மோனா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோனா
சுவரிதழ்
நடிப்பு
படத்தொகுப்புஜெப்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுநவம்பர் 14, 2016 (2016-11-14)(AFI Fest)
நவம்பர் 23, 2016 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்103 நிமிடங்கள்[1]
நாடு
  • ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$150–175 மில்லியன்[2][3]
மொத்த வருவாய்$643.3 மில்லியன்[1]

மோனா (ஆங்கிலம்: Moana or Vaiana[4] or Oceania)[5] இது 2016 இல் வெளிவந்த கணிணியில் முப்பரிமான அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்ட படமாகும். இது வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கப்பட்டது. இதை வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டது. இது வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் 56வது அனிமேஷன் திரைப்படமாகும். இப்படத்தை ரோன் கிளமென்ட்சு மற்றும் ஜான் மஸ்கர் ஆகிய இரு இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். கிறிஸ் வில்லியம் மற்றும் ஸ்டான் ஹால் ஆகிய இருவரும் உதவி இயக்குநர்களாக பணி புரிந்தனர். இத்திரைப்படம் மோனா என்றப் பெண் மற்றும் மவுய் ஆகிய இரு பாத்திரங்களும் நிக்கோல் செர்சிங்கர், டுவெயின் ஜான்சன் ஆகியோரது குரலில் அறிமுகப்படுத்துகிறது. இப்படத்தில் லின்-மானுவல் மிராண்டா, தே வாகா மற்றும் மார்க் மான்சினா ஆகியோரால் எழுதப்பட்ட பாடல்களும், மான்சினா இசையமைத்த ஒரு ஆர்கெஸ்ட்ரா இசையும் இடம் பெற்றுள்ளன

இந்த படம் ஒரு பாலினீசியன் கிராமத்தின் தலைவரின் மகள் மோனாவின் கதையைச் சொல்கிறது, அவர் டெ ஃபிட்டி தெய்வத்துடன் ஒரு மாய நினைவுச்சின்னத்தை மீண்டும் ஒன்றிணைக்க கடலால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு தீவைத் தாண்டிப் போகும்போது, மோனா ஒரு புகழ்பெற்ற தேவதூதரான மவியைத் தேடியும், அவரது உதவியால் டெ ஃபிட்டிக்கு நினைவுச்சின்னத்தை திருப்பித் தந்து தனது மக்களைக் காப்பாற்றும் நம்பிக்கையில் பயணம் செய்கிறார்.

மோனா நவம்பர் 23, 2016 அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களையே, குறிப்பாக அதன் அனிமேஷன், இசை மற்றும் குரல் போன்றவற்றிகாக பாராட்டுகள் பெற்றது. இப்படம் உலகெங்கும் 643 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டியது. சோட்டோபியா என்றப் படத்துடன், வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் ஒரே ஆண்டில் இரண்டு திரைப்படங்களை வெளியிட்டது 2002 க்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். 89ஆவது அகாதமி விருதுகள் நிகழ்ச்சியில் இரு அகாதமி விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டது: சிறந்த அனிமேஷன் திரைப்படம் என்றப் பிரிவிலும், மற்றொன்று சிறந்த அசல் பாடலுக்கான "(ஹௌ ஃபார் ஐ வில் கோ)" அகாடமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.[6]

கதை[தொகு]

மோட்டுனாய் என்றத் தீவில் வசிக்கும் பொலினீசியா மக்கள் டெ ஃபிட்டி தெய்வத்தை வணங்கி வருகிறார்கள். அந்தக் கடவுள் கடலுக்கு உயிரைத் தருகிறது. ஒரு "பவுனமு" கல்லை அவளுடைய இதயமாகவும், அவளுடைய சக்தியின் மூலமாகவும் கொண்டுள்ளது.. படகோட்டுவதில் நிபுணனாரான மவுய், மனிதகுலத்திற்கு படைப்பின் சக்தியை திரும்பக் கொடுக்க திருடப்பட்ட இதயத்தைத் தேடிவருகிறார். இருப்பினும், டெ ஃபிட்டி சிதைந்து போகிறது, மேலும் இதயத்தைத் தேடும் டெ கோ என்ற மற்றொருவரால் மவுய் தாக்கப்படுகிறார்: டெ கோ, என்ற எரிமலை அரக்கனுடன் நடந்த ஒரு சண்டையில், மவுய் வானத்தில் தூக்கியடிக்கப்படுகிறார். அவருடைய மிகப்பெரிய மந்திரத் தூண்டில் மற்றும் இதயமும் கடலின் ஆழத்திற்குள் போய் விழுகிறது.

ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு மோட்டுனாயின் தலைவன் துயின் மகள் மோனாவைக் கடல் தேர்வு செய்கிறது. அதற்குள் துயி வந்து அவளை மீட்டுச் செல்கிறார், இதனால் அவள் இதயத்தை காப்பாற்றும் பணியை இழக்கிறாள். துய் மற்றும் மோனாவின் தாயார் சீனா, ஆகியோர் தீவின் தலைவியாக பதவி ஏற்பதற்கு மோனாவை தயார்படுத்துவதற்காக கடலில் இருந்து விலகி வைக்க முயற்சி செய்கிறார்கள். பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் வாழும் தீவில் தாவரங்கள் இறந்து, மீன் பிடிப்பு சுருங்குகிறது. தீவின் பாறைக்கு அப்பால் சென்று அதிகமான மீன்களை பிடிக்க எண்ணி மோனா நினைக்கிறாள். ஆனால் துய் அதைத் தடைசெய்கிறார். மோனா பாறைகளை வெல்ல முயற்சிக்கிறார், ஆனால் அலைகளால் வெல்லப்படுகிறார், மேலும் மோட்டுனுய் மீது கப்பல் உடைக்கப்படுகிறது.

பின்னர் மோனா மவுய் உதவியுடன் கடலினுள் நுழைந்து டெ ஃபிட்டி தெய்வத்தின் இதயத்தை காப்பாற்றி அவளிடமே வழங்குவதாக மீதிக்கதைச் செல்கிறது.

இதையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 "Moana (2016)". பாக்சு ஆபிசு மோசோ. August 28, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. Fleming Jr, Mike (March 24, 2017). "No. 12 'Moana' Box Office Profits – 2016 Most Valuable Movie Blockbuster Tournament". Deadline Hollywood. March 25, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. Rubin, Rebecca (November 1, 2018). "Thanksgiving Box Office: ‘Ralph Breaks the Internet’ Battles ‘Creed II,’ ‘Robin Hood’" (in en-US). Variety. https://variety.com/2018/film/box-office/box-office-wreck-it-ralph-creed-2-robin-hood-1203017249/. பார்த்த நாள்: November 4, 2018. 
  4. "Vaiana and Moana: a story of two Disney heroines". Novagraaf.
  5. Saunders, Tristram Fane (November 16, 2016). "Disney renamed its new film Moana 'to avoid confusion with porn star'" – www.telegraph.co.uk வழியாக.
  6. "Oscar Nominations: Complete List". Variety (Los Angeles: Variety Media). January 24, 2017. https://variety.com/2017/film/news/2017-oscar-nominations-academy-awards-nominees-1201968107/. பார்த்த நாள்: January 24, 2017. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனா_(திரைப்படம்)&oldid=2866567" இருந்து மீள்விக்கப்பட்டது