மோன் மக்கள்
| Mon People | |
|---|---|
பாரம்பரிய உடையில் மோன் பெண்கள் | |
| மொத்த மக்கள்தொகை | |
| அண். 2.6 மில்லியன் | |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
| அண். 1.8 மில்லியன் | |
| 500,000 | |
| 9000 | |
| 8000 | |
| 650 | |
| மொழி(கள்) | |
| மோன் மொழி, பருமிய மொழி, தாய் (மொழி), இலவோத்திய மொழி, ஈசானிய மொழி, வடக்குத் தாய் மொழி | |
| சமயங்கள் | |
| தேரவாத பௌத்தம் பௌத்தம், மோன் நாட்டுப்புற சமயம் | |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
மோன் மக்கள் (ஆங்கிலம்: Mon People; தாய்: ชาวมอญ; மோன்: ဂကူမန်; பருமியம்: မွန်;) என்பவர்கள் கீழ் மியான்மரின் மொன் மாநிலம், காயின் மாநிலம், காயா மாநிலம்,[1] தாநின்தாரி பிரதேசம், பகோ மாநிலம் மற்றும் ஐராவதி ஆற்றுப் படுகை ஆகிய பகுதிகளில் வாழும் ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தாய்லாந்தின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர்; குறிப்பாக பாத்தோம் தானி மாகாணம், பிரா பரடேங் மாவட்டம் மற்றும் நாங் யா பலோங் மாவட்டம் ஆகிய இடங்களில் இவர்களின் குடியேற்றங்கள் அதிகமாக உள்ளன.[2][3][4]
இவர்களின் தாய்மொழி மோன் மொழி ஆகும். இது ஆசுத்ரோ மொழிக் குடும்பத்தின் மோனிய கிளையைச் சேர்ந்தது. இது வடகிழக்கு தாய்லாந்தில் வாழும் நியா குர் மக்கள் (Nyah Kur people) பேசும் நியா குர் மொழியுடன் (Nyah Kur language) பொதுவான தோற்றத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
மோன் மொழி
[தொகு]தென்கிழக்கு ஆசிய நிலப்பரப்பில் உள்ள பல மொழிகள் மோன் மொழியின் தாக்கத்தைப் பெற்றுள்ளன. அதே நேரத்தில் மோன் மொழியும் அந்த மொழிகளின் தாக்கத்தைப் பெற்றுள்ளது.[5][6][7] தென்கிழக்கு ஆசியாவில் முதன்முதலில் குடியேறிய தொடக்ககால இனக்குழுக்களில் மோன் மக்களும் ஒருவராவர். மேலும், தென்கிழக்கு ஆசிய நிலப்பரப்பில் தேரவாத பௌத்தம் பரவுவதற்குக் காரணமாக இருந்தவர்களும் இவர்களே ஆவர்.[8][9]
மோன் மக்களால் தோற்றுவிக்கப்பட்ட நாகரிகங்கள் தாய்லாந்து, மியான்மர் மற்றும் லாவோஸ் ஆகியவற்றின் தொடக்ககால நாகரிகங்களில் சில நாகரிகங்கள் ஆகும். தென்கிழக்கு ஆசியப் பண்பாட்டைப் பிற பகுதிகளுக்குப் பெருமளவில் கொண்டு சேர்த்தவர்களாக மோன் மக்கள் கருதப் படுகிறார்கள்.[10]
மோன் மக்களின் பரம்பல்
[தொகு]வரலாற்று ரீதியாக, இன்று மியான்மர், தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகளில் உள்ள யங்கோன், பத்தும் தானி மாகாணம், இலம்புன் மாகாணம், இலம்பாங் மாகாணம் மற்றும் வியஞ்சான் உள்ளிட்ட பல நகரங்கள் மோன் மக்களால் அல்லது மோன் ஆட்சியாளர்களால் தோற்றுவிக்கப்பட்டவை ஆகும்.
தற்காலத்தில், மோன் மக்கள் மியான்மரின் ஒரு முதன்மையான இனக் குழுவாகவும், தாய்லாந்தின் ஒரு சிறிய இனக் குழுவாகவும் விளங்குகின்றனர்.[4] மியான்மரைச் சேர்ந்த மோன் மக்கள் பர்மிய மோன் அல்லது மியான்மர் மோன் என்று அழைக்கப் படுகிறார்கள். தாய்லாந்தைச் சேர்ந்த மோன் மக்கள் தாய் ராமன் (Thai Raman) அல்லது தாய் மோன் என்று குறிப்பிடப் படுகிறார்கள்.[11][12] தாய்லாந்து மற்றும் மியான்மரின் மோன் வட்டார மொழிகள் ஒன்றையொன்று எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை ஆகும்.[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ World Bank Group (October 1, 2019). Myanmar – Peaceful and Prosperous Communities Project : Social Assessment (PDF) (Report). Retrieved April 4, 2021.
- ↑ Foster 1973, p. 204.
- ↑ Bauer 1990, p. 19–23.
- 1 2 Gaspar Ruiz-Canela (June 1, 2017). "Mon, Thai minority who once ruled Southeast Asia". Agencia EFE. Retrieved September 5, 2019.
- ↑ Matisoff 1991, p. 482.
- ↑ McCormick & Jenny 2013, p. 86.
- ↑ Jenny 2013.
- ↑ Swearer 2002, pp. 130–131.
- ↑ Khin May Aung(July 24, 2015). "Burma/Myanmar in Transition: Connectivity, Changes and Challenge". {{{booktitle}}}.
- ↑ Desakura (February 24, 2020). "Where does the Mon Pak Lad shortcut?". Stationremodel. Retrieved August 7, 2020.
- ↑ Foster 1973, p. 211.
- ↑ Ngamying, Keeratiburana & Thidpad 2014.
- ↑ Bauer 1990, p. 34.
நூல்கள்
[தொகு]- Foster, Brian (1973). "Ethnic Identity of the Mons in Thailand". Journal of the Siam Society 61: 203–226. http://www.siamese-heritage.org/jsspdf/1971/JSS_061_1i_Foster_EthnicIdentityOfMonsInThailand.pdf.
- Bauer, Christian (1991). "Notes on Mon Epigraphy". Journal of the Siam Society 79 (1): 31–84. https://thesiamsociety.org/wp-content/uploads/1991/03/JSS_079_1f_Bauer_MonEpigraphy.pdf.
- Bauer, Christian (1991). "Notes on Mon Epigraphy II". Journal of the Siam Society 79 (2): 61–80. https://thesiamsociety.org/wp-content/uploads/1991/03/JSS_079_2h_Bauer_MonEpigraphyII.pdf.
- Matisoff, James A. (1991). "Sino-Tibetan Linguistics: Present State and Future Prospects". Annual Review of Anthropology 20: 469–504. doi:10.1146/annurev.an.20.100191.002345. https://archive.org/details/sim_annual-review-of-anthropology_1991_20/page/469.
- McCormick, Patrick; Jenny, Mathias (2013). "Contact and convergence: The Mon language in Burma and Thailand". Cahiers de Linguistique Asie Orientale 42 (2): 77–117. doi:10.1163/19606028-00422P01.
- Swearer, Donald (September 20, 2002). "Buddhism in Southeast Asia". In Joseph Kitagawa (ed.). The Religious Traditions of Asia: Religion, History, and Culture. Routledge. pp. 119–142. ISBN 9780700717620.
- Ngamying, Dusittorn; Keeratiburana, Ying; Thidpad, Pairat (2014). "Mon Dance: Creating Standards to Continue the Performing Arts of Thai-Raman". Asian Culture and History (Canadian Center of Science and Education) 7 (1): 29–34. doi:10.5539/ach.v7n1p29.
- Jenny, Mathias (2013). "The Mon language: Recipient and donor between Burmese and Thai". Journal of Language and Culture 31 (2): 5–33. https://so03.tci-thaijo.org/index.php/JLC/article/view/20286/17624.