உள்ளடக்கத்துக்குச் செல்

மோசெல்லாண்ட்சுபெர்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோசெல்லாண்ட்சுபெர்கைட்டு
Moschellandsbergite
பொதுவானாவை
வகைஉலோகங்களும் உலோகமிடை கலப்புலோகமும்
வேதி வாய்பாடுவெள்ளி இரசக்கலவை, Ag2Hg3
இனங்காணல்
நிறம்வெண்மை, கறைபடிந்த சாம்பல்
படிக அமைப்புசம அளவு
பிளப்புநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை3.5
மிளிர்வுஉலோகப் பளபளப்பு
ஒப்படர்த்தி13.48
மேற்கோள்கள்[1][2][3][4]

மோசெல்லாண்ட்சுபெர்கைட்டு (Moschellandsbergite) என்பது Ag2Hg3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் மோசெல்லாண்ட்சுபெர்கைட்டு கனிமத்தை Mlb[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

பாதரசத்தின் வெள்ளி-வெள்ளை பாதரசமும் வெள்ளியும் சேர்ந்து உருவான ஓர் அரிய சமநீள கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது.

முதன்முதலில் 1938 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. செருமனியின் ரைன்லேண்ட்-பாலடினேட்டின் ஓபர்மோசலுக்கு அருகிலுள்ள மோசெல்லாண்ட்சுபெர்கு மலையின் நினைவாக மோசெல்லாண்ட்சுபெர்கைட்டு எனப் பெயரிடப்பட்டது.[3][6] மெட்டாசின்னாபார், சின்னாபார், பாதரச வெள்ளி, டெட்ராகீட்ரைட்டு-டென்னாண்டைட்டு, பைரைட்டு, சுபாலரைட்டு மற்றும் சால்கோபைரைட்டு ஆகியவற்றுடன் இணைந்து தோன்றும் குறைந்த வெப்பநிலை நீர் வெப்ப கனிமமாகக் கருதப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mineralienatlas
  2. 2.0 2.1 Mineral Handbook
  3. 3.0 3.1 Mindat
  4. Webmineral
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  6. American Geological Institute (1997). Dictionary of Mining, Mineral, and Related Terms. Alexandria, Virginia: Birkhäuser. p. 356. ISBN 0-922152-36-5.