மோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மோடி (சக்தியின் பெருமையைக் குறிக்கும் சொல்)'

உலகில் உள்ள உயிர்களின் தோற்றத்திற்கு காரணம் சக்தி வடிவாகிய பெண்ணே. அவளைக் குறிக்கும் பொழுது தாய் தெய்வ வழிபாட்டிற்கு தாய்மையும், வீரமும் நிறைந்தவள் கொற்றவை.

சக்தியின் பெருமையைக் குறிக்கும் சொற்கள்[தொகு]

சூடாமணி நிகண்டு, பிங்கள நிகண்டு, திவாகர நிகண்டு போன்றவை மோடி, காாி தாய், கொற்றி, மாாி, சூாி, வருகி, முதணங்கு, காடுகாள் என்ற பெயர்களால் குறிக்கின்றனர். மோடி என்ற சொல்

மோடு = உடல் (பாட்டும் தொகையும்)

மோடு = வயிறு, கருப்பை, உயர்ச்சி, பெருமை (சொல் அதிகாரம் நச்சினார்க்கினியர்)

மோடு = முகடு, உயர்ச்சி, பிளப்பு, பெருமை, மூடத்தனம் (கெளரா தமிழகராதி)

மோடு = மேடு. வயிறு (கதிரை வேற்பிள்ளை அகராதி)

மோடு = மேடேந்தாிகை(பொிய வயிறு உடையவள் (லாவண காண்டம் பெருங்கதை)

மோடி[தொகு]

மோடி = காடுகாள் மகுடி, பிணக்கு (அடிப்படை தமிழ்ச்சொல் முதலி நிகண்டு

மோடி = காடுகாள் துர்க்கை ( சமயச் சொல் அகராதி)

மோடி = காடுகாள் பிணக்கு, மேட்டிமை, மெளடி, வேடிக்கை, வனத்தில் வாழும் காளி (கதிைர வேற்பிள்ளை அகராதி)

இலக்கியச் சான்று[தொகு]

பைம்பூட்சேய் பயந்த மா மோட்டுத் துணங்கை என்ற வாிகள் அவுணரை செற்ற முருகப் பெருமானை பெற்ற பொிய வயிறுடைய சக்தி எனக் கூறுகிறது.

"கையாிய மண்டைக் கண் மோடி காவலர்க்குத் தான் முந்துறும்" மண்டை ஓட்டை கையில் உடைய பொிய வயிறு உடைய கொற்றவை வஞ்சி வேந்தனுக்காக தானே முன் எழுந்தாள்.


பேய் மகளிர்[தொகு]

மோடு என்ற சொல்லானது சக்தியைச் சார்ந்துள்ள பேய் மகளிருக்கும் வழங்கப்பட்டது.. "மோட்டுக் கெழு செலவினஞ்சுவரு பேய் மக்கள்" என்ற திருமுருகாற்றுப் பாடல் வாிகள் முருகனின் வெற்றியைப் பாடி பேய் மகளிர் துணங்கைக் கூத்து ஆடுவகதைக் கூறுகிறது.


நாட்டுப்புற விளையாட்டு[தொகு]

கிராமப்புறங்களில் விளையாடும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. மோடி ஆட்டத்தில் ஒருவன் மணல் மேட்டுக்குள் ஒரு முட்டையை மறைத்து வைத்து ஏழுவாிகளை வரைவான். அந்த முட்டையைக் கண்டுபிடிக்க முயல்பவனுக்கு மோடி என்று பெயர். ஆண்களால் உணர்ந்துகொள்ள முடியாத, வெல்ல முடியாத பெண்ணின் மக்கட் பேச்சுத் திறனைக் குறிக்கும் மோடி என்ற சொல் பிற்காலத்தில் வேடிக்கை செருக்கு, ஆடம்பரம், வஞ்சகம், என்ற பொருளில் வழங்கப்படுகிறது என்பதை நடைமுறையில் உணரலாம்.

பாரதியாரும் கண்ணன் என் காதலன் என்னும் பாடலில் "மோடி கிறுக்குதடி" என்று பாடியுள்ளார். இங்கு மோடி என்பது புாியாத மயக்கம் என்னும் பொருள் பயன்படுத்தப்படுகிறது. காலவெள்ளத்தில் நாற்றம் என்னும் உயர்ந்த பொருளுடைய சொல் பொருள் மாற்றம் பெற்றதைப் போல மோடி என்ற சொல்லும் வழக்கொலிந்து பொருள் மாற்றம் பெற்றுள்ளதாகக் கூறுவர்.

மேற்கோள்கள்[தொகு]

1. புறப்பொருள் - 5வது பாடல்

2. திருமுருகாற்றுப்படை

3. பாரதியார் கவிதைகள்- கண்ணன் பாட்டு

வெளி இணைப்பு[தொகு]

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோடி&oldid=2381264" இருந்து மீள்விக்கப்பட்டது