மோகன சிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மோகன சிலை (Mohana Silai) தமிழ் மொழியில் சாண்டில்யன் என்பவரால் எழுதப்பட்ட சரித்திர நாவலாகும்.[1] இந் நாவல் தமிழ் வார இதழான குங்குமத்தில் தொடர்கதையாக 1981ம் வருடம் வெளிவந்தது. விஜயாலாய சோழர் காலத்து பிண்ணணியைக் கொண்டது. வஞ்சியையும் தஞ்சாவூரையும் கைப்பற்றி சோழர்களின் செங்கோல் நிலைநாட்டிய வரலாற்றை எடுத்துரைக்கிறது.

கதாப்பாத்திரங்கள்[தொகு]

இந் நாவலில், விஜயாலய சோழருடன், ஆதித்ய சோழன், தாணுரவி சேர மன்னன், வானசாஸ்திரி (வானிலையாளர்) சங்கரநாராயணன் மற்றும் பெரும்பிடுகு முத்தரையர் போன்ற வரலாற்று கதாபாத்திரங்களுடன் கற்பனை கதாபாத்திரங்களான இதயகுமரன், அச்சுதபெரியார், இளையவேல், கண்ணழகி மற்றும் தேவி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

கதைச் சுருக்கம்[தொகு]

இதயகுமாரன் சேர நாட்டின் இரண்டாவது தலைநகரமான வஞ்சி நகருக்குள் நுழைவதிலிருந்து கதை தொடங்குகிறது. அவன் சோழ நாட்டிலிருந்து வருவதை அறிந்த காவலர்கள் அவனை உள்ளே செல்ல விடாமல் தடுக்கின்றனர். ஆனால் இதயகுமாரன் தனது புரவியின் உதவியால் வேகமாக நகரினுள் சென்று விடுகிறான். அங்குள்ள காட்டில் யானையின் தந்தத்தால் ஆன அழகிய பெண் சிலையைப் பார்த்து அதை எடுக்கிறான். அப்போது அங்குள்ள காவலர்களை பார்த்து சிலை திருடிய குற்றத்திற்காக கைது செய்யும்படி ஆணையிடும் சேர அரசகுமாரியின் குரல் கேட்கிறது. இதயகுமாரன் அரசகுமாரியை பிணைக்கைதியாக வைத்து அந்தச் சூழ்நிலையை சமாளித்து தப்பிக்கிறான். பிறகு அரசகுமாரியை விடுவித்து அவளின் பிறப்பு ரகசியம் இரத்தினக் கொல்லன் அச்சுதபேரையர் வீட்டில் இன்று தெரியும் எனக் கூறுகிறான்.

அரசகுமாரி இரத்தினக்கொல்லன் அச்சுதபேரையர் வீட்டில் ஒரு அந்நியரை சந்திக்கிறாள். இதயகுமாரனும் அங்கே சிலையோடு வருகிறான். அச்சுதபேரையர் அரசகுமாரியிடம் அவர் விஜயாலயன், அவளுடய தந்தை என்றும் அறிமுகப்படுத்துகிறார். மேலும் அரசகுமாரியை விஜயாலயன், கண்ணழகி என்று அழைக்கிறார். விஜயாலயன் தற்போது தான் வஞ்சியைக் கைப்பற்றியதாகக் கூறுகிறார். அந்தச் சிலை புகழ் பெற்ற சோழ மன்னன் இளம்சேட்சென்னியால் உருவாக்கப்பட்டது என்று விவரிக்கிறார். மேலும் உறையூரைச் சுற்றியுள்ள இடங்களுக்கு விஜயாலயன் குறுநில மன்னராக இருந்தபோது, அரசகுமாரியின் தாயார் பூதேவியை மணந்து கொண்டதாகவும், அச்சுதபேரையர் முதன் மந்திரியாக இருந்ததையும் விளக்குகிறார்.

ஒருசமயம், விஜயாலயன், அச்சுதபேரையருடன் பாண்டிய நாட்டில் இருந்தபோது, களப்பிரர்களின் வழிவந்த முத்தரையர்கள் உறையூருக்குள் நுழைந்து சோதனை செய்தனர். மேலும் பூதேவியை கடத்த முயன்றனர். பூதேவி தன்னை தற்காத்துக்கொள்ள குத்துவாளால் தன்னை மாய்த்துக்கொண்டாள். சோதனையாளர்கள் மூன்று வயதே நிரம்பிய கண்ணழகியை உடன் எடுத்துச் சென்றனர். விஜயாலயச் சோழன் நாடு திரும்பியதும் முத்தரையர்களை ஒழிப்பேன் என்று சபதம் செய்தார். ஒரு வாரம் சென்ற பின்னர், சோழ மன்னர் விஜயாலயன் காஞ்சிக்கு சென்று பாண்டிய மன்னரைச் சந்தித்து தனது நாட்டை நிலப்பிரபுத்துவமாக்கும்படிக் கேட்டுக்கொண்டார். பல்லவ மன்னரும் சம்மதித்து விஜயாலயனை தனது படைகளுக்கு தளபதியாக நியமித்தார். விஜயாலயன் களப்பிரர்களின் மீது படை எடுத்து பல வெற்றிகளை அடைந்தான். மேலும் அரசகுமாரியை தேடும் பணியில், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வஞ்சியில் காணப்பெற்றான். உடனே அச்சுதப்பேரயையரை அனுப்பியதன் மூலம் வஞ்சி சோழர்களின் கைக்கு வந்தது.

பின்னர் ஆதித்யா மற்றும் இதயகுமாரன் முத்தரையர்களின் கோட்டைக்குள் (செந்தலை) ஊடுருவி, அங்கு அவர்கள் பெரும்பிடுகு முத்தராயர், அவரது மகன் மாறன் பரமேசுவரன் முத்தராயர் மற்றும் மகள் தேவி ஆகியோரை சந்திக்கிறார்கள். பின்னர் அவர்கள் தஞ்சாவூர் மற்றும் செந்தலை சோழர் படையெடுப்புக்கான திட்டத்தைத் திட்டமிடுகின்றனர். தஞ்சாவூர் மற்றும் செந்தலையை விஜயாலயன் கைப்பற்றி தலைநகராக தஞ்சாவூரை மாற்றுகின்றான்.

ஆதாரங்கள்[தொகு]

  1. [1]

வெளி இணைப்புகள்[தொகு]

குட் ரீடர்ஸ் தளம் மோகன சிலை

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன_சிலை&oldid=2977619" இருந்து மீள்விக்கப்பட்டது