மோப்பின் திருவிழா
மோப்பின் திருவிழா (Mopin அல்லது Moopin festival) அறுவடைக் காலத்தில் கொண்டாடப்படும் உழவர் விழாவாகும். இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் வாழும் காலோ என்ற பழங்குடியினர் இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். இம்மக்கள் கிழக்கு சியாங், மேற்கு சியாங் மாவட்டங்களில் வசிக்கின்றனர்.[1] இம்மக்களின் பாரம்பரிய நாட்காட்டியின்படி லுமி, லுகி ஆகிய இரு மாதங்களிலும் இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். இம்மாதங்கள் மார்ச்சு, ஏப்ரல் ஆகிய கிரிகோரிய மாதங்களோடு ஒத்துப் போகின்றன. இவ்விழாவே இவர்களுக்கு புத்தாண்டின் தொடக்க நாளாக அமைகிறது.[2]
அரசு முறைப்படி, இவ்விழா ஏப்ரல் 5 அன்று குறிக்கப்பட்டிருந்தாலும், இவ்விழா ஏப்ரல் இரண்டாம் நாளில் தொடங்கி எட்டாம் தேதி வரை நீடிக்கும்.
இவ்விழா தங்களுக்கு செல்வத்தையும், வளத்தையும் தருவதாகவும், இவ்விழாவையொட்டி செய்யப்படும் சடங்குகள் தீய சக்திகளை விரட்டி, மக்களுக்கு அமைதியும், அருளும், வளமும் தரும் என்றும் நம்புகின்றனர். அரிசியை பொடியை ஒருவர் மீது ஒருவர் பூசி மகிழ்கின்றனர். [1][3]
இவர்கள் வணங்கும் மோப்பின் ஆனே என்னும் கடவுளை இந்துக்களின் கடவுளான லட்சுமிதேவிக்கு ஒப்பாக கருதலாம். அரிசியின் மூலம் தயாரிக்கப்பட்ட மதுவை மூங்கில் பாத்திரத்தில் ஊற்றிக் குடிக்கின்றனர். தங்கள் பாராம்பரிய உடையணிந்து போப்பிர் என்னும் நடனமாடுகின்றனர்.[4]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Attending the Mystical Mopin Festival in Aalo, Arunachal Pradesh" (ஆங்கிலம்). 2016-07-04. 2016-07-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2016-03-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-04-07 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Assam Tribune". 2017-06-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Mopin festival". Arunachal Pradesh Explorer. 2016-07-12 அன்று பார்க்கப்பட்டது.