மோதேசுவரி
மோதேசுவரி மாதா (Modheshwari) என்பவர் தேவி பார்வதி அல்லது மகாகாளியின் ஒரு அம்சமாகும். இவர் குசராத்தின் மோத் சமூகத்தின் குல தெய்வம் .
புராணக் கதை
[தொகு]பிராமணர்களும் வைசியர்களும் பிரார்த்தனை செய்தபோது அவர்களைத் தொந்தரவு செய்வதன் மூலம் கர்ணத் என்ற அரக்கன் இப்பகுதியில் அழிவை ஏற்படுத்தி வந்ததாக நம்பப்படுகிறது. அசுரனிடமிருந்து பாதுகாப்பு தேடி, பிராமணர்களும் வைசியர்களும் ஒன்றாக பார்வதி மாதாவைச் சந்தித்தனர். அவர்களின் குறைகளைக் கேட்டதும், அவர் கோபமடைந்தார். அவருடைய வாயிலிருந்து ஒரு சுடர் வெளிப்பட்டது. அச்சுடர் மோதேசுவரி தேவி என்று அழைக்கப்படும் அவருடைய ஓர் அம்சத்தைப் பெற்றெடுத்தது. மோதேசுவரி தேவி அசுரனைக் கொன்று, மோத் சமூகத்திற்குத் தன்னுடைய ஆசீர்வாதங்களை வழங்கினார். தன்னை வணங்குபவர்களை எப்போதும் பாதுகாப்பதாகச் சபதம் செய்தார். இந்தத் தேவியின் அவதாரம் பதினெட்டு கைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கையிலும் ஓர் ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவற்றில் மிகவும் முக்கியமானது திரிசூலம்.[1]
உருவவியல்
[தொகு]தேவி பதினெட்டு கரங்களுடன் சித்தரிக்கப்படுகிறார். ஒவ்வொரு கையிலும் திரிசூலம், கடாகா, தல்வார், கமண்டலம், சங்கா, கட, பாஷ், தண்டா, டமரு உட்பட ஒவ்வொரு ஆயுதம் உள்ளது.
குல தெய்வம்
[தொகு]மோத் சமூகத்தின் குல தெய்வமாக மோதேசுவரி தேவி உள்ளார். இதில் நான்கு குழுக்கள் உள்ளன: பிராமண மோத் பிராமணர்கள், படேல் மோத் படிதார், மோத் வைசியர், மோத் மோடி, மோத் சத்திரியர், இவர்கள் அனைவரும் மொதெராபகுதியில் வசித்து வந்தனர். மோத் மக்கள் நவீன குசராத்து, இராசத்தான் மாநிலங்களின் பல பகுதிகளில் வசிக்கின்றனர். மோத் பிராமணர்களின் பொதுவான குடும்பப்பெயர் திரிவேதி. மோதேசுவரி மாதா பிரதமர் நரேந்திர மோதியின் குலதெய்வமாகும்.
கோவில்கள்
[தொகு]மோதேசுவரி தேவியின் பழங்காலக் கோவில்களில், ஒன்று மொதேராவில் அமைந்துள்ளது.[2] இது இந்த இடம் தெய்வத்தின் பெயரிலிருந்து பெயரைப் பெற்றது.[3] புகழ்பெற்ற சூரியக் கோயிலின் இடிபாடுகளுக்கு அருகில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இங்குப் படிக் கிணற்றின் கீழே மற்றொரு வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது.[3]
குசராத்தின் பதான் வட்டத்தில் உள்ள சனசாமாவில் மற்றொரு பழமையான கோவில் அமைந்துள்ளது.[2]
அகமதாபாது, பரூச், பவநகர், புஜ், இம்மத்நகர், ஜபுவா, கெத்பிரம்மா, சின்கோர், தேரா, உஜ்ஜைன், வடோதரா ஆகிய இடங்களில் தேவியின் குறிப்பிடத்தக்கக் கோவில்கள் உள்ளன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Modheswari Ma's Pragatya". Archived from the original on 2022-12-08. Retrieved 2013-06-09.
- ↑ 2.0 2.1 Gujarat State Gazetteers: Mehsana - Page xxiv
- ↑ 3.0 3.1 Sajnani, Manohar (2001). Encyclopaedia of Tourism Resources in India, Volume 2 By Manohar Sajnani. p. 112. ISBN 9788178350189.
- ↑ "Temples of Modheswar". Archived from the original on 2019-03-20. Retrieved 2013-06-09.