மோனல்
மோனல் நேவால் | |
---|---|
பிறப்பு | ராதாமோனல் நேவால் 26 சனவரி 1981 இந்தியா, தில்லி |
இறப்பு | 14 ஏப்ரல் 2002 (21 வயதில்) இந்தியா, சென்னை |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2000–2002 |
உறவினர்கள் | சிம்ரன் |
ராதாமோனல் நேவால் (Radhamonal Naval, 26 சனவரி 1981 - 14 ஏப்ரல் 2002) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை, இவர் தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை சிம்ரனின் தங்கை ஆவார். இவர் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்த பத்ரி (2001) உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் 2002 ல் தற்கொலை செய்து கொண்டார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர் தில்லியில் அசோக் நேவல் மற்றும் சாரதா ஆகியோருக்கு மகளாக மோனல் பிறந்தார். தில்லியில் பள்ளிப் படிப்பையும், மும்பையில் கல்லூரிப் படிப்பையும் மேற்கொண்டார். மிதிபாய் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவருக்கு சிம்ரன் மற்றும் ஜோதி என்ற இரண்டு சகோதரிகளும், சுமித் என்ற சகோதரரும் இருந்தனர்.[சான்று தேவை] [ மேற்கோள் தேவை ]
தொழில்
[தொகு]இவர் சில மாதிரி உரு, பேஷன் ஷோக்கள் மற்றும் அழகு போட்டிகளில் ஈடுபட்டார். பின்னர் திரைப்பட வாய்ப்புகளையும் பெற்றார். மோனலின் சகோதரி சிம்ரன் இந்த காலகட்டத்தில் இந்திய திரைப்படங்களில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தார். மற்றொரு சகோதரி ஜோதி 2003 இல் அறிமுகமானார்.[1] இவர் 2001 ஆம் ஆண்டில் அறிமுகமானார்.[2] இவர் தனது அறிமுக படமான பத்ரி படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் தமிழில் இவரது முதல் வெளியீடாக குணாலுடன் இணைந்து நடித்த பார்வை ஒன்றே போதுமே வெளியானது.[3]
இவர் இன்னும் சில படங்களில் தோன்றினார், பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸில் மிதமான வெற்றிகளையே ஈட்டின. இறக்கும் போது இவர் தாதாகிரி என்ற தெலுங்குத் திரைப்படத்தில் பணிபுரிந்தார், அதில் சுமனுக்கு ஜோடியாக நடித்தார் மேலும் படம் முழுமையடையாமல் இருந்தது.[4] இவர் இறந்த நாளில், இவரது புதிய திரைப்படமான பியே ஜன்மம் படத்தின் வெளியீட்டில் கலந்து கொண்டார், அதாவது "பேய் ஜன்மம்" என்பது பொருளாகும்.[5]
இறப்பு
[தொகு]இவர் 2002 ஏப்ரல் 14 அன்று தன் 21, சென்னையில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.[6][7] இவரது சகோதரி சிம்ரான் 2002 மே இல் தன் தங்கையின் தற்கொலைக்கு நடன இயக்குநர் பிரசன்னா சுஜித் காரணம் என்று குற்றம் சாட்டினார்.[8][9]
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | படம் | பங்கு | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2000 | இந்திரதணுஷ் | அபிசரிகா | கன்னடம் | அபிசரிகா என்று அறிமுகம் |
2001 | பார்வை ஒன்றே போதுமே | நீதா | தமிழ் | |
பத்ரி | மமதி | தமிழ் | ||
லவ்லி | மதுபாலா | தமிழ் | ||
சமுத்திரம் | பிரியா | தமிழ் | ||
இஸ்டம் | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
2002 | விவரமான ஆளு | தமிழ் | விருந்தினர் தோற்றம் | |
மா துஜே சலாம் | நர்கிஸ் | இந்தி | ||
சார்லி சாப்ளின் | திலோத்தமா | தமிழ் | ||
பேசாத கண்ணும் பேசுமே | ஸ்வேதா | தமிழ் | ||
2005 | ஆதிக்கம் | ஜான்சி | தமிழ் | இறந்த 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்டது |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Share on FacebookShare on Twitter (2003-06-17). "Simran's sister act - Times of India". Timesofindia.indiatimes.com. Retrieved 2016-12-01.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ https://news.google.com/newspapers?id=JAgkAAAAIBAJ&sjid=d3gFAAAAIBAJ&pg=4597,988923&dq=monal+simran&hl=en
- ↑ "rediff.com, Movies: Monal: I joined films because of Shah Rukh Khan!". Rediff.com. 2001-08-20. Retrieved 2016-12-01.
- ↑ "Telugu Cinema Etc". Idlebrain.com. 2002-04-14. Retrieved 2016-12-01.
- ↑ "rediff.com, Movies: For whom death tolls". Rediff.com. 2002-04-16. Retrieved 2016-12-01.
- ↑ Share on FacebookShare on Twitter (2002-04-14). "Tamil actress Monal commits suicide - Times of India". Timesofindia.indiatimes.com. Retrieved 2016-12-01.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ "The suicide syndrome!". The Hindu. 2002-04-18. Archived from the original on 2003-07-01. Retrieved 2016-12-01.
- ↑ "India News, Latest Sports, Bollywood, World, Business & Politics News - Times of India". Articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2012-07-12. Retrieved 2016-12-01.
- ↑ "It's a heavy price to pay". The Hindu. 2002-05-03. Archived from the original on 2003-07-04. Retrieved 2016-12-01.