மோகன் வர்கீஸ் சுங்கத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோகன் வர்கீஸ் சுங்கத்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
பதவியில்
1 ஏப்ரல் 2014 – 2 டிசம்பர் 2014
முன்னையவர்ஷீலா பாலகிருஷ்ணன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு 10, 1956 (1956-03-10) (அகவை 68)
திருச்சூர், கேரளா, இந்தியா
தேசியம்இந்தியர்
துணைவர்ஷீலா ராணி சுங்கத்
கல்விஇ. ஆ. ப
இணையத்தளம்தமிழ்நாடு தலைமை செயலகம்

மோகன் வர்கீஸ் சுங்கத் (Mohan Verghese Chunkath) இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். 1978-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1][2][3]

கல்வி மற்றும் விளையாட்டு[தொகு]

இவர் விலங்கியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஸ்க்ராபிள் விளையாட்டில் தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர். இந்த விளையாட்டில் உலக உளவில் 21-வது இடத்தில் இருந்தவர்.

அரசுப் பணிகள்[தொகு]

1978 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார்.1980-ஆம் ஆண்டு நில நிர்வாகத் துறை துணை ஆட்சியராகவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்புச் செயலாளராகவும் பணியைத் தொடங்கினார். தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும், தொழில் துறை இணைச் செயலாளராகவும், வேளாண்மைத் துறை இயக்குநராகவும், உயர் கல்வித் துறை செயலாளராகவும், எரிசக்தித் துறையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவராகவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலாளராகவும் பொறுப்புகளை வகித்துள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், பணி ஓய்வு பெறுவதை அடுத்து, தமிழகத்தின் 42-வது தலைமைச் செயலாளராக 1 ஏப்ரல் 2014 அன்று பொறுப்பேற்றார். 2 டிசம்பர் 2014 அன்று தலைமைச்செயலாளர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழகத்தின் 42-வது தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத். தி இந்து தமிழ் நாளிதழ். 29 மார்ச் 2014. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. புதிய தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத்: ஷீலா பாலகிருஷ்ணனுக்கு ஆலோசகர் பதவி. தினமணி நாளிதழ். 29 மார்ச் 2014. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. Mohan Chunkath appointed as TN Chief Secretary. The Hindu. 28 March 2014.
  4. தமிழக அரசின் தலைமைச் செயலர் மாற்றம். பிபிசி தமிழ். 2 டிசம்பர் 2014. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்_வர்கீஸ்_சுங்கத்&oldid=3855502" இலிருந்து மீள்விக்கப்பட்டது