரிரோ என்ற மீனவரின் தனிப்பட்ட வீரம் மற்றும் நுட்பமான கண்டுபிடிப்புகளைப் பற்றிய சிந்தி நாட்டுப்புறக்கதையாகும். இதன் படி மீனவரான மோரிரோ கூர்முனை வைத்து கட்டப்பட்ட இரும்புக் கூண்டில் கடலில் ஆழமாக மூழ்கி ஒரு சுறா அல்லது திமிங்கலம் போன்ற விலங்கினை கொன்று அதனால் விழுங்கப்பட்டு இறந்த தனது ஆறு சகோதரர்களை மீட்டெடுப்பதைப் பற்றியது. [1] [2]

கதைச்சுருக்கம்[தொகு]

பண்டைய நாட்களில், கலாச்சி என்றழைக்கப்படும் மீனவர்களின் கிராமம் சிந்தி பகுதியில் இருந்தது . அந்த கிராமவாசிகளின் முக்கியமான வாழ்வாதாரம் மீன்பிடி தொழிலாகும்; அவர்கள் மீன் பிடிப்பதற்காக தங்கள் படகுகளில் ஆழ் கடலுக்குள் செல்லுவது வழக்கம். தற்போது கிளிஃப்டன்) என்று அழைக்கப்படும் பகுதியில் கலாச்சி ஜோ குன் (கலாச்சியின் சுழல்) என்று அழைக்கப்படும் அபாயகரமான சுழல் இருந்தது, அந்த சுழலிலே மாட்டிக்கொள்ளும் படகுகள் சிக்கி, கடலில் ஆழமாக மூழ்கி அதில் சென்ற அனைவரையும் மரணத்தை வரவழைக்கும் அபாயம் கொண்டது. அந்த சுழலின் அருகிலேயே சுறா அல்லது திமிங்கலம் போன்ற விலங்கு வாழ்ந்து அங்கே படகில் வரும் மீனவர்களை தாக்கி விழுங்கி வந்தது.

கலாச்சியிலிருந்து கிட்டத்தட்ட 60 மைல் தொலைவில் சோமியானி என்று அழைக்கப்படும் மீனவர்களின் மற்றொரு கிராமம் இருந்தது . கிராமத்தில் ஆபாயோ ( சிந்தி : اوڀايو ) என்ற மீனவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு ஏழு மகன்கள் இருந்தனர். அவரது இளைய மகன் மோரிரோவைத் தவிர, அனைவருமே நன்கு தசை வலிமையுள்ளவர்களாகவும் நல்ல உடலமைப்பு கொண்டவர்களாகவும் இருந்தனர். ஆனால் அவரது இளைய மகன் மோரிரோ உயரம் குறைந்தவராகவும் ஊனமுற்றவராகவும் இருந்தார்; அதனால் அவர் தனது சகோதரர்களுடன் மீன்பிடிக்க அழைத்துச் செல்லப்படவில்லை. தினந்தோறும் அதிகாலையில் அவரது ஆறு சகோதரர்களும் மீன் பிடிப்பதற்குச் சென்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு திரும்பி வருவார்கள்.

அவ்வாறு இருக்கையில் ஒரு நாள் காலையில் சென்ற அவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. இது ஆபாயோ மற்றும் அந்த கிராம மக்களை மிகவும் கவலையடையச் செய்தது. எனவே ஆறு சகோதரர்களையும் தேடுவதற்கு கடலுக்கு சென்று, அங்கே அவர்களின் படகுகள் சுழலில் சிக்கியதையும், திமிங்கலம் அவற்றை விழுங்கியதையும் கண்டுபிடித்தனர். தனது சகோதரர்களின் இத்தகைய சோகமான மரணத்தைப் பற்றி அறிந்த மோரிரோ, ஊனமுற்றவராக இருந்தாலும், அந்த திமிங்கலத்தை பழிவாங்கவும், கிராமவாசிகளை அச்சுறுத்தி வரும் அந்த அசுரனை முற்றிலுமாக அழித்தொழிக்க தீர்மானித்தார். அதன் பொருட்டு அவர் பெரியதொரு வலுவான இரும்புக் கூண்டை உருவாக்கி, அதன் வெளிப்புறத்தில் கூர்மையான கம்பிகள், ஆயுதங்கள் பொருத்தப்பட்டு வலுவான கயிறுகளால் கட்டப்பட்டது. அதை ஒரு படகில் ஏற்றி பலம் வாய்ந்த இரண்டு ஆண் எருமைகளின் கழுத்தில் அந்த கயிறுகளைக் கொண்டு அந்த கூண்டு கட்டப்பட்டது. மோரிரோ கூண்டுக்குள் அமர்ந்து கொண்டு சுழலில் கூண்டோடு உள்ளே இறக்கிவிடும்படிக்கு சகா கிராமவாசிகளை அறிவுறுத்தியதோடு, அவர் உள்ளே இருந்து கயிறுகளை அசைத்த உடனேயே கூண்டை தண்ணீரில் இருந்து வெளியே இழுக்கும்படியும் கிராம மக்களுக்கு சொன்னார்.

கூண்டு தாழ்த்தப்பட்டபோது, ​​​​மீன், மோரிரோவை தனது இரை எனக்கருதி, அதை விழுங்குவதற்காக அதன் மீது பாய்ந்தது. அடுத்த கணமே, கூண்டின் வெளிப்புற கூர்முனைகளால் துளைக்கப்பட்டது. திட்டமிட்டபடியே மோரிரோ கயிறுகளை அசைத்தார். கூண்டில் சிக்கியிருந்த திமிங்கலத்தோடு கூண்டு வெளியே இழுக்கப்பட்டது. கிராமமே அவரது இந்த தீரச்செயலை பாராட்டியது. கிராமவாசிகள் அதன் வயிற்றைக் கீறி, இறந்த சகோதரர்களின் எச்சங்களை வெளியே கொண்டு வந்து, கலாச்சியின் வடகிழக்கு பகுதியில், மலையின் அடிவாரத்தில் புதைத்தனர்,மேலும் மோரிரோ தனது வாழ்நாள் முழுவதையும் அவர்களின் கல்லறைகளின் காவலராகக் கழித்தார்.

இன்றும் அந்த இடம் "மோரிரோவின் கல்லறை" என்று அழைக்கப்படுகிறது. [3] இது கராச்சியிலிருந்து இரண்டு மைல் தொலைவில் குல்பாய் சௌக்-இல், இந்துக்களின் தகனம் செய்யும் இடத்திற்கு அருகில் உள்ளது.

மோரிரோ மரபின் முக்கியத்துவம்[தொகு]

சிந்து கவிஞரான ஷா அப்துல் லத்தீஃப் பிட்டாய் (சிந்தி மொழி: شاھ عبداللطيف ڀٽائي‎; 1689/1690 – 21 டிசம்பர் 1752)) என்பவர், இந்தக் கதையைப் பயன்படுத்தி, அவரது ஆன்மிக மற்றும் மத சிந்தனைகளை பரப்ப தொலைநோக்குடன் பயன்படுத்தி பரவலாக்கினார்.

எந்த ஒரு இடத்திலும் அந்த கவிஞர் முழு கதையையும்விவரித்து கூறவில்லை. ஆனால் சில சூழ்நிலைகள், நிகழ்வுகள் மற்றும் கதையின் சில தனித்துவமான அம்சங்களை நிறைய உட்குறிப்புகளுடன் அவ்வப்போது கூறியுள்ளார். மனித ஆன்மாவில் உள்ள நன்மை மற்றும் தீய சக்திகளின் நாடகமாக உவமைகளாகவும், உருவாக்கப்படுத்தியும் தனது கவிதைகளில் கூறியுள்ளார்.

ஒரு மிருகத்துடன் மனிதனின் உள்ளார்ந்த போராட்டத்தை ஒரு அடையாளமாக பயன்படுத்தும் அவர், ஆன்மீக ரீதியில் அந்த சுழலை தீய குணமாக கருதி, அதை எவ்வாறு கூண்டுக்குள் அடக்க ஆன்மிகம் துணை செய்கிறது என்ற ஆலோசனையுடன் தனது கருத்துக்கள், உணர்வுகள், அக்கதையின் உண்மையான உணர்வைத் தூண்டுகிறார். கடலை முடிவிலியின் அடையாளமாகவும், மனிதனின் சுயத்தை திமிங்கலமாகவும் உருவகப்படுத்தி விளக்குகிறார்.

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Library Catalog. Habib University. https://catalog.habib.edu.pk/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=148630. 
  2. Popular Folk Stories: Morirro ain mangarmachh – Dr.Nabi Bux Khan Baloach – Sindhi Adabi Board. Hyderabad,Sindh, Pakistan. 1967. 
  3. வார்ப்புரு:Cite webpage

External links[தொகு]