மோக்கா மாவட்டம்
இதே பெயரில் பஞ்சாபில் உள்ள மாவட்டத்தைப் பார்க்க, மோகா மாவட்டம் கட்டுரையைப் பார்க்கவும்.
மோக்கா Moka | |
---|---|
மொரீசியசு தீவின் வரைபடம் மோக்கா மாவட்டம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது | |
நாடு | மொரீசியசு |
அரசு | |
• வகை | மாவட்ட மன்றம் |
• தலைவர் | திரு. கோலாம் சந்திரதாத் |
• துணைத் தலைவர் | காப்ரியல் இரசல் |
பரப்பளவு | |
• மொத்தம் | 230.5 km2 (89.0 sq mi) |
மக்கள்தொகை (2012)[2] | |
• மொத்தம் | 81,820 |
• தரவரிசை | மொரீசியசில் ஏழாவது இடம் |
• அடர்த்தி | 350/km2 (920/sq mi) |
நேர வலயம் | ஒசநே+4 (MUT) |
ஐஎசுஓ 3166 குறியீடு | MU-MO (Moka) |
மோக்கா மாவட்டம் (Moka District) மொரீசியசு தீவின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டமாகும். 230.5 கி.மீ2 பரப்பளவில் மோக்கா மாவட்டம் விரிந்துள்ளது. 31 திசம்பர் 2012 இன் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இங்கு 81820 நபர்கள் வாழ்கின்றனர்[2]. இம்மாவட்டத்தின் கிழக்கே பிலாக் மாவட்டமும், வடக்கே பம்பிளிமாசசு மாவட்டமும், தெற்கே கிராண்ட் போர்ட் மாவட்டமும் மேற்கே பிலெய்ன்சு வில்ஹெம்சு மாவட்டமும், வட மேற்கே போர்ட் லூயிசு மாவட்டமும் அமைந்துள்ளன.
மக்கள்தொகை
[தொகு]அண்மையக் கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ 80,000 மக்கள் இம்மாவட்டத்தில் வசிக்கின்றனர். இவர்களில் ஏறத்தாழ 50,000 பேர் கிரியோல் மொழியைத் தாய்மொழியாகவும், ஏனையோர் போச்புரி, தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளைத் தாய்மொழியாகவும் பேசுகின்றனர்.
மோக்கா மாவட்டம் பல்வேறு மண்டலங்களை உள்ளடக்கியுள்ளது. சில மண்டலங்கள் மேலும் துணை நகரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன[2][3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-04. பார்க்கப்பட்ட நாள் 2016-12-04.
- ↑ 2.0 2.1 2.2 Ministry of Finance & Economic Development (2012). ANNUAL DIGEST OF STATISTICS 2012. 31 December. Government of Mauritius. p. 22. http://statsmauritius.gov.mu/English/Publications/Documents/Regular%20Reports/annual%20digest/annualdig12.pdf. பார்த்த நாள்: 20 October 2013.
- ↑ Statistic office of Mauritius (2011). Housing and population Census 2011. Government of Mauritius. http://www.gov.mu/portal/goc/cso/report/census11v1/volum1.pdf. பார்த்த நாள்: 12 September 2012.