மோனோசைட்டு பரவல் அகலம்
மோனோசைட்டு பரவல் அகலம் (Monocyte distribution width) என்பது இரத்தத்தில் உள்ள மோனோசைட்டு எனப்படும் வெள்ளை இரத்த அணுக்களின் அளவு மற்றும் வடிவத்தில் ஏற்படும் மாறுபாட்டை இரத்த அணு எண்ணிக்கையியல் அடிப்படையில் அளவிடும் ஓர் ஆய்வகக் குறியீடாகும். அந்த அளபுரு கிடைக்குமாயின், அது வகையீட்டுப் பகுப்பாய்வுடனான வழக்கமான முழு இரத்த அணுக்கள் எண்ணிக்கையின் ஒரு பகுதியாகத் தெரிவிக்கப்படுகிறது.[1]
முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனையின் ஒரு பகுதியாக, தானியங்கி இரத்த அணு பகுப்பாய்வி மூலம் மோனோசைட்டு பரவல் அகலம் அளவிடப்படுகிறது. இது மோனோசைட்டு அணுக்களின் அளவுகளில் உள்ள வேறுபாட்டை கணக்கிடுகிறது.
பெக்மேன் கோல்டருக்காக 2019 ஆம் ஆண்டில் அவசர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு ஆரம்பகால சீழ்த்தொற்று குறிகாட்டியாக இந்த அளவுரு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.[2][3]
மோனோசைட்டு பரவல் அகலமானது, உடலில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் மற்றும் வீக்கங்களை கண்டறிய உதவும் இரத்த பரிசோதனைகளுடன் இணைந்து சீழ்த்தொற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கும், தவறான நேர்மறை இரத்த வளர்ப்பு முடிவுகளை வேறுபடுத்தி அறிவதற்கும் ஒரு குறியீடாகச் செயல்படுகிறது.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bentahar, Ahmed (Sep 1, 2022). "What is Monocyte Distribution Width" (in ஆங்கிலம்). Beckman Coulter.
- ↑ "Beckman Coulter's Early Sepsis Indicator Receives 510(k) Clearance from the U.S. Food and Drug Administration" (in en). www.beckmancoulter.com. April 18, 2019. https://www.beckmancoulter.com/about-beckman-coulter/newsroom/press-releases/2019/q2/2019-18-april-bec-esid-fda-clearance.
- ↑ "FDA Product Classification". FDA.
- ↑ Jo, Sung Jin; Kim, Sei Won; Choi, Jung-Hyun; Choi, Seoung Pill; Lee, Jehoon; Lim, Jihyang (20 December 2022). "Monocyte distribution width (MDW) as a useful indicator for early screening of sepsis and discriminating false positive blood cultures". PLOS ONE 17 (12). doi:10.1371/journal.pone.0279374. பப்மெட்:36538555. Bibcode: 2022PLoSO..1779374J.
- ↑ Paxton, Anne (18 July 2023). "For sepsis Dx, MDW biomarker brought into the mix - CAP TODAY". CAP Today. https://www.captodayonline.com/for-sepsis-dx-mdw-biomarker-brought-into-the-mix/. பார்த்த நாள்: 16 April 2024.