மோனோகால்சியம் பாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோனோகால்சியம் பாசுபேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Calcium dihydrogen phosphate
வேறு பெயர்கள்
Acid calcium phosphate
Calcium acid phosphate
Calcium diorthophosphate
Calcium biphosphate
Calcium superphosphate
Monobasic calcium phosphate
Monocalcium orthophosphate
Phosphoric acid, calcium salt (2:1)
இனங்காட்டிகள்
7758-23-8 Y
10031-30-8 (monohydrate)
ChemSpider 22862 N
InChI
  • InChI=1S/Ca.2H3O4P/c;2*1-5(2,3)4/h;2*(H3,1,2,3,4)/q+2;;/p-2 N
    Key: YYRMJZQKEFZXMX-UHFFFAOYSA-L N
  • InChI=1/Ca.2H3O4P/c;2*1-5(2,3)4/h;2*(H3,1,2,3,4)/q+2;;/p-2
    Key: YYRMJZQKEFZXMX-NUQVWONBAY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24454
SMILES
  • OP(=O)(O)[O-].OP(=O)(O)[O-].[Ca+2]
பண்புகள்
CaH4P2O8
வாய்ப்பாட்டு எடை 234.05 g/mol
தோற்றம் White powder
அடர்த்தி 2.220 g/cm3
உருகுநிலை 109 °C (228 °F; 382 K)
கொதிநிலை 203 °C (397 °F; 476 K) (decomposes)
2 g/100 mL
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.5176
கட்டமைப்பு
படிக அமைப்பு Triclinic
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை Non-flammable
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் Calcium pyrophosphate
ஏனைய நேர் மின்அயனிகள் மக்னீசியம் பாசுபேட்டு
டைகால்சியம் பாசுபேட்டு
Tricalcium phosphate
Strontium phosphate
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மோனோகால்சியம் பாசுபேட்டு (Monocalcium phosphate) என்பது Ca(H2PO4)2 (நீரற்ற மோனோகால்சியம் பாசுபேட்டுக்கு "AMCP" அல்லது "CMP-A" என்றழைக்கப்படுகிறது) மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது பொதுவாக மோனோஐதரேட்டாகவே ("MCP" அல்லது "MCP-M"), Ca (H2PO4)2·H2O காணப்படுகிறது. இரண்டு உப்புகளும் நிறமற்ற திடப்பொருள்கள் ஆகும். இவை முக்கியமாக சூப்பர் பாஸ்பேட் உரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் அவை பிரபலமான உணவுப் பொருள்களை புளிக்கச் செய்யும் காரணிகளாகவும் இருக்கின்றன.[1]

தயாரிப்பு[தொகு]

கால்சியம் ஐதராக்சைடை பாஸ்போரிக் அமிலத்துடன் வினைப்படுத்துவதன் மூலம் அடுமனைத் தொழிலிற்குத் தேவையான ஒப்பீட்டளவில் அதிக தூய்மையான விளைபொருள் தயாரிக்கப்படுகிறது:

Ca (OH) 2 + 2 H3 PO4 → Ca(H2 PO4)2 + 2 HO.

Ca(H2PO4)2 இன் மாதிரிகள் டைகால்சியம் பாசுபேட்டாக மாறுவதற்கு விழைகின்றன :

Ca (H 2 PO 4 ) 2 → Ca (HPO 4 ) + H 3 PO 4

பயன்பாடுகள்[தொகு]

உரங்களில் பயன்பாடு[தொகு]

சூப்பர் பாஸ்பேட் உரங்களானவை அமிலங்களுடன் பாசுபேட்டு பாறைகளை வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. பாஸ்போரிக் அமிலத்தைப் பயன்படுத்தி, ஃப்ளோராபடைட் Ca (H2PO4)2 ஆக மாற்றப்படுகிறது:

Ca 5 (PO 4 ) 3 F + 7 H 3 PO 4 → 5 Ca (H 2 PO 4 ) 2 + HF

இந்த திண்மப்பொருளானது மும்மை சூப்பர் பாஸ்பேட் என்று அழைக்கப்படுகிறது. உரங்களாகப் பயன்படுத்த ஆண்டுதோறும் பல மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மீதமுள்ள ஐதரோபுளோரைடு பொதுவாக சிலிகேட் தாதுக்களுடன் ஒன்றிணைந்த பாஸ்பேட் தாதுக்களுடன் வினைபுரிந்துஎக்சாஃப்ளூரோசிலிசிக் அமிலத்தை (H2SiF6 ) உருவாக்குகிறது. எக்ஸாஃப்ளூரோசிலிசிக் அமிலத்தின் பெரும்பகுதி அலுமினியத்தைப் பிரித்தெடுக்கும் செயல்முறைக்காக அலுமினிய ஃவுளூரைடு மற்றும் கிரையோலைட்டாக மாற்றப்படுகிறது.[1] அலுமினியத் தாதுவை அலுமினிய உலோகமாக மாற்றுவதற்கு இந்த பொருட்கள் மிக அவசியமாக உள்ளன.

சல்பூரிக் அமிலம் பயன்படுத்தப்படும்போது, விளைபொருளானது பாஸ்போஜிப்சம் (CaSO4· 2H2O) கொண்டிருக்கிறது மற்றும் இது ஒற்றை சூப்பர் பாஸ்பேட் என்று அழைக்கப்படுகிறது.[2]

புளிப்பு முகவராக பயன்பாடு[தொகு]

கால்சியம் டைஹைட்ரஜன் பாசுபேட்டு உணவுத் தொழிலில் ஒரு புளிப்பு முகவராக பயன்படுத்தப்படுகிறது, அதாவது அடுமனையில் சுட்ட பொருட்கள் உப்புவதற்கு காரணமாகிறது. அமிலத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால், ஒரு ஆல்காலி மூலப்பொருள், பொதுவாக சோடியம் பைகார்பனேட் (பேக்கிங் சோடா) அல்லது பொட்டாசியம் பைகார்பனேட் ஆகியவற்றுடன் இணைந்தால், அது கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஒரு உப்பை உற்பத்தி செய்கிறது . கார்பன் டை ஆக்சைடு வாயுவின் வெளிப்புற அழுத்தம் உயரும் விளைவை ஏற்படுத்துகிறது. ஒரு ஆயத்த ரொட்டி மாவில் இணைக்கும்போது, அமிலம் மற்றும் கார பொருட்கள் சரியான விகிதாச்சாரத்தில் சேர்க்கப்படுகின்றன, அவை ஒனறுக்கொன்று சரியாக நடுநிலைப்படுத்திக்கொணடு விளைபொருளின் ஒட்டுமொத்த pH ஐ கணிசமாக பாதிக்காது உள்ளது. நீரற்ற மோனோ கால்சியம் பாசுபேட்டு மற்றும் மோனோகால்சியம் பாசுபேட்டு ஆகியவை வேகமாக செயல்படுகின்றன, பெரும்பாலான கார்பன் டை ஆக்சைடை மாவுடன் கலந்த சில நிமிடங்களில் வெளியிடுகின்றன. இது கற்காரை வட்டு (அப்பம் போன்ற ஒரு வகை ரொட்டி) போன்ற உணவு தயாரிப்பில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இரட்டை செயல்பாடு உள்ள ரொட்டிப் பொடிகளில், MCP பெரும்பாலும் மெதுவாக செயல்படும் அமில சோடியம் அமில பைரோபாஸ்பேட்டுடன் இணைக்கப்படுகிறது.[3]

அமைப்பு[தொகு]

இச்சேர்மத்தின் அமைப்பானது CaPO4 இயைபினைக் கொண்ட அணுக்களின் தாள்களால் ஆனதாக உள்ளது. இந்த அமைப்பு புருசைட்டில் (CaHPO4.2H2O) குறிப்பிடப்பட்டவாறு நெளிதகட்டை ஒத்ததாகவும், ஜிப்சத்தில் கால்சியம் சல்பேட்டு (CaSO4) தாள்களைப் போன்றதாகவும் காணப்படுகிறது. இச்சேர்மத்தின் அமைப்பைப் பொறுத்தவரை இத்தாள்கள் பாசுபேட்டு அயனிகள் மற்றும் நீர் மூலக்கூறுகள் ஆகியவற்றால் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், முந்தைய புருசைட்டு, ஜிப்சம் போன்றவற்றில் இந்தத் தாள்கள் நீர் மூலக்கூறுகள் மட்டுமே இரண்டு தாள்கள் பிரிக்கக்கூடும்.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Klaus Schrödter, Gerhard Bettermann, Thomas Staffel, Friedrich Wahl, Thomas Klein, Thomas Hofmann "Phosphoric Acid and Phosphates" in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry 2008, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a19_465.pub3
  2. Gunnar Kongshaug et al. "Phosphate Fertilizers" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a19_421.pub2
  3. John Brodie, John Godber "Bakery Processes, Chemical Leavening Agents" in Kirk-Othmer Encyclopedia of Chemical Technology 2001, John Wiley & Sons. எஆசு:10.1002/0471238961.0308051303082114.a01.pub2