மோதிலால் ஆசுவால்
மோதிலால் ஆசுவால் | |
|---|---|
| பிறப்பு | பத்ரு, சிவானா, பார்மர், ராஜஸ்தான் |
| இருப்பிடம் | மும்பை |
| படித்த கல்வி நிறுவனங்கள் | பத்ரு அரசுப்பள்ளி, புனேவின் முதன்மை நிதி அலுவலர் இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் |
| பணி | மோதிலால் ஆசுவால் குழுவின் இணை - விளம்பரதாரர், தலைவர் & முதன்மை செயல் அலுவலர் |
| வலைத்தளம் | |
| http://www.motilaloswal.com | |
மோதிலால் ஆசுவால் (Motilal Oswal) இவர் ஓர் இந்தியத் தொழிலதிபராவார். ராஜஸ்தானில் சமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் 1987 ஆம் ஆண்டில் ராம்தியோ அகர்வாலுடன் இணைந்து நிறுவிய மோதிலால் ஆசுவால் நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.[1]
விருதுகள்
[தொகு]1995 - 1999 இலிருந்து 5 வருட காலத்திற்கு நாட்டில் அதிக வருமான வரி செலுத்துபவர்களில் ஒருவராக இருந்தற்காக இவருக்கு இந்திய அரசு "இராட்டிரிய சம்மன் பத்ரா" என்ற விருதினை வழங்கியது.[2]
இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் இவருக்கு "நிதிச் சேவைகளில் சிறந்த வணிக சாதனையாளர்" என்ற விருதை வழங்கியது.[3] புதுதில்லியின் பொருளாதார ஆய்வுகள் நிறுவனம் நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் ஆற்றியதற்காக "உத்யோக் ரத்தன் விருது" இவருக்கு வழங்கியது.[4]
பிராங்க்சைசிங் வேர்ல்ட் என்ற இதழ் வழங்கிய "தி ஹால் ஆஃப் ஃபேம் ஃபார் எக்ஸலன்ஸ் ஃபார் பிராங்க்சைசிங்" இல் இவருக்கு ஒரு பதவியும் வழங்கப்பட்டுள்ளது.[5] அரிமா சங்கத்தின் மூலம் இவர் "அர்த்தசாத்திரத்தின் வெற்றியாளர்" என்றும், இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் மூலம் "நிதிச் சேவைகளில் சிறந்த வணிக சாதனையாளர்" விருதையும் பெற்றார்.[6] ஜீ வணிக நிறுவனம் ஏற்பாடு செய்த 'இந்தியாவின் சிறந்த சந்தை ஆய்வாளர் விருதுகள் 2009' என்ற நிகழ்ச்சியில் இவருக்கு "இந்திய மூலதன சந்தைக்கு சிறப்பு பங்களிப்பு" விருது வழங்கப்பட்டது.[7]
சாதனைகள்
[தொகு]1995 - 1999 இலிருந்து 5 வருட காலத்திற்கு நாட்டில் அதிக வருமான வரி செலுத்துபவர்களில் ஒருவராக இருந்தற்காக இவருக்கு இந்திய அரசு "இராட்டிரிய சம்மன் பத்ரா" என்ற விருதினை வழங்கியது
அறங்காவலர்
[தொகு]இவர் பல்வேறு சமூக அமைப்புகளுடன் தொடர்பிலிருக்கிறார். இவர் சமண சர்வதேச வர்த்தக அமைப்பின் தலைவராகவும், ராஜஸ்தான் வித்யார்த்தி கிரிகாவின் "அகர்வால்-ஆசுவால் சத்ரவாக்களின்" அறங்காவலராகவும் உள்ளார்.[8]
படைப்பு
[தொகு]தி எசன்ஸ் ஆஃப் பிசினஸ் & மேனேஜ்மென்ட் மற்றும் தி எசன்ஸ் ஆஃப் லைஃப் என்ற இரண்டு நூல்களை இவர் எழுதியுள்ளார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ " Motilal Oswal online trading" பரணிடப்பட்டது 2010-04-23 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2010-04-24.
- ↑ " Mr. Motilal Oswal was awarded the “Rashtriya Samman Patra” by Central Board of Direct Taxes for a period of 5 years from 1995 to 1999" பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2009-03-09.
- ↑ "ICAI felicitates Motilal Oswal - Financial Express - New Delhi - 05-Feb-2009"
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2012-08-03. Retrieved 2012-05-30.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link) - ↑ [1]
- ↑ [2]
- ↑ "Zee Business conclave on financial markets begins in Mumbai" பரணிடப்பட்டது 2012-09-13 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Rajasthan Vidyarthi Griha".