உள்ளடக்கத்துக்குச் செல்

மோண்டிசெலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோண்டிசெலைட்டு-கிர்சுச்டைனைட்டு
Monticellite-Kirschsteinite
அரை பளபளப்பான பழுப்பு நிற வெசுவியானைட்டு படிகங்களின் மீது அமைந்த, 1 செ.மீ.க்கு மேல் நீளமுள்ள கூர்மையான, மோண்டிசெல்லைட்டுப் படிகங்கள்
பொதுவானாவை
வகைநெசோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுCa(Mg,Fe)SiO4
இனங்காணல்
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
பிளப்பு{010}
மோவின் அளவுகோல் வலிமை5.5
ஒப்படர்த்தி3.05 – 3.27
ஒளிவிலகல் எண்α = 1.638 – 1.654,
β = 1.646 – 1.664,
γ = 1.650 – 1.674
உருகுநிலை1503 ° செல்சியசு
மேற்கோள்கள்[1]

மோண்டிசெலைட்டு (Monticellite) Ca(Mg,Fe)SiO4என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் மோண்டிசெலைட்டு கனிமத்தை Mtc – Kir[2]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

கிர்சுச்டைனைட்டு என்ற பெயராலும் மோண்டிசெலைட்டு கனிமம் அறியப்படுகிறது.[3] ஆலிவைன் கனிமக் குழுவில் உள்ள சாம்பல் சிலிக்கேட்டு தாதுவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. முறையே CaMgSiO4 மற்றும் CaFeSiO4 ஆகிய சேர்மங்களைக் கொண்டுள்ளது. பெரும்பாலான மோண்டிசெல்லைட்டுகள் தூய மெக்னீசியம் இறுதி-உறுப்பு அமைப்பைக் கொண்டுள்ளன. ஆனால் அரிதான பெரோன் மோண்டிசெல்லைட்டுகளும் மெக்னீசியோ-கிர்சுச்டைனைட்டும் இரும்பு இறுதி உறுப்பினராக 30 முதல் 75 மோல்.% வரை காணப்படுகின்றன. தூய கிர்சுச்டைனைட்டு கனிமப் படிகம் செயற்கை அமைப்புகளில் மட்டுமே காணப்படுகிறது. இத்தாலிய நாட்டு கனிமவியலாளர் தியோடோரோ மோண்டிசெல்லி (1759–1845) என்பவரின் நினைவாகப் மோண்டிசெலைட்டு எனப் பெயரிடப்பட்டது. கிர்சுச்டைனைட்டு கனிமம் செருமன் நாட்டுப்புவியியலாளர் எகான் கிர்சுச்டைனின் நினைவாக கிர்சுச்டைனைட்டு எனப் பெயரிடப்பட்டது.

குழுவின் மற்ற கனிமங்களைப் போலவே, மோண்டிசெலைட்டு மற்றும் கிர்சுச்டைனைட்டு ஆகியவையும் படம் 1 இல் காட்டப்பட்டுள்ளபடி நேர்ச்சாய்சதுர அலகு செல்களைக் கொண்டுள்ளன (இடக் குழு Pbnm). இரும்பு மற்றும் மக்னீசியம் அயனிகள் M1 தலைகீழ் தளங்களில் அமைந்துள்ளன. கால்சியம் அயனிகள் ஆடித் தளங்களில் M2 தளத்தை ஆக்கிரமித்துள்ளன. கால்சியம் இல்லாத ஆலிவைன்களான பார்சுடெரைட்டு மற்றும் பாயலைட்டு கனிமங்களை விட மோண்டிசெலைட்டின் அலகு செல் ஓரளவு பெரியதாகும்.

பார்சுடெரைட்டு மற்றும் பாயலைட்டு கனிமங்களின் அலகு செல்களின் அளவுகள்

a = 0.4815 நானோமீட்டர்
b = 1.108 நானோமீட்டர்
c = 0.637 நானோமீட்டர்

மோண்டிசெலைட்டு கனிமத்தின் அலகு செல் அளவுகள்

a = 0.4875 நானோமீட்டர்
b = 1.1155 நானோமீட்டர்
c = 0.6438 நானோமீட்டர்

படக் காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோண்டிசெலைட்டு&oldid=4248160" இலிருந்து மீள்விக்கப்பட்டது